ட்விட்டரில் விரைவில் வீடியோ & ஆடியோ கால் வசதி.. மொபைல் எண் இல்லாமல் உலகில் எந்த மூலைக்கும் பேசலாம்!
வாஷிங்டன்: பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகளவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். தினசரி பல கோடி பேர் இந்த ட்விட்டரை ஒவ்வொரு நாளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ட்விட்டர் தளத்தைக் கடந்த ஆண்டு எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.

அதன் பிறகு ட்விட்டர் தளத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதலில் நிறுவனத்தை மறுசீரமைக்க முடிவு செய்த எலான் மஸ்க் பல்வேறு கட்டங்களில் சுமார் 75% நபர்களை டிஸ்மிஸ் செய்தார்.
தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் பெயரை அவர் எக்ஸ் என்றும் பெயர் மாற்றம் செய்தார். இப்போது நாம் எக்ஸ் டாட் காம் என டைப் செய்தாலும் அது ட்விட்டர் தளத்திற்கே நம்மை அழைத்து வருகிறது. எலான் மஸ்க் இதைத் தனது கனவு பிராஜ்க்டாக கருதுகிறார்.
இதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் அவர் ட்விட்டர் தளத்தில் பல விஷயங்களை முயன்று வருகிறார். இதில் பெரும்பாலான விஷயங்களுக்குப் பயனாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இல்லை என்பதே உண்மை. இந்தச் சூழலில் ட்விட்டரில் வரும் ஒரு அட்டகாசமான வசதி குறித்து முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

விரைவில் ட்விட்டர் தளத்தில் ஆடியோ மற்றும் வீடியோ காலை கொண்டு வர உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதன் மூலம் மொபைல் நம்பர் இல்லாமலேயே நாம் எந்தவொரு நபருடனும் பேச முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப், டெலிகாரம், போன்ற செயலிகளில் இந்த வசதி இருக்கும் நிலையில், இதை ட்விட்டர் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டரில், "விரைவில் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வீடியோ & ஆடியோ அழைப்புகள் வருகிறது. ஐபோன்கள், ஆண்டிராய்டு, ஆப்பிள் கணினி, விண்டோஸ் கம்பியூட்டர் என அனைத்திலும் இதை வேலை செய்யும்.. இதில் கால் செய்ய மொபைல் எண் தேவையில்லை; எக்ஸ் தளத்தில் ஏற்கனவே உலகளவில் இருக்கும் முக்கிய நபர்களது உள்ளனர். எனவே, இந்த கால் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. இது ட்விட்டர் தளத்தில் புரட்சிகரமானதாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications