ஃபேஸ்புக்கில் வரும் முக்கியமான மாற்றம்.. புதிதாக ஒரு ‘பட்டன்’.. வீடியோ எடிட் செய்ய வேற லெவல் டூல்ஸ்!
சென்னை: முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக், வீடியோ சார்ந்த அம்சங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக்கில் புதிதாக வீடியோ எனும் டேப் அறிமுகமாகிறது.
மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் சமூக வலைதளம் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஊடகமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஃபேஸ்புக், வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. யூடியூப் போல வீடியோக்களுக்கு மானிட்டைசேஷன் உள்ளது. இதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.

ஃபேஸ்புக்கில் வீடியோ எக்ஸ்பீரியன்ஸை இன்னும் சிறப்பாக்கும் வகையில், புதிய மாற்றங்களை கொண்டு வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது. அதன்படி, ஹெச்டிஆர் தரத்தில் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி மற்றும் வீடியோ எடிட்டிங் டூல்ஸ் ஆகியவையும் சேர்க்கப்பட்டு இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் வீடியோவுக்களுக்கு மவுசு அதிகரித்துள்ள சூழலில் யூசர்களை வீடியோக்களை பார்க்க வைப்பது மற்றும் வீடியோ உருவாக்கத்தில் ஈடுபட வைப்பது போன்றவற்றை கருத்தில் கொண்டு புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் முன்னர் ஃபேஸ்புக்கில் வாட்ச் என்று இருந்த டேப் தற்போது பேஸ்புக் வீடியோ என மாற்றப்பட உள்ளது. இதில் ரீல்ஸ், லாங் ஃபார்ம் வீடியோ, ஃபேஸ்புக் லைவ், க்ரியேட்டர்ஸ் வீடியோ என வீடியோ சார்ந்த அனைத்தையும் யூசர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய ஷார்ட் கட்கள் குறித்த தகவல்களை யூசர்கள் விரைவில் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்கள் படிப்படியாக அனைத்து யூசர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சங்களை இடமிருந்து வலமாக அதாவது ஹாரிசாண்டலாக ஸ்க்ரோல் செய்யும் போது யூசர்கள் பெற முடியும் என்றும், வழக்கமான பெர்சனலைஸ்ட் வீடியோக்களை கீழிருந்து மேலாக (வெர்டிக்கல்) ஸ்க்ரோல் செய்யும் போது யூசர்கள் பார்க்கலாம் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ரீல்ஸ் வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கான ஏராளமான டூல்களையும் கிரியேட்டர்கள் பெறலாம், ஆடியோக்கள் சேர்ப்பதையும், வீடியோ எடிட்டிங்கையும் அப்கிரேட் செய்துள்ளோம் என்று ஃபேஸ்புக்கை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications