செம.. இண்டர்நெட் வேண்டாம், கேபிள் கனெக்ஷன் தேவையில்லை! டிவி சேனல்கள் பார்க்கலாம்! லாவா போன் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மொபைல் போன்களில் இணைய இணைப்பு அல்லது வைஃபை இல்லாமலேயே நேரடியாக டி.வி சேனல்களைப் பார்க்கும் புதிய தொழில்நுட்பத்துடன் ஹெச்எம்டி மற்றும் லாவா நிறுவனங்கள் புதிய போன்களை அறிமுகப்படுத்த உள்ளன. இந்தச் சாதனங்கள் வருகிற மே 1 முதல் மே 4 வரை மும்பையில் நடைபெறும் WAVES 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்த நேரடி-மொபைல் சேவை (Direct-to-Mobile - D2M) மூலம், தொலைக்காட்சி சிக்னல்கள் நேரடியாக உங்கள் போனுக்கு வரும். இதன்மூலம் எந்தவித செல்லுலார் இணைப்பு அல்லது இணையம் இல்லாமலேயே மல்டிமீடியா கண்டெண்ட்களை (வீடியோக்கள்) பார்க்க முடியும்.

science mobile television

லாவா நிறுவனத்தின் போன்களில் அல்ட்ரா ஹை ஃபிரீக்வென்சி (UHF) ஆண்டெனா இடம்பெறும், இது இந்த டி.வி சிக்னல்களை நேரடியாகப் பெற உதவும்.

டி2எம் தொழில்நுட்பம் என்றால் என்ன? எப்படி செயல்படும்?

யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் அல்லது பிற OTT தளங்களைப் பயன்படுத்த இணையம் அவசியம். இணையம் இல்லாமல் இவற்றை பார்க்க முடியாது. ஆனால், டி2எம் தொழில்நுட்பம் இதற்கு விதிவிலக்கு. இந்தச் சேவையின் கீழ், ஒளிபரப்பு சிக்னல்களை நேரடியாக எந்தச் சாதனத்திற்கும் அனுப்ப முடியும்.

இதன் பொருள் என்னவென்றால், டிவி ஒளிபரப்பாளர் ஒரு சேனலைக் காட்ட அல்லது மல்டிமீடியா உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய உங்கள் போனுக்கு நேரடியாக சிக்னல்களை அனுப்ப முடியும். இதற்கு ஆக்டிவ் இணையம் தேவையில்லை. இந்தத் தொழில்நுட்பம் உங்கள் போன் அல்லது காரில் நீங்கள் பயன்படுத்தும் எஃப்எம் ரேடியோவைப் போலவே முழுமையாகச் செயல்படும். இதில் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், ரேடியோவில் ஆடியோ உள்ளடக்கம் மட்டுமே கிடைக்கும், ஆனால் இதில் வீடியோ உள்ளடக்கத்தையும் பெற முடியும்.

இந்தத் தொழில்நுட்பம் மல்டிமீடியா உள்ளடக்கத்தைக் காண்பிக்க மட்டுமல்லாமல், அவசரகால செய்திகளை அனுப்பவும் பயன்படுத்தப்படலாம்.

டி2எம் தொழில்நுட்பம் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாகக் குறைந்த விலை போன்களுக்காக இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மொபைல் பயன்பாட்டில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன?

லாவா மற்றும் ஹெச்எம்டி நிறுவனங்களின் ஃபீச்சர் போன்களில் சாங்கிய லேப் (Saankhya Lab) உருவாக்கிய SL3000 சிப் பயன்படுத்தப்படும். லாவா நிறுவனம் தேஜஸ் நெட்வொர்க்ஸ் (Tejas Network) உடன் இணைந்து இந்த ஹேண்ட்செட்களை உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போன்கள் மீடியாடெக் MT6261 பிராசஸரைக் கொண்டிருக்கும். மேலும், 2200mAh பேட்டரி மற்றும் 2.8 இன்ச் திரை போன்ற அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போன் விலை மே தொடக்கத்தில் அறிவிக்கப்படும். வயதானவர்கள் பயன்படுத்தும் வகையில் பொத்தான் கொண்ட போனாக இது உள்ளது. எனவே பெற்றோருக்கு இணையதள சேவைக்கு ரீசார்ஜ் செய்து கொடுத்து டிவி பார்க்க வைப்பதற்கு பதில் இதிலேயே இலவசமாக பார்க்கச் செய்துவிடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+