தெலுங்கானாவிற்கு போக இருந்த.. பெரும் அமெரிக்க நிறுவனத்தை.. தமிழ்நாடு எப்படி தட்டி தூக்கியது? செம
சென்னை: ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் 'Gorilla Glass' உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் மற்றும் பிற ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் 'Gorilla Glass' எனப்படும் திரை கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான Corning Inc., தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க ₹1,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கத்தில், 25 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் 300 பேர் பணியாற்றும் வகையில் உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எங்கே அமையும்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில், 25 ஏக்கர் நிலப்பரப்பில், தேவை ஏற்பட்டால் விரிவுபடுத்தப்பட்டு, சுமார் 300 பேர் பணிபுரியும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த தொழிற்சாலைக்காக Corning தனது இந்திய ஒப்பந்த நிறுவனமான Optiemus Infracom உடன் இணைந்து செயல்படும்.
மேலும் தகவல்கள்: கொரில்லா கிளாஸ் சந்தையில் முடிசூடா நிறுவனமாக இருக்கும் கார்னிங் உலகில் கொரில்ல கிளாஸ் உற்பத்தியில் நம்பர் 1 ஆகும். முன்னதாக, செப்டம்பரில், தெலுங்கானா மாநிலத்தில் முதலீடு செய்ய முடிவு செய்ததாக அந்த நிறுவனம் கூறியது. இருப்பினும், தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு இருப்பதால், மற்ற ஆப்பிள் சப்ளையர்களுக்கு அருகாமையில் இருப்பதால், நிறுவனம் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐபோன் 17 உற்பத்தி: சென்னையில் ஐபோன் 16 உற்பத்தி ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவிற்கு வெளியே தொடங்கும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறியுள்ளார். சீனாவில் உற்பத்தி தொடங்கும் முன்பாக சென்னையில் இந்த முறை ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் சர்வதேச ஐபோன் மார்க்கெட்டில் சீனாவை சென்னை முந்தி உள்ளது. சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.
தொடரும் தெலுங்கானா வீழ்ச்சி: தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் போது கியா நிறுவனம் முதலீடு செய்யாமல் ஒதுங்கியது. கியா முதலீட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு எவ்வளவோ முயன்றது. ஆனா அப்போது தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடுகள் குவியவில்லை. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பெரிதாக நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.
கியா முதலீடு போனது; இதனால் அப்போது மிக முக்கியமான முதலீடான கியா முதலீட்டை தமிழ்நாடு இழந்தது. இது தமிழ்நாட்டிற்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. ஏனென்றால் அப்போது தமிழ்நாடு - தெலுங்கானா - கர்நாடகா இடையே மிகப்பெரிய முதலீட்டு யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் தமிழ்நாடு அப்போது பின்னோக்கி சென்றது. அதிலும் கியா முதலீட்டை ஹைதராபாத் தட்டி தூக்கியது. ஆட்டோமொபைல் தலைமையிடமாக இருந்து கொண்டு தமிழ்நாடு கியா முதலீட்டை பெற முடியாதது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இப்போது அதே கியா குழுவில் உள்ள ஹூண்டாய் நிறுவன முதலீட்டை தமிழ்நாடு பெறுகிறது. கியா - ஹூண்டாய் எல்லாம் ஒரே குழுமம்தான். இரண்டுமே தென்கொரியாவை சேர்ந்த குழுமம்தான். கியா தமிழ்நாடு வேண்டாம் என்று 4 வருடங்களுக்கு முன்பு சொன்ன நிலையில், அவர்களையே தற்போது தட்டி தூக்கி ஹூண்டாய் முதலீட்டை தமிழ்நாடு பெற்றுள்ளது. கிட்டத்தட்ட அப்போது இழந்த மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பை தற்போது தமிழ்நாடு அரசு பூர்த்தி செய்து கொண்டது. இந்த நிலையில் தான் தெலுங்கானா மீண்டும் தமிழ்நாட்டிடம் வீழ்ந்து உள்ளது.
பெருகும் முதலீடு: சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழகத்தில் உற்பத்தியை செய்து வருகிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்து உற்பத்தி செய்து வருகிறது.
சென்னையில் இனி அனைத்து search ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படிதான் சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவிற்கு வெளியே தொடங்கும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறுகிறார்.
ஏற்கனவே சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் கிளை, ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் வகையை உற்பத்தி செய்தது. ஆனால் மொத்தமாக உற்பத்தி செய்யவில்லை. 80% உற்பத்தி சென்னையில் நடந்தது. அதனால் இதை முழுமையாக மேட் இன் இந்தியா என்று சொல்ல முடியாது. இந்த நிலையில்தான் மொத்தமாக முழுக்க முழுக்க சென்னையிலேயே ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனமும் பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. கடந்த ஐபோன் 15 மாடல் சென்னையில் சீனாவிற்கு பின் உற்பத்தி செய்யப்பட்டது. 16ம் சீனாவில் தொடங்கப்பட்ட பின் சென்னையில் தொடங்கப்பட்டது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications