இனி மூச்சு விடணும்னா கூட கூகுள் கிட்ட கேட்டுட்டு தான் விடணும் போலயே.. ஏன் தெரியுமா.. இதை படிங்க
டெல்லி: இந்தியாவில் காற்று மாசு மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனம் அட்டகாசமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.
இப்போது நமது நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் காற்று மாசும் கூட முக்கியமான பிரச்சினையாக மாறிவிட்டது. டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு மிகப் பெரிய தலைவலியாகக் கூறப்படுகிறது.

குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதைத் தடுக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை.
காற்று மாசு: நாட்டின் மற்ற முக்கிய நகரங்களிலும் கூட நிலைமை ரொம்ப மாறிவிடவில்லை. எல்லா நகரங்களிலும் காற்று மாசு முக்கிய பிரச்சினையாகவே இருக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறினால் மூச்சு விடுவதே இப்போதெல்லாம் நுரையீரலுக்குப் பெரிய போராட்டமாக இருக்கிறது. அதிலும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் காற்று மாசு குறித்து நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
இதனால் இப்போதெல்லாம் வெளியே செல்வதற்கு முன் காற்றின் தரத்தை சரிபார்ப்பது ரொம்பவே அவசியமாகிறது. அப்போது தான் காற்று மாசுக்கு ஏற்பட நாம் நமது பயணத்தைத் திட்டமிட முடியும். இதில் தான் இப்போது கூகுள் நிறுவனம் உள்ளே வந்துள்ளது. பொதுமக்களுக்கு உதவும் வகையில் காற்றின் தரத்தைக் கண்காணிக்கக் கூகுள் நிறுவனம் புதிய வசதியைக் கொண்டு வர உள்ளதாகக் கூறப்படுகிறது, இது காற்று மாசு அதிகமாக இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பேரூதிவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

காற்றின் தரம்: கூகுளில் டிஸ்கவர் தளத்தில் காற்று மாசு குறித்துத் தெரிந்து கொள்ள உதவும் AQI எனப்படும் காற்று தர மதிப்பீடு குறித்த கார்டை கூகுள் வெளியிடுகிறது. கூகுள் செயலியில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் இப்போது காற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். தற்போது மொபைல்களில் மட்டுமே இந்த வசதி வழங்கப்படுகிறது. இருப்பினும், டேப்லெட்டுகள் இந்த வசதி வழங்கப்படவில்லை.
அதிலும் காற்றின் தரம் குறித்த இந்த கார்டுகள் ரியல் லைமில் மாறிக் கொண்டே இருக்கும். அதாவது காலையில் ஒரு டேட்டாவை வைத்து கார்டு வருகிறது என்றால்.. மதியம் அதன் காற்றின் தரம் மாறினால் உடனடியாக அதுவும் அப்டேட் ஆகிவிடும். இது காற்று மாசு அதிகம் உள்ள பகுதியில் வசிப்போருக்கு நிச்சயம் மிகப் பெரியளவில் உதவும்..
மினி கார்டு: கூகுளின் டிஸ்கவர் டேப்பில் தற்போது மூன்று மினி கார்டுகள்- அதாவது விளையாட்டு, வானிலை மற்றும் பைனான்ஸ் ஆகியவற்றுக்கு மினி கார்டுகள் உள்ளன.. விளையாட்டு தொடர்பான கார்டில் உங்களுக்குப் பிடித்த அணியின் ஸ்கோர் அப்டேட் ஆகும். அடுத்து வானிலை தற்போது நீங்கள் இருக்கும் இடத்திற்கான வானிலை தரவுகள் அப்டேட் ஆகும். அதேபோல பைனான்ஸ் கார்டில் நீங்கள் தேர்ந்தெடுத்த பங்கு விலைகள் மற்றும் சந்தைப் போக்கு தெரியும்.
இதில் தான் கூகுள் இப்போது நான்காவது மினி கார்டை டிஸ்கவர் டேப்பில் சேர்க்கவுள்ளது. அதில் தான் ஏர் குவாலிட்டி குறித்த தகவல்கள் இருக்கும். இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் பகுதியின் காற்றின் தரம் குறித்து நொடிகளில் தெரிந்து கொள்ள முடியும். வெளியே செல்வதற்கு முன்பு, பொதுமக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிட நிச்சயம் இது உதவும் என்றே கூறப்படுகிறது.
விரிவான தகவல்: இதில் ஆண்டிராய்டு சாதனத்தில் வரும் ஏர் குவாலிட்டி தகவல்களைக் காட்டிலும் ஆப்பிள் சாதனங்களில் வரும் தரவுகள் விரிவானதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் சாதனங்களில் இருக்கும் காற்றின் தரம் குறித்த மினி கார்டில் அடுத்த சில மணி நேரத்திற்குக் காற்றின் தரம் எப்படி மாறும் என்பது குறித்த தகவலும் இருக்கும். மேலும், காற்றின் தரம் மாறினால் அதற்கேற்ப நிறமும் மாறுமாம். விரைவில் இந்த வசதி படிப்படியாக அனைத்து சாதனங்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications