ஐபோன் 16 வாங்க எத்தனை நாள் வேலை செய்யணும்! அமெரிக்காவை விட "இந்த" நாடு பெஸ்ட்! இந்தியா எங்கே?
டெல்லி: ஐபோன் 16 விற்பனை இப்போது இந்தியாவில் தொடங்கியுள்ளது. மக்கள் பலரும் ஐபோன் மாடல்களை ஆர்வமாக வாங்கி வருகிறார்கள். இதற்கிடையே ஒரு சராசரி இந்தியர் ஐபோன் 16 மாடலை வாங்க எத்தனை நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்பது குறித்த டேட்டாவை ஐபோன் இன்டெக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகெங்கும் உள்ள பல நூறு செல்போன் கம்பெனிகள் பல ஆயிரம் மொபைல் மாடல்களை வெளியிட்டாலும் கூட அனைவரது பார்வையும் ஐபோன் மீது தான் இருக்கும். ஐபோன்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் செப். மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடலை வெளியிடும். அதன்படி இந்தாண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐபோன் 16 வெளியிடப்பட்டது. ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் என்று நான்கு மொபைல்களை வெளியிட்டன.
ஐபோன் 16: இதில் ஐபோன் 16 மாடல் விற்பனை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பல இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக மொபைலை வாங்கி சென்றனர். இது தவிரப் பல நிறுவனங்கள் ஐபோன் மாடல்களை டோர் டெலிவரியும் செய்கிறது. இதனால் இந்தியாவில் ஐபோன் 16 விற்பனை இப்போது படுவேகமாக நடந்து வருகிறது.
அதேநேரம் ஐபோன்களை அனைவராலும் நினைத்த உடன் வாங்கி விட முடியாது. உச்சத்தில் இருக்கும் அதன் விலையே காரணமாகும். ஐபோன் 16 வாங்கவே நாம் நிச்சயம் பட்ஜெட்டில் பெரும்பகுதியை ஒதுக்க வேண்டி இருக்கும். பலருக்கு ஐபோன் மாடல்கள் பட்ஜெட்டிற்கு மீறிய செலவாகவே இருக்கும். இதற்கிடையே ஐபோன் 16 விலை குறித்து சுவாரசிய டேட்டா ஒன்று வெளியாகியுள்ளது.
வேலை செய்யணும்: அதாவது ஒரு நாட்டில் ஒருவர் எத்தனை நாட்கள் வேலை செய்தால் அவரால் ஐபோன் 16 வாங்க முடியும் என்பது குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த நாட்டில் தினசரி ஊதியம் எவ்வளவாக இருக்கிறது.. அதை வைத்து எத்தனை நாட்களில் அவர்களால் ஐபோன் 16 வாங்க முடியும் என்பதே இந்த டேட்டாவாகும். சில நாடுகளில் 3 மாதங்கள் முழுமையாக வேலை செய்தால் மட்டுமே ஒருவரால் ஐபோன் வாங்க முடியுமாம். அதேநேரம் மறுபுறம் ஐரோப்பிய நாடுகளில் வெகு சில நாட்கள் வேலை செய்தாலே ஐபோன் வாங்க முடிகிறதாம்.
டாப் நாடுகள்: ஐபோன் இன்டெக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த டேட்டாவின்படி குறைந்தபட்சம் சுவிட்சர்லாந்து நாட்டில் சில நாட்கள் வேலை செய்தாலே ஐபோன் 16 வாங்கி விட முடிகிறது. அங்கு வெறும் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். அடுத்து அமெரிக்காவில் இருப்போர் 5.1 நாட்களும், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் இருப்போர் 5.7 நாட்கள் வேலை செய்தால் போதும்.
இந்தியா எங்கே: ஐந்தாவது இடத்தில் லக்சம்பெர்க் (6.1 நாட்கள்) உள்ள நிலையில், டென்மார்க் (6.7 நாட்கள்) மற்றும் ஐக்கிய அமீரகம் (7.3 நாட்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த லிஸ்டில் இந்தியா 46ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் உள்ளவர்கள் மொத்தம் 47.6 நாட்கள் வேலை செய்தால் மட்டுமே புதிய ஐபோன் 16 மாடலை வாங்க முடியுமாம். அதேநேரம் இந்தியாவை விடவும் சில நாட்களில் ஐபோன் வாங்க அதிக நாட்கள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.
அதிகபட்சமாகத் துருக்கி நாட்டில் 72.9 நாட்கள் வேலை செய்தால் மட்டுமே ஐபோன் 16 வாங்க முடியும். அதேபோல பிலிப்பைன்ஸ் நாட்டில் 68.8 நாட்களும், பிரேசில் நாட்டில் 68.6 நாட்களும் வேலை செய்தால் மட்டுமே ஐபோன் 16 மாடலை வாங்க முடியும். அந்தளவுக்கு காஸ்ட்லியாகவே இருக்கிறது ஐபோன் 16 மாடல்.
இந்தியாவில் ஐபோன் 16 மாடல் ₹ 79,900இல் இருந்து தொடங்குகிறது. அதேபோல ஐபோன் 16 ப்ளஸ் ₹ 89,900க்கும் ஐபோன் 16 ப்ரோ ₹ 119,900க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ₹ 144,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications