நைசாக பணம் எடுக்கும் கூகுள் பே.. வசதிக் கட்டணம் இல்லாமல் செல்போன் ரீசார்ஜ் செய்வது எப்படி?
சென்னை: கூகுள் பே யுபிஐ செயலியில் செல்போன் ரிசார்ஜ் செய்வதற்கு சத்தமே இல்லாமல் மக்களிடம் வசதிக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை எப்படி தவிர்ப்பது என்று பார்ப்போம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் எளிமையாக்கிவிட்டன. கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன் மூலமாகவே எங்கும் அலையாமல் சில நொடிகளிலேயே இருக்கும் இடத்தில் இருந்தே பல்வேறு சேவைகளை செய்யவும், வேலைகளை முடிக்கவும் முடிகிறது. குறிப்பாக கையில் பணத்தை கொண்டு செல்லாமல், ஏடிஎம் மையங்களில் நீண்ட வரிசையில் காத்து நிற்காமல் வங்கிக் கணக்கில் இருந்தே நேரடியாக யுபிஐ மூலம் சில வினாடிகளில் பணத்தை அனுப்பி விடுகிறோம்.

சில நேரங்களில் இந்த யுபிஐ செயலி காலை வாறிவிடுவதும் உண்டும்றது. இதை நம்பி பணத்தை எடுத்து செல்லாமல், இணையதள இணைப்பு, செல்போன் சிக்னல் இல்லாமல் கடைசி நேரத்தில் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் நிகழ்வுகளும் நடக்கிறது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வர இருப்பதாக செய்திகள் பகிரப்பட்டு வந்தன. ஆனால், அவை வதந்தி என்று தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஜி பே சத்தமின்றி யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் சுமார் 6.5 கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த செயலி கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது. தொடக்கத்தில் கேஷ் பேக், வவுச்சர் போன்ற சலுகைகளை கொடுத்து வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டு வந்த கூகுள் பே, தற்போது பயனற்ற வவுச்சர்களையே வழங்கி வருவதாக பயனர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இருப்பினும் எளிதில் பணம் அனுப்ப முடிவதாலும், மின்சார கட்டணம், செல்போன், டிடிஹெச் ரீசார்ஜ் போன்றவற்றை செய்ய முடிவதால் தவிர்க்க முடியாத செயலியாகி இருக்கிறது கூகுள் பே. இந்த நிலையில்தான், கூகுள் பே நிறுவனம் சத்தமே இல்லாமல் கடந்த மாதம் முதல் சேவைக் கட்டணத்தை பயனர்களிடம் வசூலிக்கத் தொடங்கி இருக்கிறது. கூகுள் பேவின் இந்த கட்டண வசூல் பற்றி பயனர்கள் பெரும்பாலானோருக்கு இன்னும் தெரியவில்லை.
புதிய விதிகளில் ரூ.100 க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்தால் கட்டணம் இல்லை. ஆனால், ரூ.101 முதல் 200 வரை ரீசார்ஜ் ரூ.1 சேவைக் கட்டணம், ரூ.201 முதல் 300 வரை ரீசார்ஜ் ரூ.2 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு வசதி கட்டணம் என்று பெயரிட்டு உள்ளது கூகுள் பே. இதனை தவிர்க்கவும் சில வழிகள் உள்ளன. நீங்கள் எந்த வங்கியின் வாடிக்கையாளராக உள்ளீர்களோ அதற்கென உள்ள யுபிஐ செயலியை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்தால் கட்டணம் இல்லை. அதேபோல் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்குகளின் செயலியை பயன்படுத்தியும் கட்டணம் இல்லாமல் ரீச்சார்ஜ் செய்யலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications