ஹாங்காங் பறந்து.. அப்படியே 2 நாள் ஊர் சுற்றி.. ஐபோன் 15ஐ சீப்பாக வாங்குவது எப்படி தெரியுமா? ஈஸி வழி
சென்னை: ஐபோன் 15 மாடல் போன்களை குறைந்த விலைக்கு வாங்குவது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
ஒவ்வொரு வருடமும் ஐபோன் புதிய மாடல் வெளியானதும் அதை குறைந்த விலைக்கு வாங்குவது எப்படி என்ற கணக்குகளும் இணையத்தில் சுற்றி பறக்கும். உதாரணமாக ஐபோன் எக்ஸ் வெளியான போது அதை வாங்குவதற்கு துபாய் செல்ல வேண்டும்.

அங்கே பணம் குறைவு, துபாய்க்கு போய் சுற்றிபார்த்துவிட்டு போனை வாங்கினால் கூட இந்தியாவில் வாங்குவதை விட குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டது. இதை பின்பற்றி பலர் துபாய்க்கு சென்று போனை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில்தான் தற்போது ஐபோன் 15 மாடல் வெளியாகி உள்ளது. ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐபோன் உற்பத்தி மையத்தில் இந்த போன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
iPhone 15 தொடரின் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன் என்ன?
128 ஜிபி அடிப்படை சேமிப்பகத்துடன் வெளியாகும் ஐபோன் 15 விலை ₹ 79,900. இதே மெமரியுடன் வெளியாகும் iPhone 15 Plus இன் விலை ₹ 89,900.
iPhone 15 Pro (128 GB) இன் விலை ₹ 1,34,900 இல் தொடங்குகிறது, மேலும் 256GB சேமிப்பகத்துடன் iPhone 15 Pro Max ஐ வாங்க விரும்பினால், ₹ 1,59,900 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஐபோன் 15 அறிமுகம் காரணமாக , iPhone 14 இன் விலை ₹ 69,900 ஆகவும், iPhone 14 Plus இன் விலை ₹ 79,900 ஆகவும் இருக்கும் குறைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
"Wonderlust" வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு, iPhone 14 Pro தொடர் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேல் நீங்கள் அதை Apple இன் மறுவிற்பனையாளர்கள் மூலம் மட்டும் வாங்க முடியும்.
குறைவான விலை: இந்த நிலையில் ஐபோன் 15 மாடல் போன்களை குறைந்த விலைக்கு வாங்குவது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், இந்தியாவில் மிகவும் அதிக விலைக்கு விற்கிறது. இந்தியர்கள் ஹாங்காங் அல்லது துபாய்க்கு விமானத்தில் சென்று அங்கே போன் வாங்குவது இதைவிட மலிவானது ஆகும். அங்கு சிறிது நேரம் செலவழித்து, பின்னர் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸை வாங்கினால் கூட இந்தியாவில் வாங்குவதை விட குறைவாகவே இருக்கும்.
இந்தியாவின் எஸ்ஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி ஆகியவை காரணமாக இந்த கூடுதல் விலை விற்கப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் வாங்க மற்றும் ஹாங்காங்கிற்கு பயணம் செய்வதற்கு எவ்வளவு ஆகும் என்பதை இங்கே பார்க்கலாம் .
முதலில் இந்தியா மற்றும் ஹாங்காங்கில் iPhone 15 Pro Max விலைகள். ஆப்பிள் இணையதளத்தின்படி, இந்தியாவில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், 256ஜிபி சேமிப்பகத்தின் அடிப்படை விலை ரூ.1,59,900. ஹாங்காங்கில் இதே போன் HK $10199 விலையில் உள்ளது. இந்திய ரூபாயாக மாற்றப்பட்டால் இது சுமார் ரூ.1,08,058 ஆகும். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஹாங்காங்கில் இந்தியாவை விட ரூ. 50,000 மலிவானது.
செப்டம்பர் 29 ஆம் தேதி டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றுவிட்டு - திரும்புவதற்கான 2 வே விமான டிக்கெட் விலை ரூ.28,138 ஆகும். இதைவிட குறைந்த விலையில் டிக்கெட் இல்லை. மீதம் உங்களிடம் 22 ஆயிரம் இருக்கும். இதை ஹாங்காங்கில் நீங்கள் தங்க, சாப்பிட, ஊர் சுற்ற பயன்படுத்தலாம். இதன் மூலம் இந்தியாவில் போன் வாங்குவதற்கு பதில் நீங்கள் ஹாங்காங் சென்று போன் வாங்கிவிட்டு, அதே காசுக்கு ஊர் சுற்றிவிட்டு வரலாம்.
இத்தனையும் செய்தாலும் இந்தியாவில் வாங்குவதை விட 10000 ரூபாய் உங்களுக்கு குறைவாகவே செலவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications