ஆப்பிள் ஐபோன் 16 புதிய மாடல் போனை.. ரூ.25000 தள்ளுபடியில்.. ஈஸியா வாங்கலாம்.. எப்படி தெரியுமா?
சென்னை: ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவில், ஆப்பிள் ஐபோன் 16 ரூ.79,900 முதல் தொடங்குகிறது, ஐபோன் 16 பிளஸ் விலை ரூ.89,900. உயர்தர மாடல்களான iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை முறையே ரூ.1,19,900 மற்றும் ரூ.1,44,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதே புதிய ஐபோன் மாடலை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். ஆப்பிள் புதிய மாடல்களில் கணிசமான தள்ளுபடியை பெற முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் trade-in program மூலம் ஆப்பிள் புதிய மாடல் போன்களை குறைந்த விலைக்கு வாங்க முடியும்.

அதாவது ஆப்பிள் பழைய மாடல் போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து.. புதிய மாடல் போன்களை வாங்க முடியும். உங்களின் எக்ஸ்சேஞ்ச் செய்யப்படும் ஐபோனின் மாடல் எப்படி இருக்கிறதோ.. அதன் மாடல் என்னவோ அதன் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் மாடலுக்கு அதிக தள்ளுபடி பெற முடியும். அதாவது ரூ..54,900 வரை ஐபோன் 16 விலை குறையும்.
ஆப்பிள் ஐபோன் 16 (128 ஜிபி) விலை ரூ.79,900. இருப்பினும், வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம், சிறந்த நிலையில் உள்ள பழைய iPhone 14ஐ எக்ஸ்சேஞ்ச் செய்து ரூ.25,000 வரை பெறலாம். இதன் மூலம் ஐபோன் 16 மாடல் விலை ரூ.54,900 ஆக குறையும்.
செப்டம்பர் 13 ஆம் தேதி ப்ரீ ஆர்டர்கள் தொடங்கி, செப்டம்பர் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனை தொடங்க உள்ளது. இதன் விற்பனை தொடங்கும் நிலையில், புதிய சீரிஸ் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறாமல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
விற்பனை நிறுத்தம், விலை குறைவு: ஐபோன் 16 சீரிஸ் அறிவிப்புடன், ஆப்பிள் அதன் பழைய மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10,000 குறைத்துள்ளது. இருப்பினும், ஆப்பிள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த மாடல்கள் தேர்ட் பார்ட்டி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஆப்பிள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் இன்னும் கிடைக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஆப்பிள் நிறுவனம் ரீபண்ட் வழங்க தொடங்கி உள்ளது. உதாரணமாக இப்போது ஐபோன் பழைய மாடல்கள் 10 ஆயிரம் விலை குறைந்து உள்ளது. ஆனால் நீங்கள் சில நாட்களுக்கு முன்புதான் பழைய மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவற்றை வாங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்கி இருப்பீர்கள்.
சமீபத்தில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 14 அல்லது iPhone 14 Plus ஆகியவற்றை வாங்கிய வாடிக்கையாளர்கள் விலைக் குறைவைத் தொடர்ந்து பணத்தைத் திரும்பப் பெற அல்லது கிரெடிட்டைப் பெற அனுமதிக்கப்பட்டு உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications