தலைவலி.. ஐபோனில் சில நேரங்களில் மட்டும் "கால் கட்" ஆப்ஷன் காட்டாதே ஏன் தெரியுமா? ஒரு வழி இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடியன் பிரவீன், iphone பற்றி சொல்லி வைரலான காமெடி ஓரளவுக்கு உண்மைதான். கஸ்டம்ஸ் செட்டிங் எல்லாமே அதில் கஷ்டம்தான். ஆண்ட்ராய்டு போனில் செய்யும் ஒரு சாதாரண விஷயத்தை கூட ஐபோனில் சுற்றி வளைத்துதான் செய்ய வேண்டும். அப்படி ஒரு விஷயம் தான், யாராவது உங்களை போனில் அழைக்கும் போது தேவை இல்லை என்றால் அதை கட் செய்யும் ஆப்ஷன்.

சில நேரங்களில் மட்டும், பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் அழைப்புகளை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் ஆப்ஷன் டிஸ்ப்ளேயில் காட்டப்படும். சில நேரங்களில் அழைப்புகளை பெறுவதற்கான ஆப்ஷன் மட்டுமே டிஸ்ப்ளேயில் இடம் பிடிக்கும்.

How to decline incoming calls in iPhones? here is the shortcut

ஐபோன் பயனாளர்கள் பலருக்கும் இது கண்டிப்பாக குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும். எப்படி அழைப்பை துண்டிப்பது என்று தெரியாமல் வால்யும் பட்டனை கீழே அமர்த்தி சத்தத்தை மட்டும் மியூட் செய்வது அவர்கள் வாடிக்கை. எல்லாவற்றையும் வித்தியாசமாக செய்யும் ஐபோன் வல்லுநர்கள் இதிலும் ஒரு ட்ரிக்ஸ் வைத்து இருக்கிறார்கள் என்பதுதான் இதற்கு காரணம்.

முதலில் ஏன் இப்படி, ஒரே போன் இருமுறை இரு வேறு வகைகளில் டிஸ்ப்ளேயில் காட்டுகிறது என்பதற்கு காரணம் இருக்கிறது. உங்களது ஐபோன் லாக் செய்யப்பட்டு இருந்தால் அப்போது அழைப்புகளை ஏற்கும் ஆப்ஷன் மட்டுமே காண்பிக்கப்படும். அதே நேரம் லாக் செய்யாமல் நீங்கள் உங்கள் போனில் வேறு ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு இருந்தால் அப்போது அழைப்புகளை நிராகரிப்பது மற்றும் ஏற்பது ஆகிய இரு ஆப்ஷன்களும் காட்டப்படும். இனிமேல் நீங்களே இதை கவனித்து பார்த்து உறுதி செய்யலாம்.

How to decline incoming calls in iPhones? here is the shortcut

அடுத்ததாக இவ்வாறு நிராகரிக்கும் ஆப்ஷன் காட்டப்படாத போது நாம் எவ்வாறு நிராகரிப்பது என்பதை பார்க்கலாம். யாராவது உங்களை தொலைபேசியில் அழைக்கும் போது பக்கவாட்டில் இருக்கும் பவர் பட்டனை இரண்டு முறை, உடனுக்குடன் அழுத்தினால் அந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும். இத்தனை நாள் இது தெரிந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை. இனிமேல் எளிதாக உங்கள் அழைப்புகளை நிராகரிப்பதற்கு இந்த முறையை பயன்படுத்துங்கள்.

iphone வேண்டுமென்றே தான் இப்படி ஒரு ஆப்ஷன் கொடுத்து இருக்கிறது. நீங்கள் லாக் செய்து இருக்கும்போது உங்கள் மொபைல் போனை பாக்கெட்டில் வைத்திருப்பீர்கள் என்று கருதும் ஐபோன் display-ல் நிராகரிக்கும் வாய்ப்பை தராமல் தடுத்து வைக்கிறது. பாக்கெட்டில் மொபைல் போன் இருக்கும்போது உரிமையாளருக்கு தெரியாமல் கூட ஏதாவது பட்டு அழைப்பு துண்டிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்முனையில் இருப்பவர்கள் பெரிய அதிகாரியாகவோ, முக்கியஸ்தராகவோ இருந்தால் அதை மரியாதை குறைவான செயல் என்று தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்று ஐபோன் நினைத்துக் கொள்கிறது. இதன் காரணமாகத்தான் பக்கவாட்டில் உள்ள பட்டனை, உள்வரும் அழைப்புகளை நிராகரிப்பதற்காக பிரத்தியேகமாக கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+