டிராபிக் அபராதத்தில் இருந்து தப்ப கூகுள் மேப்ஸின் அடடே வசதி! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
வாஷிங்டன்: போக்குவரத்து விதிகளை மீறும் போது டிராபிக் போலீஸ் நமக்கு பொதுவாக அபராதம் விதிப்பார்கள். இதுபோன்ற அபராதங்களில் இருந்து தப்ப கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுக்க வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய சாலை போக்குவரத்து விதிகள் பல இருக்கிறது. இந்த விதிகள் அனைத்தும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே கொண்டு வரப்பட்டன.

இந்த சாலை விதிகளை நாம் முறையாகக் கடைப்பிடிக்காத சமயங்களில் நமக்கு போலீசார் அபராதங்களை விதிக்கின்றனர். இந்த அபராதம் சில நேரங்களில் மிகப் பெரிய தொகையாக இருந்துவிடுவதால் ஓட்டுநர்கள் கவலையடைகிறார்கள்.
கூகுள் மேப்ஸ்: இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் கூகுள் மேப்ஸ் புதிய வசதியைக் கொண்டு வந்துள்ளது. சாலைகளில் வேக வரம்புகளைக் கடைப்பிடிப்பதில் ஓட்டுநர்களுக்கு இந்த புதிய வசதி மிகப் பெரியளவில் உதவும்.. பனிமூட்டம் அல்லது கனமழை என வானிலை காரணங்களால் சாலைகளில் உள்ள போர்டுகளை தெளிவாகப் பார்க்க முடியாத சமயங்களிலும் இந்த அம்சம் ஓட்டுநர்களுக்கு மிகப் பெரியளவில் உதவும்.
உதாரணமாக, ஓட்டுநர்கள் நெடுஞ்சாலையில் இருந்து மாவட்ட சாலைக்கு மாறும் போது அந்த சாலைகளில் உள்ள அதிகபட்ச வேக வரம்பை அடையாளம் காண முடியாமல் போகும். இதுபோன்ற நேரங்களில் போலீசார் அவர்களைப் பிடித்தால் தேவையே இல்லாமல் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். சில நேரங்களில் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வழக்கமாக இருக்கும் வேக வரம்பைக் காட்டிலும் தற்காலிகமாக அதிகபட்ச வேகத்தைக் குறைத்து இருப்பார்கள்.
வேக வரம்பு: இருப்பினும், இரவு நேரம், வானிலை காரணங்களால் இந்த அதிகபட்ச வேக வரம்பு விவரத்தை அறிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். இதனால் நாம் சாலைகளில் வாகனங்களை அதிவேகமாக இயக்கும் போது தேவையில்லாமல் ஃபைன் கட்ட நேரிடுகிறது. இந்த பிரச்சினையைச் சரி செய்யவே கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் புது தீர்வை கொடுத்துள்ளது.
இதில் உலகெங்கும் உள்ள சாலைகளில் தற்போது என்ன வேகக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்கலாம். இதை ஸ்பீடோமீட்டர் (speedometer) என்று அழைக்கிறார்கள். இதை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்க்கலாம். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்பீடோமீட்டர் வசதியை எப்படி ஆன் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
என்ன செய்யணும்: முதலில் கூகுள் மேப்ஸ் செயலியை உங்கள் மொபைலில் ஓபன் செய்து கொள்ளுங்கள். அங்கே வலது புறம் மேலே நமது புரோபைல் போட்டோ தெரியும். அதை க்ளிக் செய்தால் டிராப் டவுவன் மெனு வரும். அதில் செட்டிங்ஸ் என்ற இடத்தில் சென்று அதில் Navigation settingsக்கு செல்ல வேண்டும்.
அதில் Driving options என்ற இடத்தில் ஸ்பீடோமீட்டர் வசதியை ஆன் செய்ய வேண்டும். இதைச் செய்தால் போதும் இனி நீங்கள் சாலையில் பயணிக்கும் போது நீங்கள் பயணிக்கும் வேகத்தைக் கூகுள் மேப்ஸில் பார்க்கலாம்.
ஏன் முக்கியம்: இதை வண்டியிலேயே பார்க்கலாமே என்ற கேள்வி வரும். வண்டியில் நாம் செல்லும் வேகம் மட்டுமே வரும். ஆனால், கூகுள் மேப்ஸின் இந்த வசதியில் அந்த குறிப்பிட்ட சாலையில் அதிகபட்ச வேகம் என்ன என்பதும் வரும். எனவே, நாம் அந்த அதிகபட்ச வேகத்தைத் தாண்டும் போது கூகுள் மேப்ஸ் நிறுவனம் நம்மை அலர்ட் செய்யும். இதன் மூலம் ஓவர்ஸ்பீடுக்கு சலான் இல்லாமல் நம்மால் தப்ப முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications