"வைரஸ்.." உங்க மொபைல் ஓவரா சூடாக இது கூட காரணமாக இருக்கலாம்.. எப்படி கண்டுபிடிக்கணும் தெரியுமா
டெல்லி: சிலருக்கு திடீர் திடீரென மொபைல்கள் சூடாகலாம். இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், நமது மொபைலை யாராவது ஹேக் செய்தாலோ அல்லது வைரஸ் இருந்தாலே கூட இப்படி சூடாகும். அதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் மொபைல் மூலமே நம்மால் எல்லா விஷயங்களையும் செய்ய முடிகிறது. டேட்டிங் முதல் சாட்டிங் வரை அனைத்து விஷயங்களும் இப்போது மொபைல் மூலமாகவே நம்மால் செய்ய முடிகிறது.

இதனால் மொபைல்கள் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாது என்ற சூழலே இருக்கிறது. பலருக்கும் மொபைல் இல்லாமல் வெளியே சென்றாலேயே ஒரு வித படபடப்பு ஏற்பட்டுவிடும். அந்தளவுக்கு நமக்கு மொபைல் பன்கள் 6ஆவது விரலைப் போலவே மாறிவிட்டது.
மொபைல்: பொதுவாகவே சில நேரங்களில் மொபைல் திடீரென சூடாக ஆரம்பிக்கும். கையில் நாம் மொபைலை வைத்திருக்கும் போதே மொபைல் சூடாவதை உணர முடியும். சில சமயங்களில் மொபைலை கையிலேயே வைக்க முடியாத அளவுக்குக் கூட அவை சூடாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. மொபைல்கள் இப்படி திடீர் திடீரென சூடாகப் பல காரணங்கள் இருந்தாலும் வைரஸ் தாக்கியிருந்தால் அது ரொம்பவே டேஞ்சர். அதை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்
உங்கள் மொபைல் சூடாகப் பல காரணங்கள் இருக்கின்றன. மொபைல் யூஸ் செய்யும் போது அது குறைந்தளவில் வெப்பத்தை வெளியேற்றும். ஆனால், வெப்பம் வெளியேறுவதில் எதாவது பிரச்சினை இருந்தால் அல்லது டைட்டான பேண்ட் பாக்கெட் போன்ற இடங்களில் வைத்தால் மொபைல் ஹீட் ஆகும். அதேபோல இணையத்திற்கு மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் போது மொபைல் சூடாகும். அதேநேரம் மொபைல் பைவையில் கனெக்ட் ஆகி இருந்தால் அந்தளவுக்குச் சூடாகாது. இதை நாம் மொபைலை பயன்படுத்தும் போதே உணரலாம்.

என்ன காரணம்: இப்போது வெயில் கொளுத்தும் நிலையில், நேரடியாக மொபைல் மீது அதிக வெப்பம் பட்டாலும் மொபைல் சூடாக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல மொபைல ஓவர்சார்ஜ், அதாவது 100% மேல் சார்ஜ் ஏற்றினால் அப்போதும் சில நேரம் மொபைல் சூடாகும். எனவே, 100% வந்தவுடன் உடனடியாக சார்ஜ் ஆவதை நிறுத்துங்கள். மேலும், ஒர்ஜினல் சார்ஜரை பயன்படுத்தாமல் மலிவான சார்ஜரை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்தாலும் கூட இந்த பிரச்சினை ஏற்படும்.
மேலும், சாப்ட்போர் அப்டேட் வந்து அதை செய்திருந்தீர்கள் என்றால் இதனாலும் மொபைல் ஹீட் ஆகலாம். அதிக யூசர்களுக்கு இதுபோல பிரச்சினை இருந்தால் சம்மந்தப்பட்ட நிறுவனமே விரைவில் ஒரு அப்டேட்டை கொடுத்து இதைச் சரி செய்வார்கள். அதேபோல பேக் கிரவண்டில் எதாவது செயலி ஒடிக் கொண்டே இருந்தாலும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படும் அதை செக் செய்து பேக்கிரவண்ட் செயலிகளை ஆப் செய்யுங்கள். மேலும், கேமராவை அதிகம் பயன்படுத்தினாலும் மொபைல் சூடாகும். இதுபோன்ற நேரங்களில் கேமராவை க்ளேஸ் செய்து வையுங்கள்.
வைரஸ் இருக்கலாம்: இவை எல்லாம் சரியாக இருந்தும் மொபைல் சூடானால், மொலை ஆப் செய்யுங்கள். ஸ்விட்ச் ஆப் செய்த பிறகும் மொபைல் வெப்பம் குறையவில்லை என்றால் உங்கள் மொபைலில் எதாவது ஒரு வைரஸ் இருக்கலாம் அல்லது யாராவது ஹேக் செய்து இருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் நீங்களே எதாவது முயல்வதற்குப் பதிலாக உடனடியாக அருகில் இருக்கும் சர்வீஸ் சென்டருக்கு மொபைலை எடுத்துச் செல்ல வேண்டும்.
சில குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் மொபைல் ஹேக் ஆவது அல்லது வைரஸ் வருவதைத் தவிர்க்க முடியும். முதலில் பாதுகாப்பற்ற தளங்களுக்குச் செல்லவே கூடாது. பிளாக் செய்யப்பட்ட தளங்களுக்குச் செல்ல முயன்றால் வைரஸ் வரும். யாரென்றே தெரியாத நபர் அனுப்பும் லிங்குகளை க்ளிக் செய்தாலும் மொபைலில் வைரஸ் வரவும் ஹேக் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. தேவைப்பட்டால் ஒரு நல்ல மொபைல் ஆன்ட்டி வைரஸையும் கூட பயன்படுத்தலாம்.
மொபைல் எந்த காரணத்திற்கு ஹீட் ஆனாலும் உடனடியாக வெப்பத்தைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் மொபைல் ஹேங் ஆகி, ஒட்டுமொத்தமாகவே பேட்டரி அல்லது மொபைல் வீணாக வாய்ப்பு இருக்கிறது. வெப்பம் அதிகரிக்கும் போது அதைக் குளிர்விக்க மொபைல் கேஸை கழற்றி வைக்கலாம். அல்லது ஸ்கிரீன் அதிக BRIGHTNESS இருந்தாலும் மொபைல் சூடாகும். எனவே, அதைக் குறைத்து வைக்கலாம்.
அப்படி இல்லை என்றால் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைக்கலாம். சுவிட்ச் ஆப் செய்து வைத்தால் மொபைல் உடனடியாக சில நிமிடங்களில் கூல் ஆகும். இவை எல்லாம் நாம் செய்யக் கூடியவை. ஆனால், சில குறிப்பிட்ட வகை மொபைல்கள் நாம் எதையும் செய்யவில்லை என்றாலும் தானாகவே ஹீட் ஆகும். அதுபோன்ற நேரங்களில் நம்மால் எதுவும் செய்ய முடியாது..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications