Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவோடு இரவாக.. ரூ.20 ஆயிரம் குறைக்கப்பட்ட ஐபோன் விலை.. எந்த மாடல்? எப்படி வாங்குவது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபோன் 16 தொடரின் வெளியீட்டிற்குப் பிறகு மற்ற ஐபோன் மாடல்களின் விலை சட்டென குறைக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக ஐபோன் 15 ப்ரோவின் விலை மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. பிளிப்கார்ட் செயலியில் இதன் விலை மேலும் சரிந்து உள்ளது.

Flipkart Big Billion Days விற்பனை மூலம் குறைந்த விலையில், ஐபோன் 15 ப்ரோ விற்பனை ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. Flipkart இ-காமர்ஸ் இணையதளம் சமீபத்தில் ஐபோன் 15 ப்ரோவை ரூ.89,999 விலையில் விற்பனை செய்வதாக அறிவித்தது.

technology 16 apple iphone 16

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையானது அனைத்து பிளிப்கார்ட் பிளஸ் சந்தாதாரர்களுக்கும் செப்டம்பர் 26 ஆம் தேதியும், மற்றவர்களுக்கு ஒரு நாள் கழித்து செப்டம்பர் 27 அன்றும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Flipkart ஐபோன் 15 தொடரின் ஒவ்வொரு மாடலுக்கும் பெரும் தள்ளுபடியை வழங்க Flipkart முடிவு செய்துள்ளது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸிற்கான தள்ளுபடி இதில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஃபிளாக்ஷிப் மாடலின் விலை ரூ.1,39,999ல் இருந்து ரூ.1,09,900க்கு குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதில் அதிகாரபூர்வமாக 10 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக விலை குறைக்கப்பட்டு உள்ளது.

ஐபோன் 15 ப்ரோவின் எப்படி குறைவாக பெறுவது?

ஐபோன் 15 ப்ரோவின் விற்பனை விலை ரூ.1,19,999 லிருந்து குறைந்து ரூ.99,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. அதாவது ரூ.10,000 தள்ளுபடி அனைவருக்கும் பொருந்தும். இருப்பினும், மேலும் ரூ.10,000 தள்ளுபடியானது வங்கிச் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலம் வழங்கப்படும். பிளிப்கார்ட் விஐபி வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.2,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃப் கிடைக்கும்.

ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியது: ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வந்தாலும்.. அதன் மாடல்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. பழைய தமிழ் படங்களில் வில்லன் மரு வைத்துக்கொண்டு வருவது போல ஐபோன் 11க்கு பின் வரும் போன் எல்லாமே மரு வைத்து சில சில மாற்றங்களுடன் மட்டுமே வந்துகொண்டு இருக்கிறது.

செப்டம்பர் 13 ஆம் தேதி ப்ரீ ஆர்டர்கள் தொடங்கி, செப்டம்பர் 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக விற்பனை தொடங்க உள்ளது. இதன் விற்பனை தொடங்கும் நிலையில், புதிய சீரிஸ் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறாமல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

விற்பனை நிறுத்தம், விலை குறைவு: ஐபோன் 16 சீரிஸ் அறிவிப்புடன், ஆப்பிள் அதன் பழைய மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10,000 குறைத்துள்ளது. இருப்பினும், ஆப்பிள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த மாடல்கள் 3ர்ட் பார்ட்டி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஆப்பிள் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் மூலம் இன்னும் கிடைக்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஆப்பிள் நிறுவனம் ரீபண்ட் வழங்க தொடங்கி உள்ளது. உதாரணமாக இப்போது ஐபோன் பழைய மாடல்கள் 10 ஆயிரம் விலை குறைந்து உள்ளது. ஆனால் நீங்கள் சில நாட்களுக்கு முன்புதான் பழைய மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவற்றை வாங்கி உள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்கி இருப்பீர்கள்.

சமீபத்தில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 14 அல்லது iPhone 14 Plus ஆகியவற்றை வாங்கிய வாடிக்கையாளர்கள் விலைக் குறைவைத் தொடர்ந்து பணத்தைத் திரும்பப் பெற அல்லது கிரெடிட்டைப் பெற அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரீபண்ட் பெற தகுதி என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி வாடிக்கையாளர்கள் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்ட 14 நாட்களுக்கு முன் பழைய மாடல்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவற்றை வாங்கியிருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+