பண்டிகை கால தள்ளுபடி! ரூ.1500 இருந்தாலே போதும்.. குறைந்த விலையில் ஐபோன் வாங்கலாம்! எப்படி தெரியுமா
டெல்லி: ஐபோன்கள் மீது எப்போதுமே நமக்கு ஒருவித ஈர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். இதற்கிடையே இந்த பண்டிகை கால விற்பனையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த விலையில் ஐபோன் மாடல்கள் கிடைக்கிறது. அதை எங்கு வாங்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
டெக் உலகில் எப்போதுமே ஐபோன்களுக்கு தனி மவுசு இருக்கவே செய்கிறது.. என்ன தான் மற்ற நிறுவனங்கள் மாதம் மாதம் மொபைல்களை வெளியிட்டாலும் கூட ஐபோன்களுக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் செப். மாதம் வெளியாகும் ஐபோன் மாடல்களுக்கு உலகெங்கும் எதிர்பார்ப்பு இருக்கும். எவ்வளவு டிமென்ட் இருந்தாலும் நள்ளிரவில் வரிசையில் நின்று ஐபோன்களை வாங்கவும் மக்கள் ரெடியாகவே உள்ளனர்.
ஐபோன்கள்: என்ன தான் அட்டகாசமான கேமரா, வேற லெவல் டிஸ்பிளே என பல வசதிகளைக் கொண்டிருந்தாலும் ஐபோன்களின் விலையைக் கேட்டால் ஒரு நிமிடம் தலையேறே சுற்றிவிடும். இந்தாண்டு ஐபோன் 15 விலை ரூ.79,900இல் இருந்து ஆரம்பிக்கிறது. ஐபோன் ப்ளஸ் 89,900 ரூபாய்க்கும், ஐபோன் 15 ப்ரோ 1.34 லட்ச ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ 1.60 லட்சமாக இருக்கிறது.
விலை இந்தளவுக்கு உச்சத்தில் இருப்பதால் இன்னுமே பலருக்கும் ஐபோன்கள் எட்டவே முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஐபோன்களின் விலை குறையாதா என ஏக்கத்துடன் இருப்போருக்கு இப்போது அட்டகாசமான செய்தி வந்துள்ளது. பொதுவாகவே புது ஐபோன் வந்த பிறகு பழைய மாடல்களின் விலை குறையும். அத்துடன் சேர்ந்து இப்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மேலும் மெகா சலுகைகளை அறிவித்துள்ளன. இதன் மூலம் மிகவும் குறைந்த விலைக்கு ஐபோன்களை பெற முடியும்.
மிகக் குறைந்த விலை: இதில் ஐபோன் 12 மொபைலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக குறைந்த விலையில் வாங்கலாம். அதேபோல ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 மாடல்கள் விலையும் இதுவரை இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. எனவே, நீங்கள் ஐபோன்களை வாங்க வேண்டும் என நினைத்தால் இதுவே சிறந்த நேரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இத்துடன் குறிப்பிட்ட கார்டுகளை பயன்படுத்துவது, பழைய மொபைலை எக்ஸ்சேஞ் கொடுப்பது மூலம் இன்னும் குறைவான ரேட்டிற்கு நம்மால் ஐபோன்களை பெற முடியும்.
அதன்படி பார்க்கும் போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ஐபோன் 12 வெறும் 38,999 ரூபாய்க்கு வாங்க முடியும். இதே ஐபோனை ஆப்பிள் நிறுவனம் கடந்த 2020 ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட கார்டுகளை பயன்படுத்தி 3,000 ரூபாய், பழைய மொபைல்களை மாற்றுவதன் மூலம் கூடுதலாக 3,000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் சலுகை பெற முடியும். இதன் மூலம் வெறும் 32,999 ரூபாய்க்கு வாங்க முடியும். மேலும் இஎம்ஐ ஆப்ஷனில் மாதம் ரூ.1500க்கு ஐபோன் 12 மாடலை வாங்கலாம்.
புது மாடல்களுக்கும் தள்ளுபடி: அடுத்து ஐபோன் 13 மாடலையும் அமேசான் தளத்தில் மிகக் குறைந்த விலையில் வாங்க முடியும். கடந்த 2021இல் ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 13 மாடல் விலையும் குறைந்த விலையில் விற்பனையாக உள்ளது. இன்னும் அதன் விலை அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், இது 40 ஆயிரத்திற்குக் கீழ் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இதிலும் கார்ட் மற்றும் மொபைல் எக்ஸ்சேஜ் மூலம் விலையைக் குறைக்கலாம்.
அதேபோல கடந்தாண்டு 79,900 ரூபாய் மற்றும் 89,900 ரூபாய்க்கு வெளியான ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் மாடல்களையும் இந்த விற்பனையில் குறைந்த விலைக்கு வாங்க முடியும். ஐபோன் 14 மாடல் 50 ஆயிரம் ரூபாய்க்குக் கீழும், ஐபோன் 14 பிளஸ் 50 ஆயிரம் விற்பனையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications