ஜியோவில் ரூ. 899க்கு ரீசார்ஜ் செய்தால்.. ரூ. 3350 மிச்சம்.. அம்பானி அள்ளி தரும் தீபாவளி பரிசு! செம
டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தீபாவளிக்காக ஸ்பெஷலாக இரண்டு ஆஃபர்களை இறக்கியுள்ளது. இந்த ஸ்பெஷல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் உங்களுக்கு ரூ.3350 மதிப்பிலான சலுகைகள் கிடைக்கும். எனவே, இந்த வாய்ப்பை மிஸ் செய்ய வேண்டாம். இந்த ஆஃபரை எப்படிப் பெறலாம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாகத் தீபாவளி இருக்கிறது. தீபாவளி சமயத்தில் எப்போதும் பல்வேறு நிறுவனங்களும் பெரிய சலுகைகளையும் அறிவிக்கும்.

அதன்படி பிரபல டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி தமாக்கா ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ரீசார்ஜ்ஜை நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் யூசர்கள் ஒரு ஆண்டுக்கு டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜியோ: அதாவது ரூ. 3599 கொடுத்து ரீசார்ஜ் செய்தால் தினசரி 2.5 ஜிபி டேட்டா நமக்கு கிடைக்கும். அதாவது மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா இதன் மூலம் நமக்கு கிடைக்கிறது. இது தவிர தினசரி 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடட் கால்களும் இதில் நமக்கு கிடைக்கும்.
2 ரீசார்ஜ் பிளான்: 3599 ரூபாய் கொடுத்து எல்லாம் என்னால் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பவர்களுக்கு ரூ.899இல் இன்னொரு பிளானையும் தீபாவளிக்காக ஜியோ நிறுவனம் இறக்கியுள்ளது. இந்த திட்டம் மொத்தம் 3 மாதங்களுக்குச் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ் நமக்கு தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர கூடுதலாக 20 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். அதாவது தினசரி 2 ஜிபி லிமிட்டை தாண்டிவிட்டால் இதில் இருந்து நமக்கு டேட்டா கிடைக்கும். இது தவிர வழக்கம் போல தினசரி 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடட் கால்களும் இதில் நமக்குக் கிடைக்கும்.
மேலும், இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டத்திலும் நமக்கு தேசியளவில் ரோமிங் தனியாக கிடையாது. மேலும், இவை தினசரி 2 ஜிபி டேட்டா திட்டத்திற்கு மேல் வருவதால், இதில் அன்லிமிடட் 5ஜி சேவை கிடைக்கும். அதாவது தினசரி லிமிட்டை முடித்தாலும் நீங்கள் 5ஜி சேவை இருக்கும் பகுதியில் இருந்தால் உங்களுக்கு அன்லிமிடட் டேட்டாவை பயன்படுத்தலாம்.
ரூ.3350 மிச்சம்: இந்த தீபாவளி தமாக்கா திட்டத்தில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.3350 மதிப்பிலான ஸ்பெஷல் கூப்பன்களும் கிடைக்கும். அதாவது 3000 ரூபாய் மதிப்பிலான ஈஸ் மை டிரிப் வவுச்சர் தரப்படும். ஊருக்குச் செல்ல அல்லது திரும்ப இதை வைத்து நீங்கள் டிக்கெட் புக் செய்யலாம். மேலும், AJIO மூலம் ரூ.999க்கு மேல் ஆர்டர் செய்வோருக்கு ரூ.200 சலுகை தரும் கூப்பனும் வழங்கப்படும். இது தவிர உணவு டெலிவரியில் ரூ.150 ஆஃபரும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் ரூ.3350க்கு சலுகை கிடைக்கும். அதேநேரம் இவை நவ. 5 வரை மட்டுமே செல்லுபடியாகும். எனவே, அதிலும் கவனம்.
இந்த வவுச்சர்களை பயன்படுத்த மைஜியோ செயலியில் ஆஃபர் பிரிவுக்குச் சென்று ரீசார்ஜ் செய்யுங்கள். பிறகு 'My Winnings' என்ற இடத்தில் உங்களுக்கான கூபன்கள் கிடைக்கும். குறிப்பிட்ட இரண்டு திட்டங்களில் ரீசார்ஜ் செய்வோர் இதை மைஜியோ செயலியில் இந்த கூப்பன்களை பெற்றுக் கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications