"ரூ.30 ஆயிரம் தள்ளுபடி.." மிக குறைந்த விலையில் ஐபோன் 14 வாங்கலாம்! மெகா டிஸ்கவுண்ட் பெறுவது எப்படி
டெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல்கள் அதிரடி தள்ளுபடியில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. அது என்ன டிஸ்கவுண்ட்.. அதை எப்படி பெற வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நீங்கள் உங்கள் முதல் ஐபோனை வாங்கத் திட்டமிட்டால் உடனடியாக இப்போது அமேசானில் இருக்கும் டீல்களை பார்க்க வேண்டும். அதில் ஐபோன்களுக்கு மிகப் பெரிய தள்ளுபடியைக் கொடுத்துள்ளனர்.

ஐபோன் 14 வெளியாகி இப்போது ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இப்போது அந்த மொபைலுக்கு அமேசானில் மிக பெரிய தள்ளுபடி கிடைத்துள்ளது. ஐபோன் 14 அமேசானில் ரூ.60,000க்கு கீழ் இப்போது விற்கப்பட்டு வருகிறது. அதிலும் எக்ஸ்சேஞ்ச் மற்றும் வங்கி சலுகைகள் எல்லாம் சேர்த்தால் ரூ.50,000 கீழ் இந்த ஐபோனை வாங்க முடியும்.
ஐபோன் 14 தள்ளுபடி: இந்த ஐபோன் வெளியான போது இதன் விலை ரூ.79,900ஆக இருந்தது. ஐபோன் 15 வெளியான பிறகு இதன் விலை ரூ.69,900ஆகக் குறைக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் அதன் விலை டிஸ்கவுன்ட் செய்யப்பட்டு ரூ. 58,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமேசானில் நீங்கள் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் மேலும் டிஸ்கவுன்ட் கிடைக்கும். குறிப்பாக ஐபோன் வைத்திருந்தால் அதிக டிஸ்கவுன்ட் கிடைக்கும். அதிகபட்சம் ஐபோன் 13ஐ நீங்கள் வைத்திருந்தால் உங்களுக்கு ரூ. 27,000வரை தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் ஆக்சிஸ் வங்கியின் கிரெட்டிட் கார்டு வைத்திருந்தால் உங்களுக்குக் கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். புதிய மொபைல் வாங்க விரும்புவோர் தவிர்க்கவே முடியாத ஆப்பராக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஐபோன் 14: ஆப்பிள் ஐபோன் 14 கடந்த 2022 செப். மாதம் வெளியானது. ஐபோன் 14 ஒரு சக்திவாய்ந்த மற்றும் பல வசதிகள் நிறைந்த ஸ்மார்ட்போன் ஆகும். ஐபோன் 14இல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்ப்ளே இருக்கிறது. மேம்பட்ட அனுபவத்தைக் கொடுக்க இதில் மிகவும் மெலிதான பார்டர்களே இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவில் ஹெச்.டி.ஆர் சப்போர்ட்டும் இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே அதிகபட்சம் 1200-நிட் வரை பிரகாசமாக இருக்கும். பாதுகாப்பிற்காக இதில் ஃபேஸ் ஐடியும் தரப்பட்டுள்ளது.
அம்சங்கள்: இந்த மொபைலில் ஐபோன் 14 A15 பயோனிக் சிப் இருக்கிறது. அதிநவீன இந்த சிப் ஒரு மேம்பட்ட அனுபவத்தை யூசர்களுக்கு தருகிறது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என்று மூன்று ஆப்ஷன்களில் இந்த மொபைல் நமக்கு கிடைக்கிறது. உங்கள் தேவைக்கு ஏற்ப அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், இந்த மொபைல் iOS 16இல் இயங்குகிறது. அதில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது. இந்த மொபைலில் நாம் அதிவேக 5ஜி சேவையை பயன்படுத்தலாம். மேலும் இதில் வைபை, இரட்டை சிம், புளூடூத், ஜிபிஎஸ், லைட்டிங் போர்ட் என அனைத்துமே இருக்கிறது.
போட்டோ மற்றும் வீடியோவை பொறுத்தவரை ஐபோன் 14 இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பிரதான 12MP கேமரா குறைந்த வெளிச்சத்தில் கூட அழகான புகைப்படங்களை எடுக்கக்கூடியது., மேலும் அதில் மற்றொரு 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும் உள்ளது. சிறந்த டைனமிக், டால்பி விஷன் மூலம் உயர்தர வீடியோக்களையும் இதில் நாம் எடுக்கலாம்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications