நெட் சீக்கிரம் காலி ஆகுதா.. இதை செய்தால் இனி எப்போதும் அன்லிமிடெட் டேட்டா தான்.. இதை படிங்க முதல்ல
சென்னை: உங்களுக்கு டேட்டா சீக்கிரம் காலி ஆகுதே.. அடிக்கடி Add on பேக் போட வேண்டிய நிலை இருக்கா.. இனிமேல் கவலை வேண்டாம்.. எப்போதும் அன்லிமிடெட் டேட்டா கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் எல்லாமே இணையத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜியோவின் வருகைக்குப் பிறகு அன்லிமிடெட் டேட்டா என்பது பரவலானது.

இந்த அன்லிமிடெட் டேட்டா என்பது பலருக்கும் பல்வேறு விதங்களில் உதவி இருக்கிறது. மேலும் பல்வேறு துறைகள் அடுத்த கட்டத்திற்குச் செல்லவும் காரணமாக இருந்துள்ளது.
டேட்டா: அன்லிமிடெட் டேட்டா வருவதற்கு முன்பு ஒரு சில ஜிபி டேட்டாவுக்கே நாம் பெருந்தொகையைச் செலவு செய்ய வேண்டி இருந்தது. அந்த காலகட்டத்தில் தெரியாமல் யூடியூப்பை ஓபன் செய்தாலே நெட் காலியாகிவிடுமோ என பதறியடித்து கொண்டு க்ளோஸ் செய்யும் சூழலே இருந்தது. ஆனால், அன்லிமிடெட் டேட்டா வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறி போனது.
இது நமக்கு பல்வேறு வழிகளிலும் உதவி இருக்கிறது. இந்த யூடியூப்பில் வீடியோ பதிவிட்டே பெரிய ஆள் ஆனவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். யூடியூப் வீடியோ க்ரியேட்டர்களுக்கு தனியாக ஒரு மார்கெட்டையே திறந்து விட்டது இந்த அன்லிமிடெட் டேட்டா தான் என்றால் மிகையில்லை. அந்தளவுக்கு இது முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
அன்லிமிடெட் டேட்டா: குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது. அப்போது நாம் பல மாதங்கள் வீட்டை விட்டு வெளியே கூட வர முடியாத சூழலே இருந்தது. மாணவர்களாலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவிய நிலையில், அவர்களின் கல்வி தடை இருக்கவும் அவர்கள் தொடர்ந்து பாடங்களைப் படிக்கவும் இந்த அன்லிமிடெட் டேட்டா தான் உதவியுள்ளது.
இந்த அன்லிமிடெட் டேட்டா 4ஜியாக டெலிகாம் நிறுவனங்கள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது நமக்கு 5ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டது. முன்பு ஒரு சில நிறுவனங்களில் மட்டும் 5ஜி மொபைல் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது வெளிவரும் பல மொபைல்களும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு இருக்கிறது. அதற்கும் எப்போதும் அன்லிமிடெட் டேட்டா பெறவும் என்ன தொடர்பு இருக்கிறது என கேட்கிறீர்களா.. இரண்டும் தொடர்பு இருக்கவே செய்கிறது
எப்படி:அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்பு ஒரு முக்கியமான விஷயம் இந்த அன்லிமிடெட் டேட்டா என்பது ஜியோவில் மட்டுமே பெற முடியும். சரி விஷயத்திற்கு வருவோம். பொதுவாக நாம் மொபைல் ரீச்சார்ஜ் செய்யும் போது தினசரி 2 ஜிபி, 2.5 ஜிபி டேட்டா தரும் பிளானை தான் எடுத்துக் கொள்வோம் .
ஜியோவை பயன்படுத்துவோர் பொதுவாக 666 ரூபாய் பேக்கை ரிசார்ஜ் செய்வார்கள். இதில் நமக்கு 90 நாட்களுக்குத் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும், 5 ஜிபி டேட்டா அன்லிமிடெட்டா கிடைக்கும். ஆனால், இதை விடக் குறைந்த விலை நம்மால் அன்லிமிடெட் டேட்டாவை பெற முடியும்.
இது சூப்பரா இருக்கே: 365 ரூபாய்க்கு ஒரு பிளான் இருக்கிறது. இதில் 84 நாட்கள் நமக்கு இணையச் சேவை கிடைக்கும். தினசரி ஜிபி இல்லாமல் மொத்தமாகவே 6 ஜிபி தான் கிடைக்கும். மொத்தமே 6 ஜிபி தான் கிடைக்கிறது. இதில் எப்படி அன்லிமிட்டேட் டேட்டா கிடைக்கும் என நீங்கள் கேட்கலாம். இதில் 4ஜி சேவை தான் 6 ஜிபி கிடைக்குமே தவிர 5ஜி டேட்டா அன்லிமிடெட் தான்.
எனவே, உங்களிடம் 5ஜி இருந்தால் போதும் அன்லிமிட்டேட் டேட்டா கிடைக்கும். மேலும், இப்போது பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவை வந்துவிட்ட நிலையில், நீங்கள் கவலையே இல்லாமல் அன்லிமிட்டேட் டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த ஒரு பிளான் மட்டுமின்றி 239 ரூபாய்க்கு மேல் இருக்கும் அனைத்து பிளான்களிலும் 5ஜி அன்லிமிடெட் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications