இனி பிரச்னை இல்லை.. இன்டர்நெட் இல்லைனாலும் யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம்! எப்படி தெரியுமா! ரொம்பவே ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: யுபிஐ மூலம் பணம் அனுப்பும் போது திடீரென இணையம் கட் ஆகிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம். இதன் மூலம் ஆப்லைனில் எளிதாகப் பணத்தை அனுப்ப முடியும்.

இந்த நவீன உலகில் எல்லாம் மொபைல் என்று ஆகிவிட்டது. இதனால் வங்கி சேவையும் தலைகீழாகவே மாறிவிட்டது. முன்பெல்லாம் சின்னதாகப் பணம் அனுப்பக் கூட வங்கிக்குச் சென்று பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

 How to Make UPI Payments Without an Internet Connection A Step-by-Step Guide

ஆனால் இப்போதெல்லாம் அது தேவையில்லை. எத்தனை ரூபாயாக இருந்தாலும் ஈஸியாக மொபைல் வழியாகவே பணத்தை அனுப்பி விடலாம். அதிலும் குறிப்பாக யுபிஐ வந்த பிறகு பணம் அனுப்புவது ரொம்பவே சுலபமான ஒன்றாக மாறிவிட்டது.

யுபிஐ: பொதுவாக யுபிஐ மூலம் பணம் அனுப்ப இணையச் சேவை நமக்குக் கட்டாயம் தேவைப்படும். கூகுள் பே, பேடிஎம், போன்பே என எந்த யுபிஐ முறையில் பணத்தை அனுப்பினாலும் இணையம் கட்டாயம் தேவைப்படும். இருப்பினும், கடையில் பொருளை வாங்கும் போது திடீரென இணையம் கிடைக்கவில்லை என்றால் பணத்தையும் அனுப்ப முடியாமல் திணறிக் கொண்டிருப்போம். அதுபோன்ற நேரங்களில் உங்களுக்கு இந்த ஆப்ஷன் உதவியாக இருக்கும்.

இதன் மூலம் இணையச் சேவை இல்லையென்றாலும் யாருக்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். இதற்காக நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து *99# என்று டைப் செய்ய வேண்டும். இந்த சேவைக்குUnstructured Supplementary Service Data என்று அர்த்தம்.. இதன் மூலம் இணையச் சேவை இல்லாமல் ஒருவருக்குப் பணத்தை அனுப்ப முடியும். பணம் அனுப்புவது மட்டுமின்றி வங்கி பேலன்ஸை கூட இதில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

 How to Make UPI Payments Without an Internet Connection A Step-by-Step Guide

ஆப்லைன் மோட்: நாடு முழுக்க இந்த *99# சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.. நாடு முழுக்க உள்ள 83 முன்னணி வங்கிகளின் சேவையை இதன் மூலம் பெறலாம். மேலும், 4 டெலிகாம் நிறுவனங்களில் இந்த சேவையைப் பெறலாம். ஆங்கிலம், இந்தி, தமிழ் உட்பட 13 வெவ்வேறு மொழிகளில் இதன் மூலம் பணம் அனுப்ப முடியும். இதன் மூலம் ஆஃப்லைனில் யுபிஐ மூலம் பணத்தை அனுப்ப முடியும்.

ஆப்லைன் முறையில் பணத்தை அனுப்ப முதலில் நீங்கள் அதற்காக செட்அப் செய்ய வேண்டும். அதன்படி உங்கள் மொபைலில் இருந்து *99# என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே மொபைல் எண்ணில் இருந்து கால் செய்யுங்கள். அப்போது மட்டுமே உங்களால் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும். வங்கிக் கணக்கை லிங்க் செய்யாத மொபைலில் இருந்து இந்த சேவையைப் பயன்படுத்த முடியாது.

எப்படி அனுப்ப வேண்டும்: அடுத்து உங்களுக்குத் தேவையான மொழியைத் தேர்ந்தெடுத்து வங்கிப் பெயரை டைப் செய்யவும். அதன் பிறகு அந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள் குறித்த டேட்டாக்கள் உங்களுக்குக் காட்டப்படும்.. அதில் தேவையான வங்கிக் கணக்கைத் தேர்வு செய்யுங்கள்.. அடுத்து ​​உங்கள் டெபிட் கார்டின் கடைசி 6 எண்கள், காலாவதி தேதி ஆகியவற்றை டைப் செய்யவும். இந்த செட்அப்பை முடித்தால் போதும்.. அதன் பிறகு இணையம் இல்லாமல் யுபிஐ மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்..

அடுத்து பணத்தை எப்படி இந்த முறையில் அனுப்ப வேண்டும் என்பதைப் பார்க்கலாம். முதலில் உங்கள் மொபைலில் *99# டயல் செய்யுங்கள். பணத்தை அனுப்ப 1ஐ டைப் செய்யவும்.. அடுத்து தேவையான ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். பிறகு அனுப்ப வேண்டிய நபரின் யுபிஐ ஐடி அல்லது மொபைல் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை டைப் செய்யவும். பிறகு கடைசியாக யுபிஐ பின்னை டைப் செய்யவும்.

இதை மட்டும் செய்தால் போதும் எளிமையாகப் பணத்தை அனுப்பிவிடலாம்.. இந்த *99# சேவையைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய ரூ. 0.50 செலுத்த வேண்டும்.. இதன் மூலம் ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சம் ரூ. 5,000 வரை அனுப்ப முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+