நம்பரை சேவ் பண்ணவே வேணாம்..அப்படியே மெசேஜ் அனுப்பலாம்! வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்! எப்படி செய்வது?
சென்னை: வாட்ஸ்அப்பில் ஏதாவது ஒரு புதிய எண்ணுக்கு மெசேஜ் செய்வதற்காக, இனி அந்த எண்ணை காண்டாக்ட் லிஸ்ட்டில் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆண்ட்ராய்டோ, ஆப்பிள் போனோ தெரியாத நபர்களின் எண்களை இனி சேவ் செய்யாமலேயே நேரடியாக வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய முடியும்.
வாட்ஸ்அப் தொடங்கப்பட்டது முதல் அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. முதலில் மெசேஜிங் தளமாக இருந்த வாட்ஸ் அப், குரூப் சாட், வாய்ஸ் கால், வீடியோ கால், யுபிஐ பேமெண்ட் வசதி என அடுத்தடுத்த அப்டேட்களால் பயனர்களை ஈர்த்து, இன்று உலகின் முன்னணி மெசஞ்சர் தளமாக உள்ளது.

வாட்ஸ் அப் பயனர்களால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் கூட நாம் வாட்ஸ் அப் மூலமாக மெசேஜ் அனுப்ப முடியும், சாட் செய்ய முடியும்.
முன்னதாக, யாருக்காவது வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணை சேமிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. தற்போது ஒருவரின் நம்பரை சேவ் செய்யாமலேயே வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் செய்யலாம்.
ஏற்கனவே பல்வேறு தேர்டு பார்ட்டி ஆப்ஸ் மூலமாக யூசர்கள் தங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் நம்பரை சேர்க்காமலேயே செய்திகளை அனுப்ப முடியும். ஆனால் அந்த செயலிகள் நமது போனுக்கு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துவதோடு, நமது டேட்டாவையும் திருடக்கூடும். இப்போது வாட்ஸ் அப்பே நம்பரை சேமிக்காமல் சாட் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி?:
1. வாட்ஸ்அப் மெசஞ்சரை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
2. வலது புறம் கீழே இருக்கும் நியூ சாட் பட்டனை ஓபன் செய்யுங்கள்.
3. மேலே லென்ஸ் வடிவில் உள்ள பட்டனை க்ளிக் செய்து தாங்கள் மெசேஜ் செய்ய விரும்பும் எண்ணை அழுத்த வேண்டும்.
4. அந்த எண்ணுக்கு அருகில் சாட் என ஆப்ஷன் வரும்.
5. அதை கிளிக் செய்தால் போதும், அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications