உங்க போன்ல இந்த சத்தம் வருதா? காதுகிட்ட கொண்டு போகவே கூடாது! “அலர்ட்”.. 6 பாயிண்ட்ஸை மறக்காதீங்க!
சென்னை: மொபைல் போன்கள் வெடித்துச் சிதறி உயிர் பலி நேரும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. மொபைலில் இருந்து சில சத்தங்கள் வரும்போது நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மொபைலில் இருந்து சில அறிகுறிகளை உணர்ந்தால் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பார்க்கலாம்..
இன்று நம் அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை பெரும்பாலான நேரத்தை நாம் மொபைல் போனுடன் தான் கழிக்கிறோம். ஸ்மார்ட் போன்கள் சில நேரங்களில் வெடிக்கும் நிகழ்வுகளை கேள்விப் பட்டிருப்போம். தமிழ்நாட்டிலும் அவ்வப்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அண்மையில் கூட தஞ்சாவூரில் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தபோது போன் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மொபைல் போன் அபாயம்: மொபைல் போன்கள் வெடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசும்போது, நீண்ட நேரம் தொடர்ந்து சார்ஜ் போட்டிருக்கும்போது, நீண்ட நேரம் கேம் விளையாடும் போது, தொடர்ச்சியாக இன்டெர்நெட் பயன்படுத்தும்போது மொபைல் அதிகம் சூடாகி வெடிக்கக்கூடும். மொபைல் பேட்டரியில் ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாகவே பெரும்பாலும் வெடிக்கக்கூடும். எனவே, ஒரிஜினல் பேட்டரி மற்றும் சார்ஜரையே பயன்படுத்துவது நல்லது.
நாம் சார்ஜ் போடும் விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருந்தாலும், மொபைலில் ஏற்படும் சில ஹார்ட்வேர் பிரச்சனைகளின் காரணமாகவும் மொபைல்கள் வெடிக்கக்கூடும். அவற்றை நாம் முன்னறிந்து போன் வெடிப்பதை தவிர்ப்பது கடினம். ஆனால், போன் அசாதாரண நிலையில் இருப்பதை உணர்ந்து, அதன் அருகில் செல்லாமல் இருந்தால் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
போன் வெடிக்கும் முன் அறிகுறிகள்: ஒரு சில அறிகுறிகள் மூலமாக போன் வெடிக்கப் போகிறது என்பதை உணரமுடியும். உங்கள் போனில் இருந்து "ஹிஸ்ஸ்" என்ற சத்தமோ அல்லது அசாதாரணமான பாப்பிங் சத்தம் எதுவும் கேட்டாலோ அல்லது பிளாஸ்டிக்/ சிப் எரியும் வாசனை ஏற்பட்டாலோ, போனில் இருந்து புகை வருவது போல தோன்றினாலோ உங்களது போன் சேதமடைந்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். பேட்டரி வீங்கிப்போய் இருந்தால், ஒருவேளை அது வெடிக்கவும் கூடும்.
1. இதுபோன்ற நேரங்களில் உங்களது முகத்தை போனிற்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.
2. போனின் எந்தப் பகுதியில் இருந்து சத்தம் வருகிறது என அறிவதற்காக காதுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது.
3. சூடாக இருக்கிறதா என்பதை பார்ப்பதற்காக உங்கள் கைகளுக்குள் வைத்து அழுத்தம் கொடுக்கக் கூடாது.
4. உங்கள் போன் சார்ஜில் இருந்தால், அதனை உடனடியாக சார்ஜில் இருந்து அன்பிளக் செய்து விட வேண்டும்.
5. மேற்கொண்டு போனை பயன்படுத்தாமல், உரிய சர்வீஸ் செண்டருக்கு கொண்டு சென்று பரிசோதிக்க வேண்டும்.
6. நீங்களாகவே, அதனை சார்ஜ் ஏற்றுவது, ஸ்விட்ச் ஆன் செய்ய முயற்சிப்பது, அந்த போனில் இருந்து யாருக்கேனும் அழைக்க முயற்சிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications