உங்க லக்கி நம்பர் அல்லது ஃபேன்சி நம்பரில் சிம் கார்டு வேணுமா? 5 ஸ்டெப் தான்.. ஜியோவில் ரொம்ப ஈசி!
சென்னை: உங்கள் லக்கி நம்பர்கள் உங்கள் போன் நம்பரில் இடம்பெற வேண்டுமா, நீங்கள் விரும்பும் ஃபேன்சி நம்பர்களில் உங்கள் மொபைல் எண் இருக்க வேண்டுமா? ஜியோவில் எளிதாகப் பெறலாம். 5 சிம்பிளான ஸ்டெப்களில் உங்களுக்கு விருப்பமான நம்பரில் ஜியோ சிம் உங்கள் வீடு தேடி வரும்.
பெரும்பாலானோர், தங்களது அதிர்ஷ்ட எண், பிறந்த தேதி அல்லது வேறு ஏதேனும் விருப்பமான பெர்சனல் நம்பர்களை தொலைபேசி எண்ணில் வைக்க விரும்புகின்றனர். பைக் அல்லது கார்களின் பதிவு எண்களை தங்களுக்கு விருப்பமான நம்பரில் பெற லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் இருக்கிறார்கள்.

அதேபோல் மொபைல் எண்களிலும், ஃபேன்சியான நம்பர் அல்லது லக்கி நம்பர்களை பெற பலர் அதிக பணம் செலவு செய்கின்றனர். வோடஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் உள்ள பல நிறுவனங்கள் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் மொபைல் எண்களின் குறிப்பிட்ட இலக்கங்களை வழங்குகின்றன.
இப்போது ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்கள் எளிதாக விஐபி எண்களைப் பெற வழி செய்கிறது. ஜியோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் தங்களுக்கு விருப்பமான எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஜியோ வெப்சைட்டிற்கு சென்று வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணை எடுத்துக் கொள்ளலாம்.
விஐபி நம்பர் பெறுவது எப்படி?:
1. ஜியோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான https://www.jio.com சென்று, அதில் Self care பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அதில் Choice number என்பதை செலக்ட் செய்யவும். அல்லது நேரடியாக https://www.jio.com/selfcare/choice-number/ இந்த லிங்க்கை க்ளிக் செய்யலாம்.
2. அடுத்து, Book a choice number என்ற பகுதியில் உங்கள் தற்போதைய எண்ணை பதிவிட வேண்டும்.
3. அதன் பிறகு உங்களுக்கு கிடைக்கும் OTP எண் மூலம் உள்நுழையவும்.
4. அதன் பிறகு நீங்கள் விரும்பும் ஜியோ எண்ணில் இணைக்க விரும்பும் கடைசி 4 முதல் 6 இலக்கங்களை உள்ளிடவும். நீங்கள் விரும்பும் அதிர்ஷ்ட எண்கள் அல்லது ஃபேன்சி நம்பரை குறிப்பிடலாம்.
5. தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த எண்ணை ஆக்டிவேட் செய்ய ரூ.499 செலுத்த வேண்டும்.

நீங்களே தேர்ந்தெடுத்த உங்கள் புதிய ஜியோ எண் 24 மணி நேரத்திற்குள் செயல்படுத்தப்படும். மிக விரைவாக உங்கள் சிம் கார்டும் டெலிவரி செய்யப்படும். சிம் டெலிவரி நேரத்தில், ஜியோ ஏஜெண்டிடம் புக்கிங் கோடை கன்ஃபார்ம் செய்ய வேண்டியிருப்பதால், முன்பதிவுக் குறியீட்டை சேமித்து வைக்கவும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications