இது சூப்பரா இருக்கே.. இணைய இணைப்பே இல்லாமல் யுபிஐ பணம் அனுப்பலாம்! ஸ்மார்ட்போனும் வேணாம் - எப்படி?
சென்னை: தற்போது பலரும் கையில் பணம் வைத்திருக்காமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவே பணம் செலுத்தி வரும் சூழலில், இணையதள இணைப்பு இன்றி டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் பல விசயங்கள் எளிமையாக மாறிவிட்டன. கையில் வைத்திருக்கும் செல்போன் மூலமாகவே அலைச்சல் இல்லாமல் சில நொடிகளில் இருக்கும் இடத்திலேயே பல வேலைகளை மக்கள் முடித்து விடுகின்றனர். குறிப்பாக கையில் பணத்தை எடுத்து செல்லாமல், ஏடிஎம் சென்றும் பணம் எடுக்காமல் வங்கிக் கணக்கில் இருந்தே நேரடியாக யுபிஐ மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பிவிடுகிறோம்.

அதே நேரம் பலர் யுபிஐ வசதியை நம்பி பணத்தை கொண்டு செல்லாமல், இணையதள இணைப்பு, செல்போன் சிக்னல் இன்றி கடைசி நேரத்தில் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் நடக்கிறது. இந்த நிலையில், இணையதள இணைப்பு கூட இல்லாமல், சாதாரண பேசிக் செல்போனில் யுபிஐ மூலம் பணத்தை அனுப்பும் வசதி உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாவிட்டாலும் அதுதான் நிஜம். அது எப்படி என்று பார்ப்போம்.
இந்த வசதியை வழங்குவது பிரபல தனியார் வங்கியான HDFC தான். இந்த வங்கி சமீபத்தில் யுபிஐ-உடன் இணைந்து மூன்று அம்சங்களை அறிமுகம் செய்து உள்ளது. ஒன்று UPI 123 Pay, இரண்டாவது வியாபாரிகளுக்கான யுபிஐ பிளக் இன் சர்வீஸ், மூன்றாவது கியூஆர் கோடு ஆட்டோ பே.
சரி இவற்றில் இணையதள இணைப்பு இல்லாமல் எப்படி பண பரிவர்த்தனை செய்வது என்று பார்ப்போம்.
1. UPI 123Pay:
UPI 123Pay என்பது ஐவிஆர் மூலமாக பணம் செலுத்தும் திட்டமாகும். சாதாரண போன் கால் மூலமாகவே இதை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். இதற்கு ஸ்மார்ட் போனோ, இணையதள வசதியோ தேவையில்லை. இண்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ் எனப்படும் ஐவிஆர் தொழில்நுட்பம் மூலமாக வாடிக்கையாளர்கள் பதிவு செய்துகொண்டு பணம் செலுத்த முடியும்.
2. யுபிஐ பிளக் இன் சர்வீஸ்:
யுபிஐ பிளக் இன் சர்வீஸ் என்ற அம்சம், யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துகிறது. வெவ்வேறு செயலிகளுக்கு மாறி மாறி சென்று பணம் அனுப்பும் சிரமத்தை இது போக்குகிறது.
3. கியூஆர் கோடு ஆட்டோ பே:
ஓடிடி தளங்கள் போன்று மாதாந்திர சந்தா செலுத்தும் சேவைகள், செல்போன், இணையதளம், கேபிள் மற்றும் டிடிஎச் சேவைகளுக்கான சந்தாக்களை நாமாக செலுத்துவதை தவிர்த்து, தாமாக QR கோடு தொழில்நுட்பம் மூலம் செலுத்து வசதிதான் இந்த ஆட்டோ பே.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications