உங்க லேப்டாப் அடிக்கடி ஹேங் ஆகுதா? சிஸ்டமை டபுள் மடங்கு ‘ஸ்பீட்’ ஆக்க சிம்பிளான 7 வழிகள்!
சென்னை: லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பை நாள் முழுவதும் அலுவலக வேலைக்காக பயன்படுத்தும் அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை 'ஹேங்' ஆவது. தொடர்ச்சியாக வேலை செய்யும்போது மனிதர்களைப் போல கணினியும் சோர்வடைந்து விடுகிறது. உங்கள் லேப்டாப் ஹேங் ஆவதை தவிர்த்து ஸ்பீட் அப் செய்வது எப்படி? இங்கே சில எளிமையான டிப்ஸ்!
RAM பிரச்சனை: லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களுக்கு முக்கியமானது அதன் RAM. இது தற்காலிகமாக பைல்களை சேகரித்து வைத்துக் கொள்ளும் ஒரு நினைவகம். லேப்டாப்பை ஆன் செய்ததும் அதன் ஓஎஸ் செயல்படத் தொடங்குவது முதல் எந்தவொரு செயலி செயல்படவும் RAM மிகவும் அவசியம்.
RAM-ன் பெரும்பாலான பகுதி ஒஎஸ் செயல்படுவதற்கே சென்றுவிடும். அதுபோக நாம் செயல்படுத்தும் அனைத்திற்கும் போதுமான ரேம் வசதி இல்லாதபோது லேப்டாப் ஹேங் ஆகும். இதனைத் தவிர்க்க, தேவையில்லாத செயலிகள் செயல்பாட்டில் இருப்பதைக் குறைக்க வேண்டும். அல்லது ரேமை அப்கிரேட் செய்துகொள்ள வேண்டும்.

டாஸ்க் மேனேஜர்: விண்டோஸ் ஓஎஸ் பயனாளர்கள் Ctrl+Alt+Del பயன்படுத்தி டாஸ்க் மேனேஜரை (Task Manager) ஓபன் செய்து, அதில் அதிக RAM பயன்படுத்தும் தேவையற்ற அப்ளிகேஷன்கள் எவை என்பதனை கண்டறிந்து அதன் செயல்பாட்டை நிறுத்தலாம். இதன் மூலம் லேப்டாப் ஹேங் ஆவது பெருமளவில் தவிர்க்கப்படும்.
ஆப்பிள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பயனாளர்கள் Application Folderல் Utility Folder ஓப்பன் செய்து Activity Monitor சென்று தேவையற்ற செயலிகளை கண்டறிந்து அவற்றை நிறுத்தலாம். விண்டோஸை ஒப்பிடும்போது ஆப்பிள் சாதனத்தில் ஹேங் ஆகும் பிரச்சனை பெரிதாக இருக்காது.
பேக்ரவுண்ட் ஆப்ஸ்: உங்கள் லேப்டாப்பில் சில அப்ளிகேஷன்கள் பேக்ரவுண்டில் எப்போதும் செயல்பாட்டிலேயே இருக்கும். இது சார்ஜ், மெமரி, டேட்டா என அத்தனையையும் உறிஞ்சிக் கொண்டிருப்பதால் சிஸ்டம் சமயங்களில் ஹேங் ஆவதற்கு வழிவகுக்கும்.
இதனைத் தவிர்க்க, START பட்டனில் செட்டிங்ஸ் சென்று அதில் ப்ரைவசி ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். அதில் பேக்ரவுண்ட் ஆப்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் நுழைந்தால் எந்தெந்த ஆப்ஸ் பேக்ரவுண்டில் இயங்குகிறது என்பது காட்டப்படும். தேவையில்லாதவற்றிற்கு அனுமதி கொடுத்திருந்தால் அதனை நீக்கி விடலாம்.
டெம்ப் ஃபைல்ஸ்: நம் சிஸ்டமில் தேவையில்லாத மெமரியைப் நிறைய தற்காலிக ஃபைல்கள் அடைத்திருக்கும். இதனை எளிதாக க்ளீயர் செய்ய, ரன் கமாண்ட் க்ளிக் செய்து, அதில் %Temp% என அழுத்தி ஓகே கொடுத்தால் டெம்ப் ஃபைல்ஸ் திறக்கும். அதில் இருக்கும் எல்லா ஃபைல்களையும் மொத்தமாக நீக்கி விடலாம்.
செட்டிங்ஸ் சென்று ஸ்டோரேஜ் க்ளிக் செய்தால், அதில் ஸ்டோரேஜ் சென்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை எனபிள் செய்துகொள்ளலாம். இது தானாகவே டெம்ப் ஃபைல்ஸ் மற்றும் ரீசைக்கிள் பின்னை சுத்தம் செய்துகொண்டே இருக்கும். இதனால் உங்கள் ஸ்டோரேஜ் ஃப்ரீ ஆவதால் உங்கள் சிஸ்டம் ஹேங் ஆவது ஓரளவுக்கு தவிர்க்கப்படும்.
மெமரி ஃபுல்: RAM-ஐ போலவே தகவல்களை சேகரித்து வைக்கும் மற்றொரு அம்சம் ஹார்ட் டிரைவ். லேப்டாப்பில் இருக்கும் ஹார்ட் டிரைவானது நிறைந்து விட்டாலும் உங்களது சிஸ்டம் மெதுவாக இயங்கத் தொடங்கும். இதைத் தவிர்க்க ஹார்ட் டிரைவில் அதிகமாக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஃபைல்களை அழிக்க வேண்டும்.
இப்போது போட்டோ, வீடியோ என தகவல்களை சேகரித்து வைக்க அனைத்து நிறுவனங்களும் க்ளவுட் வசதியை வழங்குகின்றன. கிளவுடில் சேமித்து வைத்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். இதனால் நமது கணினியில் போதுமான இடம் கிடைக்கும்.
ஓஎஸ் அப்டேட்: நாம் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம் அப்டேட்டடாக இல்லாதபோதும், கணினி ஹேங் ஆகக்கூடும். லேப்டாப்பின் OS அப்டேட்டடாக உள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள, விண்டோஸ் பயனாளர்கள் Start பட்டனில் இருக்கும் Settings-க்கு சென்று, Update and Security என்பதில் இருக்கும் Windows Update என்பதைக் கிளிக் செய்து செக் செய்யலாம்.
விண்டோஸ் அப்டேட் தேவையில்லை என்றால், விண்டோஸ் அப்டேட் சர்வீசஸ் பகுதிக்கு சென்று விண்டோஸ் அப்டேட்டை ஆட்டோமேட்டிக் என்பதில் இருந்து மேனுவலுக்கு மாற்றிக் கொள்ளலாம். அதேபோல மேக் பயனாளர்கள் System Preference-ல் இருக்கும் அப்டேட் என்ற தேர்வினை கிளிக் செய்து ஓஎஸ் அப்டேட் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓவர் ஹீட்டிங்: அதேபோல லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் ஓவராக சூடானாலும் ஹேங் ஆக வாய்ப்புகள் அதிகம். லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இருக்கும் கூலிங் ஃபேன் சரியாகச் செயல்படாவிட்டால் விரைவாக சிஸ்டம் ஹீட் ஆகிவிடும். இந்த அதிக வெப்பநிலை சர்க்யூட்டை சேதப்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டையும் குறைக்கும்.
வெப்பத்தைக் கடத்தும் தன்மை இல்லாத தளங்களில் லேப்டாப்புகளை வைத்து பயன்படுத்துவது இந்த பிரச்சனைகளை அதிகரிக்கும். அவ்வப்போது லேப்டாப்பை சுத்தம் செய்து, தூசிகளை நீக்கி கூலிங் ஃபேன் சரியாகச் செயல்படுகிறதா என்பதைக் கவனிப்பது மிகவும் அவசியம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications