மொழியே தெரியாத ஊரிலும் வாழலாம்.. இந்த ஒரு ஆப் மட்டும் இருந்தா போதும்.. நெட் கூட தேவையில்லை! எப்படி?
சென்னை: இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப உலகில், மொழி தெரியாத ஊருக்கோ, நாட்டுக்கோ கூட யார் உதவியும் இல்லாமல் சென்று திரும்பி விடலாம். ஒரே ஒரு ஸ்மார்ட் போன் உடன் இருந்தால் போதும். அதிலும் இந்த ஒரு ஆப் இருந்தால் போதும்!
நமக்கு இதற்கு ஒரு வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என நாம் யோசிப்பதற்குள் அதற்கான தீர்வை கண்டறிந்து வைத்திருக்கிறது கூகுள். அதனால் தான் டெக் உலகில் ஜாம்பவனாக இருக்கிறது கூகுள். கூகுள் டிரான்ஸ்லேட் வசதியை நம்மில் பலரும் தினந்தோறும் பயன்படுத்தி வருகிறோம்.

இந்த கூகுள் டிரான்சிலேட்டில் ஏராளமான புதிய அம்சங்களை அவ்வப்போது புகுத்தி வருகிறது கூகுள். நம் மொபைல் போனில் இன்டர்நெட் இல்லாத நிலையிலும் கூட கூகுள் டிரான்ஸ்லேட் வசதியை பயன்படுத்தலாம். அதற்கென கூகுள் டிரான்சிலேட் ஆப் உள்ளது.
கூகுள் டிரான்சிலேட் ஆப்பில், நமக்குத் தேவையான மொழிகளின் பேக்கேஜை டவுன்லோடு செய்து வைத்துக் கொண்டால், எப்போது வேண்டும் என்றாலும், இன்டர்நெட் வசதி கிடைக்காதபோதும், ஆஃப்லைனிலேயே டிரான்சிலேட் செய்து கொள்ளலாம்.
ஒரு விஷயத்தை ஒரு மொழியில் டைப் செய்து, அல்லது குரல் மூலமாக பதிவு செய்து அதனை மொழிபெயர்க்கலாம். அதை எல்லாம் விட அட்வான்ஸ்டாக, சைன் போர்டு, பேப்பர், விசிட்டிங் கார்டு, கையால் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றை புகைப்படங்களாக எடுத்தால் அதனையே நாம் விரும்பும் மொழியில் மொழிபெயர்த்து கூகுள் நமக்கு வழங்கிவிடும்.
நாம் மொழி தெரியாத மாநிலத்துக்கோ, அல்லது வேறு நாட்டுக்கோ செல்கிறோம் என்றால், அந்த ஊரின் மொழி பேக்கேஜை கூகுள் டிரான்சிலேட் ஆப்பில் டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம், ஆஃப்லைன் மோடில் அதாவது நெட் ஆன் செய்யாதபோதும் நாம் விரும்புவதை மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
உதாரணமாக நாம் மொழி தெரியாத ஒரு நாட்டில் ஒரு பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம். அது எந்த இடம் என்பதை அந்த உள்ளுர் மொழியில் குறிப்பிட்டுள்ளனர். அதை தெரிந்துகொள்ள கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்பை ஓப்பன் செய்து, கேமரா வழியாக அந்த போர்டை ஸ்கேன் செய்தாலே நீங்கள் வேண்டும் மொழியில் அதனை மொழிபெயர்த்துக் காட்டிவிடும்.
மொழி தெரியாத நாட்டில், நீங்கள் வேறொரு இடத்திற்குச் செல்ல வேண்டும், அப்போது ஒரு பேருந்து வருகிறது. அங்கு எங்கு செல்கிறது என்பதை அறிந்துகொள்ள, கூகுள் டிரான்ஸ்லேட்டில் பஸ் ரூட் போர்டை ஸ்கேன் செய்தால், ஒரே நொடியில் அது சொல்லிவிடும்.
பெயர் பலகைகள், ஹோட்டல் மெனு கார்டுகள் என முக்கியமான சில அந்தந்த நாடுகளின் மொழிகளில் இருக்கும் போது, அவற்றை உங்கள் போன் கேமராவில் ஸ்கேன் செய்தால் அதில் இருக்கும் தகவல்களை உங்கள் மொழியில் உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

இதனை எப்படி இயக்குவது?: 1. போனில், கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும்.
2. எந்த மொழியில் இருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
3. கூகுள் டிரான்ஸ்லேட் ஆப் ஸ்கிரீனில் இருக்கும் கேமரா ஐக்கானை க்ளிக் செய்யவேண்டும்.
4. கேமராவில் நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் விசிட்டிங் கார்டு, பெயர்ப்பலகை, ஹோட்டல் மெனு கார்டு, தகவல் பலகை போன்றவற்றை படம் பிடிக்க வேண்டும்.
5. அவ்வளவுதான், நீங்கள் படம் எடுத்த பொருளில் இருக்கும் வார்த்தைகள் அப்படியே நீங்கள் விரும்பும் மொழியில் டிரான்ஸ்லேட் ஆகிவிடும்.
6. குறிப்பிட்ட சில வார்த்தைகளை மட்டும் செலக்ட் செய்தும் டிரான்ஸ்லேட் செய்யலாம்.
7. மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தைகளை காப்பி செய்து வேறு இடங்களிலும் பயன்படுத்தலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications