உங்க வீட்டில் பழைய மொபைல் இருக்கா! அதுபோதும்.. திருட்டை 100% தடுக்கலாம்! அது எப்படி தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இப்படி அடிக்கடி நாம் மொபைல்களை மாற்றுவதால் பழைய மொபைல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அப்படியிருக்கப் பழைய மொபைல்கள் ஆக்கப்பூரமாக எப்படி யூஸ் செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

மொபைல்கள் என்பது ஆடம்பரமானது என்ற நிலையில் இருந்து இப்போது அத்தியாவசியமானது என்று மாறி விட்டது. இப்போது ஆண்டுக்குப் பல மொபைல் மாடல்கள் வெளியாகும் நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை மொபைலை மாற்றும் பழக்கம் அதிகரித்துள்ளது.

 How to Turn Your Old Smartphones Into CCTV Camera

இப்படி அடிக்கடி மொபைல் மாற்றுவதால் அனைவரது வீட்டிலும் சில மொபைல் மாடல்கள் தூசியில் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது. பல ஆயிரம் செலவழித்து வாங்கப்படும் மொபைல் நல்ல நிலையில் இருந்தும் பயன்படுத்த முடியாமல் போவது சங்கடம் தான்.

பழைய மொபைல்: புது மொபைல் எடுக்கும் போது எக்சேஞ் செய்யலாமா எனக் கேட்கலாம். இருப்பினும், அனைத்து மொபைல் மாடல்களுக்கும் எக்ஸ்சேஞ் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது இது எனச் சொல்லி மிகவும் சொற்பமான தொகையையே எக்ஸ்சேஞ்சில் தரும் போது நமக்குத் தருவார்கள். அதற்குப் பதிலாக மொபைலை வேறு எதற்காவது பயன்படுத்தலாமா என்று நீங்கள் யோசித்தது உண்டா. அப்படியொரு விஷயத்தைப் பற்றி நாம் இதில் பார்க்கலாம்.

சற்று யோசித்துப் பாருங்கள்.. இப்போது பெரும்பாலான மொபைல்களில் நல்ல கேமராக்கள் உள்ளன. மேலும், அதனால் இன்டர்நெட் உடனும் கனெக்ட் ஆக முடியும். மேலும், பேட்டரி இருப்பதால் மொபைல் போன்களால் மின்சாரம் இல்லாமலேயே பல மணி நேரம் வரை இயங்க முடியும். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் சிசிடிவி கேமராக்களாக இயங்க நமது பழைய மொபைல்கள் பக்காவாக இருக்கும். எது பழைய மொபைலை சிசிடிவி கேமராவாக மாற்ற முடியுமா என கேட்கிறீர்களா.. ஆம் முடியும். அது ரொம்பவே ஈஸி. அது எப்படி எனப் பார்க்கலாம்.

சிசிடிவி கேமரா: இதற்காக AlfredCamera உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இருக்கிறது. அவற்றை நீங்கள் உங்கள் மொபைல்களில் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அடுத்து நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மொபைலில் அந்த செயலியை ஓபன் செய்து, உங்கள் கூகுள் கணக்கில் இருந்து லாகின் செய்யுங்கள். அதில் Startஐ கிளிக் செய்து, அதில் Viewer என்பதை க்ளிக் Next என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அதேபோல உங்கள் பழைய மொபைலிலும் இதையே மீண்டும் செய்யுங்கள். இருப்பினும், அதில் Startஇல் Viewerக்கு பதிலாக கேமரா என்ற ஆப்ஷன் இருக்கும். அதைத் தேர்ந்தெடுங்கள். அவ்வளவுதான் இதைச் செய்தாலே போதும், அதன் பிறகு உங்கள் தேவைக்கு ஏற்ப தேவையான செட்டிங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

என்ன செய்யணும்: அடுத்து உங்கள் பழைய மொபைல்கள் எங்கு வைக்க விரும்புகிறீர்களோ.. அங்கு வைக்கலாம். அது தொடர்ந்து இங்க வேண்டும் என்பதால் அதை சார்ஜில் இணைத்துக் கொள்ளுங்கள். பழைய மொபைலை அங்கேயே வைத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் நீங்கள் போகலாம்.

அது இணையத்துடன் கனெக்ட் ஆகி இருக்கும் நிலையில், அது ஒரு சிசிடிவி கேமரா போல செயல்படும். உங்கள் மொபைலில் அந்த காட்சிகளை நீங்கள் நேரடியாக பார்த்து்க கொள்ளலாம். பழைய மொபைலுக்கு வை-பை அல்லது மொபைல் டேட்டா தேவை அவ்வளவு தான். இதற்குக் குறிப்பிட்ட செயலி என்று இல்லை. இப்படி பழைய மொபைல்களை சிசிடிவி போல மாற்றப் பல செயலிகள் பிளே ஸ்டோரில் கொட்டி கிடக்கிறது. இதில் சில செயலிகள் முற்றிலும் இலவசம்.

சில செயலிகளில் அடிப்படை அம்சங்கள் மட்டும் இலவசமாக இருக்கும். அதாவது வீடியோவை நல்ல குவாலிட்டி வீடியோ மற்றும் அதை ரெக்கார்ட் செய்வது உள்ளிட்ட வசதிகளுக்குக் கட்டணம் என்று இருக்கும். நமது தேவைக்கு ஏற்ப அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வீட்டை கண்காணித்து திருட்டையும் தடுக்காலம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+