வாட்ஸ்அப்பில் தப்பு தப்பா மெசேஜ்.. இதை மட்டும் பண்ணுங்க போதும்.! இனிமேல் பிரச்சினையே இருக்காது
வாஷிங்டன்: வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர் வசதியை மேம்படுத்தப் பல புதிய வசதிகளைக் கொண்டு வருகிறது. அப்படியொரு வசதி குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த உலகில் அதிக நபர்கள் பயன்படுத்தும் முக்கியமான மெசேஜிக் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பல அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் கூட வாட்ஸ்அப் மூலமே வருகிறது.

வாட்ஸ்அப்: இதற்கிடையே பயனாளர் வசதியை மேம்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, பெர்சனல் சாட்களை லாக் செய்வது, ஒரே செல்போனில் பல வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்துவது ஆகிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியைக் கொண்டு வந்துள்ளது.
அதாவது மெசேஜ் அனுப்பிய பிறகு அந்த மெசேஜை நம்மால் எடிட் செய்ய முடியும். அதேநேரம் எப்போது வேண்டுமானாலும் இந்த மெசேஜை எடிட் செய்ய முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் மட்டுமே நம்மால் இந்த எடிட் ஆப்ஷனை பயன்படுத்த முடியும். இதன் மூலம், தவறாக டைப் செய்தால், எழுத்துப்பிழை, தவறான வார்த்தை என அனைத்தையும் நாம் மாற்றிக் கொள்ள முடியும்.
எடிட் ஆப்ஷன்: இந்த வசதியை நாம் வாட்ஸ்அப்பின் அனைத்து புதிய அப்டேட்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம் நீங்கள் மெசேஜ் அனுப்பும் நபர், புதிய வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தவில்லை என்றால்.. அவருக்கு எடிட் செய்யும் மெசேஜ் அப்டேட் ஆகாது. பழைய மெசேஜ்தான் இருக்கும். வாட்ஸ்அப்பின் புதிய வெர்ஷனை பயன்படுத்தினால் மட்டுமே எடிட் அம்சம் இருக்கும். எனவே, வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யவும்.
வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் ஆப்ஷன் இருக்கிறது. இருப்பினும், இதன் மூலம் மொத்தமாக மெசேஜை டெலிட் மட்டுமே செய்ய முடியும். அதற்குப் பதிலாக இதை நாம் பயன்படுத்தலாம். இதன் மூலம் முழு மெசேஜை டெலிட் செய்வதற்குப் பதிலாக நாம் குறிப்பிட்ட பிழையை மட்டும் விரைவாகச் சரிசெய்ய முடியும். சரி இந்த எடிட் ஆப்ஷனை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் நாம் பார்க்கலாம்.
எப்படிச் செய்ய வேண்டும்: முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து அதில் எந்தவொரு சாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லவும். நீங்கள் தவறாக எதாவது மெசேஜ் அனுப்பிவிட்டால், அதை லாங் பிரஸ் செய்யவும்.. அதில் எடிட் ஆப்ஷன் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி நாம் அனுப்பிய மெசேஜை மாற்றிக் கொள்ளலாம்.
இருப்பினும், மெசேஜ் அனுப்பி 15 நிமிடங்களுக்குள் நீங்கள் அதை எடிட் செய்ய வேண்டும். அதன் பிறகு மெசேஜை எடிட் செய்ய முடியாது. நீங்கள் மெசேஜ் அனுப்பி 15 நிமிடங்கள் ஆகிவிட்டால், அதை முழுமையாக டெலிட் மட்டுமே செய்ய முடியும்.
ரொம்ப நல்லது: இந்த எடிட் ஆப்ஷனில் மற்றொரு வசதி இருக்கிறது. அதாவது நீங்கள் மெசேஜை டெலிட் செய்தால் அந்த குறிப்பிட்ட மெசேஜ் டெலிட் செய்ததாக நோட்டிபிக்கேஷன் வரும். ஆனால், நீங்கள் அதை எடிட் செய்தால் அதுபோல எந்தவொரு நோட்டிபிக்கேஷனும் வராது. அதாவது நாம் மெசேஜை எடிட் செய்தாலும் கூட அது அந்த நபருக்குத் தெரியாது. மெசேஜ் மட்டுமின்றி போட்டோ, வீடியோக்கள் என நாம் அனைத்தையும் எடிட் செய்யலாம். ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு என இரண்டிலும் இந்த வசதி இருக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications