அவசியமான நேரத்துல கூகுள் பே சதி பண்ணுதா? இனி நோ டென்ஷன்.. பின் நம்பரே வேணாம்.. செம ஃபாஸ்ட் UPI லைட்!
சென்னை: கூகுள் பேவில் பல நேரங்களில் உங்கள் பேமெண்ட் ஃபெயில் ஆகிவிடும். பேங்க் சர்வர் பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் சிறிய தொகையை கூட அனுப்ப முடியாமல் விழிப்போம். இனி அப்படியான தருணங்களை எதிர்கொள்ளத் தேவையில்லை. இதற்காகவே ஸ்பெஷலாக கூகுள் பேவில் வந்துள்ளது யுபிஐ லைட். பின் நம்பரே இல்லாமல் செம ஃபாஸ்டாக, பாதுகாப்பாக பணம் அனுப்பலாம்.
எங்கெங்கும் கூகுள் பே: தற்போது கிராமம் நகரம் என வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துவிட்டது. மளிகைச் சாமான் வாங்குவது, காய்கறி வாங்குவது, டீ குடிப்பது, ஹோட்டலில் சாப்பிடுவது, மொபைல் போன், டிடிஎச் ஆகியவற்றிற்கு ரீசார்ஜ் செய்வது, கேஸ் சிலிண்டர் புக்கிங் போன்ற அனைத்திற்கும் மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஒரு டீ குடித்துவிட்டு 12 ரூபாய் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றாலும், அதற்காக பின் நம்பர் உள்ளீடு செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் கையில் ரொக்கமாக பணமே இல்லாமல் கூகுள் பேவை நம்பி ஒரு டீ குடித்திருப்போம். ஆனால், சர்வர் பிரச்சனை காரணமாக பணத்தை அனுப்ப முடியாமல் போகும்.

கூகுள் பே - யுபிஐ லைட்: இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு அளிக்கிறது. யுபிஐ லைட். கூகுள் பே வின் யுபிஐ லைட் சேவையைப் பயன்படுத்தி சிறிய தொகையை பின் நம்பர் இன்றி பரிமாற்றம் செய்யலாம். அதாவது ரூ.200க்கும் குறைவான தொகையை பின் நம்பர் இன்றி விரைவாகவும் எளிதாகவும் அனுப்பி விடலாம்.
இந்தியாவில் இருக்கும் பயனர்களுக்கென்றே பிரத்தியேகமாக UPI Lite அம்சத்தை கூகுள் பே அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் முக்கிய நோக்கமே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிமையாகவும் வேகமாகவும் மேற்கொள்வது தான். இதன் மூலம், அதிக பண பரிமாற்றங்கள் செய்யப்படும் பீக் டைமில் கூட UPI lite மூலமாக வெற்றிகரமாக பேமெண்ட்களை மேற்கொள்ளலாம்.
என்ன ஸ்பெஷல்?: யுபிஐ லைட், கூகுள் பை யுபிஐ போலவே நேரடியாக நமது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டிருந்தாலும், அது ரியல் டைமில் ஒவ்வொரு முறையும் வங்கியின் அனுமதியை நம்பி இருக்காது. முன்கூட்டியே உங்களின் வங்கி கணக்கிலிருந்து யுபிஐ லைட் வாலட்டுக்கு ஒரு நாளைக்கு 2 முறை தலா 2000 ரூபாய் வரை டெபாசிட் செய்து வைத்துக் கொள்ளலாம். மேக்சிமம் பேலன்ஸ் ரூ.2000 வரை மட்டுமே இந்த வாலட்டில் சேமித்து வைக்க முடியும்.
இந்தப் பணத்தை பின் நம்பர் இன்றி டிரான்சாக்சன் செய்ய அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும். ஏற்கனவே இந்த சேவை பேடிஎம், போன் பே போன்ற தளங்களில் அறிமுகமாகி இருந்தாலும், இப்போதுதான் கூகுள் பே இதனை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் பேயில் UPI லைட்டை பயன்படுத்துவது எப்படி?:
1. ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து Google Pay ஆப்பை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே கூகுள் பே ஆப் இருந்தால் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
2. கூகுள் பே ஆப்பில் வலது மேல் மூலையில் உள்ள ப்ரொவைல் பக்கத்தை ஓபன் செய்யுங்கள்.
3. அதில், Setup payment methods செலக்ட் செய்து UPI lite என்பதை தேர்வு செய்யுங்கள்.
4. Continue க்ளிக் செய்தால், உங்களது வங்கி கணக்கை இணைப்பது அல்லது உங்களது விவரங்களை சரிபார்ப்பது போன்ற செயல்முறைக்கு கூகுள் பே உங்களை வழிநடத்தும். அதைப் பின்பற்றுங்கள்.
5. அவற்றை முடித்ததும் உங்களது UPI LITE வெற்றிகரமாக ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது என்ற கன்ஃபர்மேஷன் மெசேஜ் கிடைக்கும்.
6. பின்னர் யுபிஐ லைட்டில் Add funds செலக்ட் செய்து ரூ.2000 வரை யுபிஐ லைட் வாலட்டில் பணத்தை சேமிக்கலாம்.
7. யுபிஐ லைட் மூலம் பணம் செலுத்த யுபிஐ லைட் அக்கவுண்ட்டை செலக்ட் செய்து பின் ஃப்ரீ பே என்பதை செலக்ட் செய்யவும்.
8. யுபிஐ லைட் மூலம், 'PIN' நம்பரை என்டர் செய்யாமல் ரூ.200 வரை ஒவ்வொரு முறையும் பணம் செலுத்தலாம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications