Smartphone Tricks: ஒரே போனில் 2 வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை யூஸ் பண்ணனுமா? ரொம்ப ஈசி.. சிம்பிளான ட்ரிக்!
சென்னை: ஸ்மார்ட்போன்கள் டூயல் சிம் கார்டு சப்போர்ட்டுடன் வருகின்றன. ஆனால், வாட்ஸ் அப் போன்ற மெசஞ்சர் செயலிகளை ஒரே எண்ணிற்குத்தான் பயன்படுத்த முடியும். ஆனால், உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒரு வசதியின் மூலம் 2 வாட்ஸ் அப் அக்கவுண்ட் பயன்படுத்தலாம். எப்படி இதைச் செய்வது என்பதை எளிய சில ஸ்டெப்புகளில் இங்கே பார்க்கலாம்.
2 போன் நம்பர்கள்: இப்போது வரக்கூடிய பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டூயல் சிம்கார்டு வசதியுடன் வருகிறது. ஒரு எண் அலுவல் தொடர்பாகவும், மற்றொரு எண் தனிப்பட்ட பயன்பாட்டுக்கும் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு நம்பர் இல்லாதவர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு பெரும்பாலானோர் 2 சிம்களை பயன்படுத்துகிறோம். இரண்டு நம்பருக்கும் ஒரே போனில் தனித்தனியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும் வழி உள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஒரே டிவைஸில் இரண்டு வாட்ஸ் அப் அக்கவுண்ட்களை நிர்வகிப்பதை ஆதரிக்கவில்லை என்றாலும் ஆண்ட்ராய்டு போன்களில் இரண்டு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை எளிதாகப் பயன்படுத்தலாம். ஒரே டிவைஸில் 2 வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்தும் புதிய அப்டேட்டை விரைவில் வாட்ஸ் அப் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2 வாட்ஸ் அப் கணக்கு: எனினும், இப்போதைக்கு ஆண்ட்ராய்டு போன்களில் 2 வாட்ஸ் அப் கணக்குகளை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். ஒரே டிவைஸில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை நிர்வகிக்க எளிதான வழி வாட்ஸ் அப் பிசினஸ். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் வாட்ஸ்அப் பிசினஸ் கிடைக்கிறது. இதன் மூலம் வாட்ஸ் அப் நார்மல் அக்கவுண்ட்டில் ஒரு எண்ணையும், வாட்ஸ் அப் பிசினஸ் அக்கவுண்டில் இன்னொரு எண்ணையும் இணைக்கலாம்.
வாட்ஸ் அப் பிசினஸ் இல்லாமல் நார்மல் வாட்ஸ் அப்பிலேயே 2 அக்கவுன்ட்களை பயன்படுத்த MI, Realme, Oppo, Vivo, Redmi மற்றும் OnePlus போன்ற போன்களில் இன்பில்ட் குளோனர் வசதி உள்ளன. அவை ஒரே சமயத்தில் 2 வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதிக்கிறது. Samsung அதன் Dual Messenger feature மூலம் 2 வாட்ஸ்அப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
சாம்சங் போனில் 2 வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி?:
1. செட்டிங்ஸ் ஓபன் செய்து அதில் Advanced features என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
2. அதில் Dual Messenger அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
3. தனி வாட்ஸ் அப் அக்கவுண்ட் பயன்படுத்த வேண்டும் என்ற வசதியை கிளிக் செய்ய வேண்டும்.
4. இப்போது புதிதாக மற்றொரு வாட்ஸ் அப் ஐகான் நமது மெனுவில் இருக்கும். 5. இன்ஸ்டால் கொடுத்து Confirm கொடுத்தால் போதும். இன்னொரு நம்பர் மூலம் புதிய வாட்ஸ் அப் அக்கவுண்டை உருவாக்கலாம்.
ஜியோமி போன் வைத்திருப்பவர்கள் 2 வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி?:
1. செட்டிங்ஸ் ஓபன் செய்து Dual Apps பக்கம் செல்ல வேண்டும்
2. அதில் Create கொடுக்க வேண்டும். பின்னர் திரையில் ஆப்களின் பட்டியல் வரும்.
3. வாட்ஸ்அப் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் புதிய எண்ணில் இரண்டாவது வாட்ஸ் அப்பை இயக்கலாம்.
ஒன் பிளஸ் போனில் 2 வாட்ஸ் அப் பயன்படுத்த:
1. செட்டிங்ஸ் ஓபன் செய்து Apps என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
2. பின்னர் Parallel Apps செல்ல வேண்டும். வாட்ஸ்அப் தேர்வு செய்ய வேண்டும்.
3. குளோன் செய்யப்பட்ட ஆப் ஆரஞ்சு நிற பேட்ஜ் உடன் காணப்படும். பின்னர் புதிய எண்ணில் இரண்டாவது வாட்ஸ் அப்பை இயக்கலாம்.
Oppo, Realme போன்களில் 2 வாட்ஸ்அப் பயன்படுத்த:
1. செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்று Apps தேர்வு செய்து App cloner பக்கம் செல்ல வேண்டும்.
2. அதில் வாட்ஸ்அப் என செலக்ட் செய்ய வேண்டும்.
3. அடுத்து Create app clone பக்கம் செல்ல வேண்டும்.
4. இப்போது உங்கள் ஆப் டிராயரில் வாட்ஸ்அப் தேர்ந்தெடுத்து இன்ஸ்டால் செய்தால் போதும், நீங்கள் 2வது வாட்ஸ் அப்பை உங்கள் போனிலேயே பயன்படுத்தலாம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications