ஒரு செல்போன் இருந்தால் போதும்.. இனி 2 எண்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம்! எப்படி! தெறி மாஸ் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒரே மொபைலில் பல கணக்குகளைப் பயன்படுத்தும் அட்டகாசமான வசதியை வாட்ஸ்அப் இப்போது கொண்டு வருகிறது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

உலகில் அதிகம் பயன்படுத்தக் கூடிய சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் தனது பயனாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

How to use two WhatsApp Accounts On The Same Phone at the same time

இதற்கிடையே பலரும் பெரிதும் எதிர்பார்க்கும் வசதி ஒன்றை விரைவில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது ஒரே மொபைலில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது சோதித்து வருகிறது. இப்போது இரு கணக்குகளில் வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புவோர் இரண்டு மொபைல்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த சிக்கலை இந்த வசதி சரி செய்யும்.

வாட்ஸ்அப்: பலரும் எதிர்பார்க்கும் இந்த வசதி விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படும் என்று மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பலரும் இரட்டை சிம் போன்களையே பயன்படுத்துகிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த வசதி அவர்களுக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த அம்சத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால் நம்மிடம் இருக்கும் மொபைல் எண்ணில் அந்த இரண்டு சிம்களும் இருக்க வேண்டும். அவை இயங்கிக் கொண்டு இருந்தால் மட்டுமே இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை வாட்ஸ்அப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சில நவீன மொபைல்களில் இ சிம் வழங்கப்படும் நிலையில், அப்படி இருந்தாலும் இந்த இரட்டை வாட்ஸ்அப் வசதியைப் பயன்படுத்த முடியும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இரண்டு கணக்குகள்: இது குறித்து வாட்ஸ்அப் கூறுகையில், "ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை லாக்-இன் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துகிறோம். ஆபீஸ் மற்றும் பர்சனல் கணக்குகளை எளிதாகப் பயன்படுத்த இது உதவியாக இருக்கும். இப்போது ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப்பில் இருந்து லாக் அவுட் செய்த இரு கணக்குகளைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

அந்த சிக்கலை நீக்கி ஒரே சாதனத்தில் இரு வேறு கணக்குகளைப் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்கிறோம். இதன் மூலம் இனி எங்கும் இரண்டு மொபைல்களை எடுத்துச் செல்ல தேவையில்லை. தவறான க்ரூப்களில் மெசேஜ் அனுப்பும் பிரச்சினையும் இருக்காது" எனக் கூறப்பட்டுள்ளது.

யாருக்கு முதலில் வரும்: வாட்அப் வழக்கமாகச் செய்வதைப் போல முதலில் பீட்டா பதிப்புகளில் மட்டுமே இந்த வசதி முதலில் இடம் பெற இருக்கிறது. பீட்டா பதிப்பில் பயனாளர்கள் யாராவது புகார் சொன்னால்.. தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு அதன் பின்னர் அனைவருக்கும் இந்த அப்டேட் வழங்கப்படும். இந்த அட்டகாசமான வசதியை எப்படிப் பயன்படுத்தலாம் எனக் கேட்கிறீர்களா.. அது குறித்தும் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

எப்படி: முதலில் உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் ஒபன் செய்து கொள்ளுங்கள். அதில் வலப்புறம் மேலே இருக்கும் 3 புள்ளிகளை க்ளிக் செய்து, அதில் செட்டிங்ஸ் உள்ளே செல்லுங்கள். அங்கே ப்ரோபைல் படத்திற்குக் கீழே drop down இருக்கும் அதை க்ளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்களது மற்றொரு கணக்கைச் சேர்த்துக் கொள்ள முடியும்.

இங்கே உங்கள் புதிய மொபைல் நம்பரை நீங்கள் பதிவிட்டால்.. அதற்கு ஒடிபி வெரிஃபிகேஷன் வரும். அந்த பிராசஸை முழுமையாக முடித்தால் போதும் ஒரே மொபைலில் நீங்கள் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்அப்பில் எந்த வெர்ஷன் அப்டேட்டில் இது இருக்கிறது என்பது குறித்து வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், விரைவில் இந்த அப்டேட் அனைத்து பீட்டா யூசர்களுக்கும் பகிரப்படும் என்றே கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+