ஜியோ ஹாட்ஸ்டாரின் "இந்த" புது வசதி தெரியுமா! இந்தியா vs நியூசிலாந்து பைனல்ஸ் பார்க்க யூஸ் ஆகும்
மும்பை: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி நாளைய தினம் நடைபெற உள்ளது. இது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது. இதுபோல ஓடிடியில் மேட்ச் பார்ப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மிக முக்கியமான ஒரு வசதியைக் கொண்டு வந்துள்ளது. இது கிரிக்கெட்டை தீவிரமாகப் பாலோ செய்வோருக்குப் பெரியளவில் உதவும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. முதலில் அனைத்து போட்டிகளுமே பாகிஸ்தானில் தான் நடைபெற இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. இதையடுத்து இந்திய அணியின் போட்டிகள் மட்டும் பொதுவான மைதானமான துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியா அனைத்து போட்டிகளையும் துபாயிலேயே விளையாடியது.

இறுதிப் போட்டி
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல மற்றொரு அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து பைனல்ஸுக்கு வந்துள்ளது. இந்தியா நியூசிலாந்து இடையேயான இறுதிப் போட்டி நாளை துபாயில் நடைபெற உள்ளது. இதற்கு இரு அணிகளும் ரெடியாகி வருகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார்
இந்த போட்டிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது. சமீப காலமாகவே டிவியில் கிரிக்கெட் பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், இதுபோல ஓடிடிகளில் பார்ப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல ரசிகர்களைக் கவர ஓடிடி நிறுவனங்களும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி ஜியோ ஹாட்ஸ்டார் இப்போது புதிய வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளது.
இடைப்பட்ட ஓவர்கள்
அதாவது ஒரு நாள் போட்டியில் இரு அணிகளுமே 50 ஓவர்கள் பேட்டிங் பிடிக்கும். நாள் முழுக்க போட்டி நடைபெறும். இதில் முதல் 10 ஓவர்களிலும் கடைசி 10 ஓவர்களிலும் சுவாரசியத்திற்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், இடைப்பட்ட ஓவர்களில் கொஞ்சம் டல் அடிக்கவே செய்யும். அதிலும் துபாயில் எல்லாம் இடைப்பட்ட ஓவர்களில் ரன் ரேட் ரொம்பவே கம்மியாகவே இருக்கும். இதுபோன்ற ஓவர்களில் பொதுவாக ரசிகர்கள் வேறு நிகழ்ச்சிகளைக் கொஞ்ச நேரம் பார்ப்பார்கள்.
புதிய வசதி
ஆனால், அப்படிப் பார்க்கும் போது ஸ்கோர் எவ்வளவு எனப் பார்க்க மீண்டும் லைவ் போக வேண்டும். இரண்டு விளம்பரம் வந்து லைவ் வருவதற்குள் ஒரு வழியாகிவிடும். இதற்கிடையே அந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில் புதிய வசதியை ஜியோ ஹாட்ஸ்டார் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள் வேறு பிரோகிராம்களை பார்க்கும் போது கூட ஸ்கோரை தொடர்ந்து கவனிக்கலாம். மற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும் ஸ்கிரீனின் வலதுபுறம் மேலே லைவ் ஸ்கோர் வரும்படி அப்டேட் கொடுத்துள்ளனர்.
உதவியாகவே இருக்கும்
இதன் மூலம் வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும் லைவ் ஸ்கோரை பார்க்கலாம். இது சின்ன ஒரு அப்டேட் தான் என்றாலும் கூட நாளை ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு வேறு நிகழ்ச்சிகளைப் பார்ப்போர் கூட, எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ஸ்கோரை லைவ்வில் தெரிந்து கொள்ளலாம். மேலும், அடுத்து ஐபிஎல் போட்டிகளும் நடக்கும் சூழலில், அதற்கும் இது கை கொடுக்கும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications