அலெர்ட் மக்களே! கூகுளில் நீங்கள் சேமித்து வைத்துள்ள போட்டோஸ், கான்டாக்ட்ஸ் எல்லாம் தொலைந்து போகலாம்!
சென்னை: உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் சேமித்து வைத்திருக்கும், கான்டாக்ட்ஸ், போட்டோஸ் மற்றும் முக்கியமான ஃபைல்களை நீங்கள் இழக்கக்கூடும். கூகுளே அவற்றை டெலீட் செய்துவிடும். இதைத் தடுக்க, உங்கள் கூகுள் கணக்கை ஆக்டிவ்வாக வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்.
கூகுள் அக்கவுண்ட் வைத்துள்ள யூசர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவற்றை நீக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இன்-ஆக்டிவ் அக்கவுண்ட்ஸ் சார்ந்த கொள்கை முடிவில் கூகுள் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் ஆக்டிவ்வாக இல்லாத ஏராளமான கணக்குகள் நீக்கப்பட்ட உள்ளன.

யூசர்கள் தங்கள் கூகுள் கணக்குகளை 24 மாதத்திற்கு ஒரு முறையேனும் லாக்-இன் செய்து ரிவ்யூ செய்ய வேண்டும். அதை செய்யாத யூசர்களின் கணக்குகள் நீக்கப்படும். இதற்கு முன்னர் இன்-ஆக்டிவாக இருக்கும் பயனர் கணக்குகளில் இருக்கும் டேட்டாவை மட்டுமே கூகுள் நீக்கி வந்தது. இப்போது அக்கவுண்டையே மொத்தமாக நீக்க உள்ளது.
இதன் காரணமாக ஜி-மெயில், டாக்குமென்ட், டிரைவ், காலண்டர், யூடியூப் மற்றும் கூகுள் போட்டோஸ் என பயனர்கள் ஒரே நேரத்தில் பல தளங்களின் டேட்டாக்களை இழக்க நேரிடும். செக்யூரிட்டி ரிஸ்க்கை குறைக்கும் வகையில் இந்த கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் உள்ள கூகுள் கணக்குள் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
பயன்படுத்தாமல் உள்ள கணக்குகள் மற்றும் அதோடு லிங்க் ஆன கணக்குகளுக்கு இது குறித்த விவரத்தை கூகுள் தெரிவிக்கும். உங்கள் Google அக்கவுண்ட், காண்டாக்ஸ், மெயில்கள், புகைப்படங்கள் மற்றும் கோப்புகள் நீக்கப்படுவதைத் தடுக்க, உங்கள் கூகுள் கணக்கை செயல்பாட்டில் இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.
கூகுள் அக்கவுண்ட்டை லாகின் மட்டும் செய்யாமல், தொடர்ந்து பயன்படுத்தும்படி கூகுள் அறிவுறுத்துகிறது. அக்கவுண்டில் ஏதேனும் செயல்பாடு இருந்தால், அதை செயலில் உள்ளதாக Google கருதும். மெயில்களை படிப்பது அல்லது மெயில் அனுப்புவது, Google டிரைவ் பயன்படுத்துவது, YouTube வீடியோக்களைப் பார்ப்பது, புகைப்படங்களைப் பகிர்வது, மின்னஞ்சல் லாகின் ஆகியுள்ள Play Storeல் இருந்து ஆப்ஸ்களை பதிவிறக்குவது ஆகியவற்றைச் செய்யலாம்.
Google சர்ச் பயன்படுத்துவது அல்லது Google மூலம் உள்நுழைக என்ற ஆப்ஷனை பயன்படுத்தி வேறு ஆப்ஸ் அல்லது சேவைகளில் லாகின் செய்வது போன்ற செயல்பாடுகள் உங்கள் அக்கவுண்டை ஆக்டிவ்வாக வைத்திருக்க உதவும்.
புதுப்பிக்கப்பட்ட கொள்கை உடனடியாக அமலுக்கு வந்தாலும், டிசம்பர் 1, 2023க்குப் பிறகு கூகுள் கணக்குகளை நீக்கத் தொடங்கும் என்று தெரிகிறது. புதிய செயலற்ற கணக்குகள் கொள்கை தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். பள்ளிகள், அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் போன்றவற்றிற்கான அக்கவுண்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications