ஐபோன் வச்சிருக்கீங்களா? மத்திய அரசு வார்னிங்! ஆப்பிள் கம்ப்யூட்டருக்கும் கூட பெரிய ஆபத்து இருக்கு
டெல்லி: பாதுகாப்பு என்றாலே பலருக்கும் ஆப்பிள் சாதனங்கள் தான் நினைவுக்கு வரும். அவ்வளவு சீக்கிரம் ஐபோன், ஆப்பிள் கணினிகளை ஹேக் செய்ய முடியாது என்பதாலேயே பலரும் ஆப்பிள் கருவிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அந்த ஆப்பிள் சாதனங்களைக் கூட ஹேக் செய்ய முடியும் என்று எச்சரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக மிக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
உலகெங்கும் ஆப்பிள் கருவிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். ஆப்பிளின் பெர்பாமன்ஸை வேறு எந்தவொரு கருவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதால் பலரும் ஆப்பிள் கருவிகளை வாங்குவார்கள்.

ஆப்பிள்: அதேபோல ஆப்பிள் என்றாலே ரொம்பவே பாதுகாப்பானது என்ற ஒரு பெயரும் இருக்கிறது. ஐபோன், ஆப்பிள் கம்பியூட்டர்களை பலரும் விரும்பி வாங்க இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கிடையே ஆப்பிள் யூசர்களுக்கு மத்திய அரசின் ஐடி துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது பல்வேறு ஆப்பிள் இயங்கு தளங்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரித்துள்ளது. இதனால் எளிதாக சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. iOS, iPadOS, macOS, Vision OS மற்றும் Safariஇன் பழைய வேர்ஷன்களில் இயங்கும் சாதனங்கள் எளிதாக சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவை என்ன: இதில் iOS என்பது ஐபோன்களில் இருக்கும் இயங்குதளம் ஆகும். அதேபோல iPadOS, macOS ஆகியவை முறையே ஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களின் இயங்குதளங்கள் ஆகும். Vision OS என்பது ஆப்பிள் சமீபத்தில் வெளியிட்ட விஷன் ப்ரோ என்ற சாதனத்தின் இயங்குதளம். சவாரி என்பது ஆப்பிளின் அனைத்து சாதனங்களிலும் இருக்கும் ஒரு வெப் பிரவுசர் ஆகும். க்ரோமை போல இந்த சவாரியும் ஒரு பிரவுசர் ஆகும்.
இந்த சாப்ட்ஃவேர்களில் குறிப்பிட்ட வெர்ஷன்களில் சிக்கல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சைபர் குற்றவாளிகளால் கிராஸ்-சைட் ஸ்கிரிப்டிங் தாக்குதல்களை நடத்த முடியும் என்றும் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் ஆபத்து: ஐபோன்களில் ஐஓஎஸ் 18.1.1-க்கு முந்தைய வெர்ஷன், ஐபேட்களில் ஐபேட்ஓஎஸ்களில் 17.7.2க்கு முந்தைய வெர்ஷன்களில் சிக்கல் இருக்கிறது. மேலும், ஆப்பிள் கணினிகளில் உள்ள MacOSகளில் 15.1.1க்கு முந்தைய வேர்ஷன், ஆப்பிள் விஷன் ப்ரோவில் 2.1.1க்கு முந்தைய வெர்ஷன்களில் இந்த சிக்கல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சவாரி பிரவுசரை பொறுத்தவரை 18.1.1க்கு முந்தைய வெர்ஷன்களில் சிக்கல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட சாப்ட்வேர்களை பயன்படுத்துவோர் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்தில் இருப்பதாகவும் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து தப்பிக்க அனைத்து பழைய வெர்ஷன்களில் இருந்து புதிய வெர்ஷனுக்கு உடனடியாக உங்கள் சாதனங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் கூறியுள்ளது.
தப்பிப்பது எப்படி: ஆப்பிள் நிறுவனமும் இந்த அபாயம் இருப்பதை உணர்ந்தே புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள வெர்ஷனுக்கு முந்தைய வெர்ஷன் சாப்ட்வேர்களை பயன்படுத்துவோர் உடனடியாக அதை அப்டேட் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பழைய மாடல்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் அப்டேட் வராது. இதனால் அப்டேட் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால் புதிய சாதனங்களைப் பயன்படுத்துமாறு கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரித்துள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications