இதுக்கு மேல ஸ்டைலா.. ஸ்லிம்மா வரவே முடியாது.. அசத்தலான ஐபோன் 17 ஏர்! லீக் ஆன தகவல்கள்!
சென்னை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளன. இந்த மாடல்களில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் விலை எவ்வளவு இருக்கும் என்பது குறித்த தகவல்களும் அலசப்பட்டு வருகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திய மக்கள் மத்தியில் ஐபோன் பயன்பாடு சமீப காலங்களில் பெருகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இது ஆப்பிள் யூசர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது.

ஐபோன் 17 சீரிஸ்
ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என நான்கு வேரியண்ட்களில் ஐபோன் 17 வெளியாகிறது. வெளியீட்டு தேதியை ஆப்பிள் நிறுவனம் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், செப்டம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 சீரிஸில் உள்ள ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு யூசர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மற்ற ஐபோன்களைப் போன்று அல்லாமல், ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட் போனானது அல்ட்ரா ஸ்லிம்மாக அதாவது மிகவும் ஸ்லிம்மான வடிவமைப்புடன் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்ட்ரா ஸ்லிம் டிசைன்
அதிலும் குறிப்பாக, ஐபோன் 17 ஏர், இந்த சீரிஸில் உள்ள மற்ற மாடல்களிலிருந்து மிகவும் வித்தியாசமாகத் தோற்றமளிக்கும் எனக் கூறப்படுகிறது. அதாவது ஐபோன் 17 ஏர் மிக மெல்லியதாக 5.5 மி.மீ தடிமன் கொண்டதாக, 146 கிராம் எடையுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அல்ட்ரா ஸ்லிம் மாடல் ஸ்மார்ட்போன் 3,000 mAh பேட்டரி திறனுடன் சந்தைக்கு வருகிறது. எனினும், மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் திறன் குறைவானதாக இருந்தாலும், செயல் திறன் மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேம் வசதி
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் ரேம் (RAM) மிகப்பெரிய குறையாகவே இருந்துவந்தது. அதனால், ஐபோன் 17 சீரிசில் அனைத்துக்கும் 12GB உள்நினைவகம் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன்கள், ஏ19 என்ற சிப் கொண்டு செயல்படும். இதுவே ப்ரோ மாடல்களுக்கு ஏ19 ப்ரோ சிப் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
ஐபோன் 17 சீரிஸின் நான்கு வகையான ஸ்மார்ட்போன்களிலும் முன்பக்கம் 24 MP கேமரா வழங்கப்படும். நான்கு வகையான ஸ்மார்ட்போன்களும் OLED திரையுடன் வருகிறது. பயன்பாட்டில் சுமூகத்தன்மையை உணரும் வகையில் 120Hz திறன், திரைகளுக்கு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பம்சங்கள் ஒருபுறம் இருக்க, ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களின் விலையே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. அமெரிக்கா அறிவித்து வரும் வரி விதிப்பே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மாடல்களைப் பொறுத்து ரூ. 89,900 முதல் அதிகபட்சமாக ரூ. 1,64,900 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications