அட்டகாசமான டிசைன்.. அதிவேக பிராசசர்! பட்ஜெட் விலையில் புது ஐபோனை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்
மும்பை: ஆப்பிள் நிறுவனம் எப்போது ஐபோன் வெளியிட்டாலும் அதற்கு உலகெங்கும் எதிர்பார்ப்பு இருக்கும். இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் இன்று பட்ஜெட் விலையில் புதிய ஐபோனை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபோனில் என்ன அம்சங்கள் இருக்கும், அதன் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன தான் உலகில் ஏகப்பட்ட செல்போன் நிறுவனங்கள் இருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்திற்கு இருக்கும் மவுசு தனி.. மற்ற நிறுவனங்கள் பல பட்ஜெட்களில் பல ரேட்களில் செல்போனை அறிமுகப்படுத்தும்.

ஆனால், ஆப்பிள் அப்படி இல்லை.. ஆண்டுக்கே ஒரு சில செல்போன் மாடல்களை மட்டுமே அறிமுகப்படுத்தும். அதுவும் பட்ஜெட் செக்மெண்டில் இருக்காது. விலை அவர்கள் வைப்பதாகவே இருக்கும்.
ஆப்பிள்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களை குறிவைத்து ஆப்பிள் நிறுவனம் எப்போதும் செப்டம்பர் மாதம் தான் தனது புதிய ஐபோன்களை வெளியிடும். ஆனால், இப்போது திடீரென ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோனை வெளியிடப் போகிறதாம். இதற்காகவே கடந்த சில வாரங்களாக ஆப்பிள் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.
அதாவது ஐபோன் எஸ்இ 4 மாடலை ஆப்பிள் வெளியிட உள்ளது. ஐபோன் எஸ்இ எப்போதும் பட்ஜெட் விலையிலேயே இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது ஐபோன் 14 டிசைன் உடன், ஓஎல்இடி டிஸ்பிளே, பேஸ் ஐடி ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஆப்பிளின் அதிநவீன ஏஐ தொழில்நுட்பமான Apple Intelligence சேவை இதில் இருக்கும்.
ஐபோன்:
இந்த iPhone SE 4 ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை என்ற போதிலும், இன்று இது வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் செய்தியாளர் கூட இந்த வாரம் எஸ்இ 4 ரிலீஸ் ஆகும் என்றே கூறியிருந்தார்.
வழக்கமாக ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் நடக்கும் ஐபோன் ரிலீஸை மட்டுமே பிரம்மாண்டமாக நடத்தும். எஸ்இ போன்களை வெறும் செய்திக்குறிப்பு மூலமே வெளியிடும். அதேபோலவே இந்த ஐபோன் எஸ்இ 4 மாடலும் வெளியாகும் என தெரிகிறது. அத்துடன் பவர்பீட்ஸ் ப்ரோ 2 ஹெட்போனையும் ஆப்பிள் வெளியிடும் என தெரிகிறது.
வசதிகள்:
இந்த மாடல் ஐபோன் எஸ்இ 4 அல்லது ஐபோன் 16இ என்ற பெயரில் வெளியாகும் என தெரிகிறது. இது ஐபோன் 14ஐ போல நாட்ச் கொண்டு இருக்கும். டச் ஐடி இருக்காது. மாறாக பேஸ் ஐடி வசதி இதில் இருக்கும். முந்தைய எஸ்இ மாடல்களில் எல்இடி ஸ்கிரீன் உள்ள நிலையில், 6.1 இன்ச் ஓஎல்இடி திரை, 60Hz ரெப்ரெஷ் ரேட் உடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஐபோன் மாடல் ஒற்றை கேமரா செட் அப்பை மட்டுமே கொண்டிருக்கும். இருப்பினும் முந்தைய மாடல்களில் 12 மெகா பிக்சல் கேமரா மட்டுமே இருந்த நிலையில், இதில் 48 மெகா பிக்சல் கேமரா இருக்கும். அதேபோல முன்புறம் 24 மேகா பிக்சல் கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைன் மாற்றம்:
முந்தைய மாடல்களில் ரவுண்ட் எட்ஜ் இருந்த நிலையில், அதை மாற்றி பாக்ஸ் போன்ற மாடலை இதில் கொண்டு வருகிறது. ஐபோன் 14ஐ போலவே இதிலும் பவர் பட்டன் வலது புறமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் அதிநவீன ஐபோன் 16இல் இருக்கும் ஆப்பிளின் ஏ18 சிப் தான் இருக்கும் என்பதால் ஏஐ அம்சங்கள் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் செயல்படும்.
விலை என்ன:
8 ஜிபி ரேமை கொண்டதாக இது இருக்கும் என கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் அனைத்து தரப்பு மக்களும் வாங்குவது போலவே இதன் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய எஸ்இ மாடல்களை போலவே இதன் விலை 499 டாலராக இருக்கலாம். இந்தியாவில் இதன் விலை ரூ.43,900- ரூ. 49,900 ரேஞ்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications