5ஜி இருந்தும் என்ன பயன்.. மொபைல் நெட் மெதுவாக இருக்கா.. இதை செய்யுங்க ஜெட் வேகத்தில் பாயும்
டெல்லி: இப்போது நம்மில் பலரும் 5ஜி மொபைலை தான் பயன்படுத்துகிறோம். 5ஜி இருந்தும் கூட உங்கள் மொபைலில் இணையச் சேவை மெதுவாக இருக்கிறதா.. அப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
கடந்த 2022இல் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் தான் நமது நாட்டில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அந்த நிகழ்வில் தான் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்கள் 5ஜி திட்டங்களை அறிவித்தன. அதன் பிறகு படிப்படியாக நமது நாட்டில் 5ஜி சேவை கொண்டு வரப்பட்டது.

இப்போது நமது நாட்டில் பெரும்பாலான நகரங்களில் 5ஜி தேவை வழங்கப்படுகிறது. சோதனை முறையில் 5ஜி வழங்குவதால் ஜியோ நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்கு அன்லிமிடெட் இணையச் சேவையை அறிவித்துள்ளது.
5ஜி: இதன் மூலம் 5ஜி அதிவேக இணையச் சேவை நாடு முழுக்க இருக்கும் பயனாளர்களுக்குக் கிடைக்கிறது. 5ஜி எனப்படும் இந்த ஐந்தாம் தலைமுறை மொபைல் நெட்வொர்க் என்பது 4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது, 20-30 மடங்கு அதிவேகமாக இருக்கும். எனவே, 5ஜி மொபைலை நீங்கள் வைத்திருந்தால் இதுவரை இல்லாத ஒரு இணைய வேகத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.
இருந்தாலும் கூட உங்கள் மொபைல் டேட்டா மெதுவாக இருப்பது போல உங்களுக்குத் தோன்றுகிறதா.. அவசர நேரத்தில் திடீரென இதுபோல இணைய வேகம் குறைந்தால் அது பலருக்கும் கடுப்பாகவே இருக்கும். அதுபோன்ற நேரங்களில் மீண்டும் இணைய அதிவேகமான இணையச் சேவையைப் பெற என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியுமா.. அது குறித்துப் பார்க்கலாம்.
செட்டிங்க்ஸ்: முதலில் உங்கள் இணைய நெட்வொர்க்கை செக் செய்யவும்.. உங்கள் மொபைல் 5G நெட்வொர்க்கில் கனெக்ட் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுங்கள்.. உங்கள் மொபைலில் செட்டிங்ஸ்-இல் சென்று செக் செய்து கொள்ளுங்கள். செல்லுலார் டேட்டாவின் கீழ், உங்கள் மொபைல் எந்த நெட்வொர்க்கில் இருக்கிறது என்பது தெரியும்.அதில் 5ஜி என்று இருந்தால் உங்கள் மொபைல் 5ஜி-இல் இருக்கிறது என்று அர்த்தம்.
அதன் பிறகும் உங்கள் மொபைலில் இணையச் சேவை கிடைக்கவில்லை என்றால் ரிஸ்டார்ட் செய்யலாம். பல நேரங்களில் மொபைலில் ஏற்படும் பல சிக்கல்களை வெறும் ரிஸ்டார்ட் செய்வதன் மூலம் நம்மால் சரி செய்ய முடியும். பவர் ஆப் செயலியை அழுத்திப் பிடித்தால் ரீஸ்ராட்ர் ஆப்ஷன் வரும். அதை கிளக் செய்யவும். மொபைல் ஹேங் ஆகி இருந்தால் வால்யூம் குறைக்கும் பட்டன் மற்றும் பவர் பட்டனை 10 நொடிகள் அழுத்துங்கள்.. மொபைல் ரிஸ்ராட்ர்ட் ஆகும்.
செயலிகள்: மேலும், பின்னணியில் நிறையச் செயலிகள் ஓபன் ஆகி இருந்தால், அவை உங்கள் டேட்டாவைப் பயன்படுத்திப் பயன்படுத்தும். இதன் காரணமாகவும் கூட உங்கள் இணையச் சேவை மெதுவாகும். இதனால் பேக் கிரவுண்டில் ஓபன் ஆகி இருக்கும் செயலிகளை உடனடியாக க்ளோஸ் செய்யவும்.
அடுத்து cache எனப்படும் தற்காலிக சேமிப்பை அழிக்க வேண்டும். நீங்கள் சமீபத்தில் சென்ற இணையதளங்கள், செயலிகளின் தரவுகள் இந்த cacheஇல் சேமிக்கப்படும்.. இது லோடிங் நேரத்தை விரைவுபடுத்த உதவும், ஆனால் இது உங்கள் மொபைலின் வேகத்தைக் குறைக்கும்.எனவே, மொபைல் ஸ்பீட் மிகவும் மெதுவாக இருந்தால் cacheஐ க்ளியர் செய்யவும்.
மொபைலை அப்டேட்: அடுத்து உங்கள் மொபைலை அப்டேட் செய்யவும். உங்கள் மொபைலுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அவ்வப்போது மொபைல் அப்டேட்டகள் தொடர்ந்து வழங்கப்படும். இந்த அப்டேட்களில் தான் மொபைல் சாப்ட்வேரில் இருக்கும் பிரச்சினைகள் சரி செய்யப்படும். எனவே, தவறாமல் இந்த அப்டேட்டகை தொடர்ந்து செய்யவும். இந்த சாப்ட்வேர் பிரச்சினை காரணமாகக் கூட உங்கள் மொபைல் டேட்டா ஸ்லோவாக இருக்கலாம் என்பதை இதைக் கவனிக்க வேண்டும்..
அதேபோல ஏரோபிளேன் மோடை ஆப் செய்து ஆன் செய்வதன் மூலமாகவும் இணையச் சேவையை வேகப்படுத்த முடியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications