ஆட்டமே மாறப்போகுது.. ஜியோவின் ஏர் ஃபைபர் இன்று அறிமுகம்! வெறும் ஒரு நொடியில் 1 ஜிபி இன்டெர்நெட்
சென்னை: இணைய வேகத்தை பன்மடங்கு அதிகரிக்க இருக்கும் ஜியோ ஏர் ஃபைபர் திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் என்பது ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி தகவல்களைக் கடத்தும் முக்கிய தொழில்நுட்பமாக உள்ளது. பொறியியல், மருத்துவம், தொலைத்தொடர்பு, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இது பெரும் பங்கு வகிக்கிறது. 1975 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஃபைபர் ஆப்டிக் கேபிள் மூலமாக இணைய சேவை வழங்கும் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது.

1980 களில், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் தொலைத்தொடர்பு சேவைகளில் பயன்படுத்தப்பட்டன. பழைய காப்பர் கேபிள்களை காட்டிலும் ஒளியின் வேகத்தைபோல் ஆப்டிக் கேபிள்களில் பயன்படுத்தப்பட்ட ஒளியின் மூலம் இணைய வேகமும் பன்மடங்கு அதிகரித்தன. தொலைத்தொடர்பு துறையில் இணைய தளம், தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி சேவைகளை வழங்குவதற்கு ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மருத்துவ துறையில் அறுவை சிகிச்சைகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொறியியல் துறையில் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளின் கட்டமைப்பை கண்காணிப்பதற்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ராணுவத்தில், ராணுவ உள்கட்டமைப்பை பாதுகாக்கவும் தகவல்களை தெரிவிக்கவும், காக்கவும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை 2011 ஆம் ஆண்டில் ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஃபைபர் ஆப்டிக் சேவைகளை வழங்குகின்றன.
ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகள் அபிரிமிதமான வளர்ச்சியை அடைந்து இருக்கிறது. 5G தொழில்நுட்பம் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியுடன் சேர்த்து ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் மேலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தொலைதொடர்பு துறையில் உச்சத்தில் இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் விநாடிக்கு ஒரு ஜிபி வேகம் அளிக்கும் அதிநவீன ஜியோ ஏர் ஃபைபர் மோடத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த இணைய சேவை வரும் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது போட்டி நிறுவனமான ஏர்டெலுக்கு பெரும் சவாலாக மாறப்போகிறது.
ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் என்பது ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக வளர்ந்து நிற்கிறது. இது தகவல்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கடத்துவதற்கான மிக வேகமான மற்றும் நம்பிக்கையாக வழியாக பார்க்கப்படுகிறது. ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், அது இந்தியாவில் பல உச்சங்களை தொடும் என்று கூறப்படுகிறது.
ஜியோ ஏர் ஃபைபர் மோடம் ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பத்தை மேலும் பரவலாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்று கூறும் தொழில்நுட்ப அறிஞர்கள், விநாடிக்கு ஒரு ஜிபி வேகத்தில் இணைய சேவையை வழங்கும் என்பதால், பயனாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை அது வழங்கும் என்று கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications