சைலண்டா சம்பவம் செய்த முகேஷ் அம்பானி.. பட்ஜெட் ரேட்டில் சூப்பரான 4ஜி போன்.. விலை, விவரங்கள் இங்கே!
டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ சைலண்டாக இரு முக்கியமான வேலையைச் செய்துள்ளது. ஜியோ பாரத் ஃபோன் வரிசையில் ஜியோ பாரத் J1 4G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள், விலை பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவின் டாப் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, பேசிக் மாடல் போன் யூசர்களை இணையம் நோக்கி இழுத்து வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பட்டன் மாடல் போன்களிலேயே யுபிஐ, ஜியோ சினிமா ஓடிடி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜியோ பாரத் J1: இந்நிலையில், ஜியோ பாரத் ஃபோன் வரிசையில் ஜியோ பாரத் J1 4G அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.1,799. பட்ஜெட்டுக்கு ஏற்ற இந்த மாடலில் 2.8-இன்ச் டிஸ்ப்ளே, 2,500 mAh பேட்டரி, HD அழைப்பு, JioMoney மூலம் UPI பணம் செலுத்துதல் மற்றும் ஜியோ சினிமா OTT சேவைகள் ஆகியவையும் கிடைக்கின்றன.
ஜியோ பாரத் ஜே1 4ஜி அதன் முன்னோடிகளான ஜியோ பாரத் பி2 மற்றும் பி1, அத்துடன் ஜியோ பாரத் கே1 கார்பன் மற்றும் வி2 ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், J1 4G ஆனது, Reliance Digital அல்லது JioMart இல் பட்டியலிடப்படாமல், Amazon தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு கிடைக்கிறது.
ஜியோ பாரத் ஜே1 முக்கிய அம்சங்கள்: Jio Bharat J1 4G மொபைல் ஆல்பா நியூமரிக் கீபேட் கொண்ட மொபைல். 122 கிராம் எடை கொண்டதாக வருகிறது. இதில் 2.8 இன்ச் டிஸ்பிளே உள்ளளது. 0.3 எம்பி கேமரா, டார்ச், எஃப்எம் ரேடியோ உள்ளது. ஒரு சிம் பயன்படுத்தும் வசதி கொண்ட இந்த மொபைலில் ஜியோ சிம்மை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதில் 2,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதிக பயன்பாடு இல்லையென்றால் வாரக்கணக்கில் சார்ஜ் நிற்கும். கவலையே இன்றி தடையில்லாமல் நீண்ட நேரம் பாடல் மற்றும் படங்களை பார்க்க முடியும்.
ஜியோ மணி: மேலும், இந்த போனில் 128 GB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதி உள்ளது. மெமரி கார்டு மூலம் பாடல்களை பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இதில், ஜியோ சினிமா, ஜியோ சாவன் போன்ற ஜியோ செயலிகளும் உண்டு. மேலும், இதில் ஜியோ பே (Jio Pay) இருப்பதால் UPI வழியாக பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும்.
ஜியோ பாரத் ஜே1 நவீன திறன்களைக் கொண்ட ஃபீச்சர் போனை தேடும் பயனர்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பான தேர்வை வழங்குகிறது. வசதிகள் மற்றும் விலை அடிப்படையில் ஜியோ பாரத் பி2க்கு சற்று மேலே உள்ளது இந்த மாடல்.

ரீசார்ஜ் திட்டங்கள்: ஜியோ பாரத் போனில் ரூ.123, ரூ. 234 மற்றும் ரூ.1,234 என 3 ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. இதில் ரூ.123 திட்டமானது அன்லிமிடெட் கால், எஸ்.எம்.ஸ் மற்றும் தினசரி 0.5 ஜிபி என 14 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ. 234 பிளான் ஆனது அன்லிமிடெட் கால், எஸ்.எம்.ஸ் மற்றும் தினசரி 0.5 ஜிபி என 28 ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.1,234 பிளான் ஆனது வருடாந்திர ரீசார்ஜ் பிளான். இது அன்லிமிடெட் கால் மற்றும் ஓர் ஆண்டுக்கு (336 நாட்களுக்கு), தினரி 0.5 ஜிபி டேட்டா என ஒட்டுமொத்தமாக 168 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications