அள்ளித் தரும் ஜியோ.. 12 ஓடிடி தளங்களை ஃப்ரீயா பார்க்கலாம்.. வெறும் ரூ.148.. டேட்டாவும் இலவசம்! ஆஹா!
சென்னை: ஜியோ நிறுவனம் வெறும் ரூ.148க்கு 12 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாக அளிக்கிறது. அதோடு, 10 ஜிபி டேட்டாவும் இலவசம்.
இந்திய டெலிகாம் சந்தையில் களம் இறங்கியதுமே, பல தொலைத் தொடர்பு நிறுவனங்களை மார்க்கெட்டை விட்டு துரத்திய நிறுவனம் ஜியோ. இப்போது ஏர்டெல், வோடஃபோன் ஐடியா என ஒருசில நிறுவனங்களே போட்டிக்கு உள்ளன. இந்நிலையில், அவற்றிற்கு கடுமையான சவாலை அளித்து வருகிறது ஜியோ. ஜியோ அறிமுகப்படுத்தும் அசத்தலான ஆஃபர் பிளான்கள், போட்டி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலை அளித்து வருகின்றன.

ரீசார்ஜ் பிளான்களை பொறுத்தவரை, மிகக் குறைவான விலையில் அதிக டேட்டா உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வரும் ஜியோ நிறுவனம், ரூபாய் 148 விலையில் புதிய பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 148 ரூபாய் திட்டத்தில், சோனி லிவ், ஜீ ஃபைவ், சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட 12 ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக கிடைக்கும்.
ஓடிடி தளங்கள், இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. செல்போன்களில் தினசரி இணையம் பயன்படுத்தும் அனைவருமே, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஓடிடி தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 12 ஓடிடி தளங்களின் பேக்கேஜை குறைந்த விலையில் அள்ளித் தருகிறது ஜியோ.
ரூபாய் 148 விலையில், ஒரு மாதம் முழுவதும் (28 நாட்களுக்கு) 12 ஓடிடி தளங்களின் சந்தா இலவசம். SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, DocuBay, EPIC ON மற்றும் Hoichoi ஆகிய 12 ஓடிடி சேவைகளின் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஜியோ யூசர்கள் குறைந்த விலையில் ஓடிடி தளங்களில் தங்களுக்கு பிடித்த படங்கள், நிகழ்ச்சிகளை கண்டு களிக்க முடியும்.
இதுவரை எந்தவொரு நெட்வொர்க்கும் இவ்வளவு குறைந்த விலையில் 12 ஓடிடி தளங்களின் சந்தாவை வழங்கவில்லை. ஜியோ ஏற்படுத்தியுள்ள இந்த ஆஃபர், வெகுவான பொழுதுபோக்கு ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் என்று கருதப்படுகிறது. இந்த பிளானில் டேட்டா 10 ஜிபி என்பது மட்டும் தான் சிக்கல். கூடுதல் டேட்டாவுக்கு மேற்கொண்டு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.
கூடுதல் டேட்டாவோடு, ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனை வழங்கும் மேலும் சில பிளான்களையும் வழங்குகிறது ஜியோ. ரூ.398 விலையில் தினசரி 2 ஜிபி டேட்டா, 12 OTT சேவைகளுக்கான சந்தா, அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது ஜியோ. இந்த திட்டத்திற்கும் வேலிடிட்டி 28 நாட்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications