வெறும் ரூ.16,499க்கு லேப்டாப்! அதிரடியாக அறிவித்த ஜியோ.. அடேங்கப்பா இவ்வளவு ஸ்பெஷலா
சென்னை: தொலை தொடர்பு சேவையில் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்த ஜியோ, மொபைல் போன்களையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக வெயிட் குறைவான டிசைனில் புதிய வகை லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
செல்போன் சேவையில் ஜியோ ஏற்படுத்திய மாற்றம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. முன்னாடி எல்லாம் டேட்டா பயன்படுத்த வேண்டும் எனில், அதற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படியே செய்தாலும் அது சீக்கிரமாக தீர்ந்துவிடும். இப்படி இருக்கையில்தான் அன்லிமிட்டெட் டேட்டாவை குறைந்த விலைக்கு ஜியோ கொடுத்தது. அவ்வளவுதான் திடீரென மொத்தமாக மற்ற நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஜியோ பக்கம் சாய்ந்தனர்.

இதன் காரணமாக மற்ற நிறுவனங்கள் அடி வாங்கின. இந்நிலையில் தற்போது லேப்டாப் தயாரிப்பில் ஜியோ கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. ஜியோ லேப்டாப் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியான உடனேயே, "என்னது ஜியோ தயாரிப்பா. அப்போ கம்மி விலைதான் இருக்கும்" என்று டிஜிட்டல் உலகம் பேசிக்கொண்டது. அதற்கேற்ப தற்போது இந்த புதிய லேப்டாப் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலில் இதற்கான விலையை பற்றி தெரிந்துக்கொள்வோம். லேப்டாப் என்றாலே ரூ.25 ஆயிரத்திற்கு குறைவாக கிடைக்காது. அப்படி இருக்கையில் வெறும் 16,499க்கு இந்த லேப்டாபை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சமே வெயிட் லெஸ் என்பதுதான். அதாவது இது ஒரு கிலோவுக்கும் குறைவாக வெறும் 900 கிராம்தான் இருக்கும். எனவே யூஸ் செய்ய ரொம்ப ஈஸியா இருக்கும். அதேபோல இந்த லேப்டாப் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் தனிமனிதர்களின் வளர்ச்சிதான்.
சாமானிய குடும்பங்களில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் லேப்டாப் வாங்குவது என்பது சவாலான விஷயமாக இருக்கும். இதை மாற்றியமைத்து அனைத்து மாணவர்கள் கையிலும் லேப்டாப்பை புழங்க செய்ய ஜியோ உறுதிபூண்டிருக்கிறது. எனவேதான் இவ்வளவு குறைவான விலையில் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 11.6-இன்ச் எல்இடி டிஸ்ப்ளே மற்றும் இன்ஃபினிட்டி கீபோர்டு மற்றும் பெரிய டிராக்பேடுடன் வெளிவந்திருக்கிறது. அதுபோல வீடியோ காலில் பேசுவதற்கு ஏற்றார் போல 2MP அளவு கேமிராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது USB 2.0 போர்ட் + ஒரு மினி HDMI போர்ட் என 3 போர்ட்கள் இருக்கின்றன. இது தவிர 3.5 மிமீ ஹெட்ஃபோன்/மைக்ரோஃபோன் காம்போ ஜாக் மற்றும் 4G LTE சிம் போட்டு இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் வைஃபை மூலமாகவும் இதில் இன்டெர்நெட்டை பயன்படுத்த முடியும். இந்த லேப்டாப் 4ஜிபி LPDDR4 ரேம் உடன் 2.0 GHz ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை நீடித்திருக்கும்.

மட்டுமல்லாது 64 ஜிபி வரை சேமிக்கும் திறன் இருக்கிறது. இதனை 256ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன் நீட்டிக்க முடியும். இந்த லேப்டாப்பில் மற்ற OS எதுவும் பயன்படுத்தப்படவில்லை. ஜியோவின் சொந்த OSஆன JioOS பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து சிறந்த கற்றல் மற்றும் பொழுது போக்கு அனுபவத்தை கொடுக்கும் என்று ஜியோ உறுதியாக கூறுகிறது. C++, Java, Python ஆகியவற்றை இதில் எளிமையாக கற்றுக்கொள்ள முடியம் என்றும் ஜியோ கூறியுள்ளது.
இது தவிர JioTV, JioCloud கேமிங் போன்ற அம்சங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட இந்த லேப்டாபின் விற்பனை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. முன்பதிவு இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அமேசான் வெப்சைட்டிலிருந்தும் இதனை பெற்றுக்கொள்ளலாம். இத்துடன் அறிமுகச் சலுகையாக, பிரீமியம் லேப்டாப் கேரி கேஸ், 12 மாதங்களுக்கு 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் 12 மாதங்களுக்கு விரைவு ஹீல் செக்யூரிட்டி ஆகியவை வழங்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications