ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம்.. ஜியோ ஹாட்ஸ்டார் இலவசம்! யாருக்கெல்லாம் ப்ரீ தெரியுமா! நோட் பண்ணுங்க
மும்பை: ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் தனித்தனியாக இயங்கி வந்த நிலையில், இப்போது இரண்டும் ஒன்றாக இணைந்துள்ளன. ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய தளம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஹாட்ஸ்டாருக்கு தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றாலும் சில குறிப்பிட்ட யூசர்களுக்கு இது இலவசமாக வழங்கப்படுகிறது. யாருக்கெல்லாம் இலவசம்.. எவ்வளவு நாள் இலவசம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டின் முன்னணி ஓடிடி தளங்களாக ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் இயங்கி வந்தன. இருப்பினும், சில காரணங்களால் இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைவதாக அறிவிக்கப்பட்டன.

அதன்படி இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்ற புதிய தளமும், ஓடிடி தளமும் வெளியிடப்பட்டுள்ளது. இதை நாம் பார்க்கத் தனியாக சந்தா கட்ட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட மூன்று டைப் யூசர்களுக்கு மட்டும் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் யாருக்கு இலவசம்
முதலில் உங்களிடம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இருக்க வேண்டும்.. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு நீங்கள் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தி வந்தால் ஜியோ ஹாட்ஸ்டார் உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.. இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹாட்ஸ்டார் பேக் எவ்வளவு காலம் இருக்கிறதோ.. அதே அளவுக்கு மட்டுமே ஜியோ ஹாட்ஸ்டார் கிடைக்கும். அதாவது உங்களுக்கு ஹாட்ஸ்டாரில் 20 நாள் வேலிடிட்டி இருக்கிறது என்றால்.. ஜியோ ஹாட்ஸ்டாரிலும் அதே அளவுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.
அதேபோல ஆக்டிவ் ஜியோசினிமா சப்ஸ்கிரிப்ஷன் இருந்தாலும் நமக்குக் கிடைக்கும். ஹாட்ஸ்டாரைப் போலவே, நீங்கள் ஏற்கனவே ஜியோ சினிமாவுக்கு கட்டணம் செலுத்தியிருந்தால்.. ஜியோ ஹாட்ஸ்டாரை இலவசமாகப் பயன்படுத்தலாம்.. முன்பு குறிப்பிட்டது போலவே ஜியோசினிமாஸில் எவ்வளவு நாள் வேலிடிட்டி இருக்கிறதோ அதே அளவுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் வேலிடிட்டி கிடைக்கும்.
ரீசார்ஜ் திட்டங்கள்
இது தவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அல்லது ஜியோசினிமா (பிரீமியம்) சப்ஸ்கிரிப்ஷன் வழங்கும் ரீசார்ஜ் அல்லது பிராட்பேண்ட் திட்டங்களை வைத்திருந்தாலும் உங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாகக் கிடைக்கும். ரீசார்ஜ் அல்லது பிராட்பேண்ட் விதிகளில் குறிப்பிட்டபடி உங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாகக் கிடைக்கும்.
எப்படி கண்டுபிடிக்கலாம்
எல்லாம் ஓகே.. ஆனா எனக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் இருக்கா இல்லையானு குழப்பமா இருக்கு என்ற சந்தேகம் இருந்தால் அதற்கும் பதில் இருக்கிறது. அதாவது உங்கள் செல்போன் நம்பர் அல்லது மெயில் ஐடி கொடுத்து லாகின் செய்யுங்கள். அதில் புரொபைலில் போய் செக் செய்து பாருங்கள்.. மேலே குறிப்பிடப்பட்ட யூசர்களில் ஒருவராக இருந்தால் அது குறித்த தகவலை அங்குக் காட்டும். இல்லை என்றால் ரீசார்ஜ் பிளான் குறித்த தகவல்கள் அங்குத் தெரியும். அதை வைத்தே நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
கவனிக்க வேண்டிய விஷயம்
இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது இத்தனை காலம் ஜியோசினிமா சப்ஸ்கிரிப்ஷன் வைத்துள்ளவர்கள் ஆட்டோபே வசதியை ஆன் செய்து வைத்திருக்கலாம். அதாவது மாதாமாதம் தானாக சப்ஸ்கிரிப்ஷன் புதுப்பிக்கப்படும். அந்த ஆட்டோபே வசதி ரத்து செய்யப்படுகிறது. எனவே, ஜியோ ஹாட்ஸ்டாருக்கு நீங்கள் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதற்காக பல்வேறு பிளான்கள் வெளியிடப்பட்டுள்ளன. விளம்பரங்கள் உடன் என்றால் 149 ரூபாய் முதலும், விளம்பரங்கள் தேவையில்லை என்றால் ரூ.299 முதலும் பிளான்கள் உள்ளன.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications