இந்த ரேட்டில் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்னா சும்மாவா? வாடிக்கையாளர்கள் மனம் குளிர ஜியோ வழங்கும் பிளான்!
சென்னை: ரீசார்ஜ் கட்டண விலை உயர்வால், வாடிக்கையாளர்கள் புலம்பி வரும் நிலையில், அதிக டேட்டா வழங்கும் குறைந்த விலை கொண்ட ரீசார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது ஜியோ. ரூபாய் 198, ரூபாய் 199 விலைகளிலேயே, தினசரி 2 ஜிபி, தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் பிளான்களை தருகிறது ஜியோ நிறுவனம்.
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்-லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. நாடு முழுவதும் சுமார் 49 கோடி பேர் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர்.

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பினர். இதனால் ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன.
ரூபாய் 198 பிளான்
அந்த வகையில் ஜியோ நிறுவனம் ரூ.198 விலை கொண்ட பிளானை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிளானில் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் கால் வசதி, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளும் கிடைக்கும்.
இந்த 198 ரூபாய் ரீசார்ஜ் பிளானுடன் JioTV, JioCinema மற்றும் JioCloud சப்ஸ்கிரிப்ஷனையும் பெற முடியும். மிக முக்கியமாக இந்த திட்டத்தில் 5ஜி அன்லிமிடெட் டேடா வழங்கப்படுகிறது. உங்கள் கையில் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பிளானின் வேலிட்டி மொத்தம் 14 நாட்கள். அதே திட்டத்தை 28 நாட்களுக்கு நீங்கள் விரும்பினால், நீங்கள் ரூ.349 பிளானை தேர்வு செய்யலாம்.
199 ரூபாய் பிளான்
இதேபோல் ரூ.199 விலையுள்ள ரீசார்ஜ் திட்டத்தையும் ஜியோ வழங்கி வருகிறது. இந்த பிளானின் வேலிடிட்டி 18 நாட்கள். தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பிக் கொள்ள முடியும். மேலும் அன்லிமிடெட் கால் வசையும் உண்டு. இந்த பிளானிலும் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சந்தாவை பெற்றுக் கொள்ள முடியும்.
ரூபாய் 399 பிளான்
ரூ.399 ரீசார்ஜ் பிளானில், தினமும் 2.5 ஜிபி டேட்டா என மொத்தமாக 70 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர அன்லிமிடெட் கால் வசதி, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகளும் உண்டு. அத்துடன் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சப்ஸ்கிரிப்ஷனும் இலவசம்.
ரூ.349 பிளான்
ரூ.349 விலை கொண்ட ஜியோ ரீசார்ஜ் பிளானில் தினமும் 2 ஜிபி டேட்டா என 28 நாட்களுக்கு மொத்தமாக 56 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் கால் வசதி, தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் இதிலும் உண்டு. வேலிடிட்டி 28 நாட்கள். அத்துடன் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சப்ஸ்கிரிப்ஷனும் இலவசம். 5ஜி டேட்டாவும் இலவசம்.












Click it and Unblock the Notifications