ஜியோவின் சரவெடி ரீசார்ஜ் பிளான்.. தினமும் 2 ஜிபி டேட்டா.. இலவச கால்ஸ்.. இவ்வளவு கம்மி விலையில்!
சென்னை: ரூபாய் 999 விலையில் சூப்பரான பிளானை வழங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ. தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் கால் வசதி, ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் உடன் கூடிய இந்த திட்டம் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பிளானில் சராசரியாக ஒரு நாளுக்கு 10 ரூபாய் செலவில் அனைத்து பலன்களையும் அனுபவிக்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய மூன்று முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. இவற்றில், ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் 460 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளை அனுபவித்து வருகின்றனர்.

ரீசார்ஜ் பிளான்கள்
கடந்த ஆண்டு ஜியோ உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணங்களும் விலை உயர்த்தப்பட்டன. அந்த கேப்பில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். கொஞ்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்தது. இந்நிலையில், விலை உயர்ந்த பிளான்களுக்கு மத்தியில் ஜியோ நிறுவனம், ஒரு சூப்பரான ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற ரீசார்ஜ் திட்டங்களை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். வாடிக்கையாளர்களுக்கான வசதியை மேம்படுத்த, ஜியோ நிறுவனம் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டங்களையும், அதில் கிடைக்கும் சலுகைகளையும் விரிவுபடுத்தியுள்ளது.
ஜியோ ரூ.999 பிளான்
அந்தவகையில் ஜியோ ரீசார்ஜ் திட்டம் ரூ.999க்கு கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் பிளான் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில் அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிட்டட் இலவச அழைப்பு. கூடுதலாக அனைத்து நெட்வொர்க்குகளிலும் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதி கிடைக்கும்.
பெஸ்ட் திட்டம்
டேட்டாவை பொறுத்தவரையிலும் ஜியோவின் இந்த திட்டம் பெஸ்ட் என்றே கூறலாம். அதிக டேட்டா பயன்படுத்தும் யூசர்களுக்கு ஏற்றதாக இந்த திட்டம் இருக்கும். இந்த 999 பிளானில் நீங்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். 98 நாட்களுக்கு மொத்தம் 196 ஜிபி கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அன்லிமிட்டட் 5 ஜி டேட்டா ஸ்பீடையும் அனுபவிக்க முடியும்.
மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்கு 90 நாள் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் திரைப்படங்கள் மற்றும் ஏராளமான வெப் சீரிஸ்களை பார்க்கலாம். கூடுதலாக, இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் ஜியோ டிவிக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.1,049 பிளான்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1,049 திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டட் கால்ஸ் வசதி, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்களுக்கு 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக, இந்த திட்டத்தில் 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனும் வழங்கப்படுகிறது.
ஜியோ யூசர்கள் ஜியோடிவி மொபைல் செயலி வழியாக ZEE5 மற்றும் SonyLIV ஐயும் கண்டு ரசிக்கலாம். இந்த பிளான்களில் யூசர்கள் தங்கள் தினசரி டேட்டா வரம்பை அடைந்தவுடன், அவர்களின் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும். அதன்பிறகு அதிவேக டேட்டா தேவை என்றால் கூடுதலாக பூஸ்டர் பேக் போட வேண்டியிருக்கும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications