அம்பானி தரும் நியூ இயர் பரிசு.. வெறும் ரூ.148க்கு 12 ஓடிடி, அன்லிமிடட் கால்கள், அதிவேக இணைய சேவை
டெல்லி: ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 12 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்கள் இருக்கும் அட்டகாசமான ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் டெலிகாம் சேவைகளை மிக எளிதாக ஜியோவுக்கு முன்பு, ஜியோவுக்கு பிறகு என பிரிக்கலாம். ஜியோ நிறுவனம் வந்த பிறகே இணையம் என்பது அனைவரும் அணுகக் கூடிய ஒன்றாக மாறியது.

டெலிகாம் சந்தையில் பெரும் புயலைக் கிளப்பிய ஜியோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறைந்த விலையில் பல பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஜியோ நிறுவனம்: இது டெலிகாம் சந்தையில் மிகப் பெரிய ஒரு புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது எனச் சொல்லலாம். அதேபோல இதுபோன்ற குறைந்த விலை திட்டங்கள் அவர்களின் யூசர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவுகிறது. இதற்கிடையே இப்போது ஜியோ நிறுவனம் மற்றொரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் இப்போது ஓடிடிக்கள் தான் டிரெண்டாகி வருகிறது. பல முக்கிய படங்கள், வெப் சீரியஸ்கள் ஓடிடிக்களில் வருவதாலும், டிவியை போல இல்லாமல் நாம் எப்போது வேண்டுமானாலும் ஓடிடிக்களில் படங்களைப் பார்க்கலாம் என்பதாலும் பொதுமக்கள் பலரும் இந்த ஓடிடிக்கள் பக்கம் திரும்பி வருகின்றனர்.
12 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்: இப்போது பொதுமக்கள் பலரும் இதுபோல ஓடிடிக்களுடன் வரும் ரீச்சார்ஜ் திட்டத்தையே விரும்பி ரீச்சார்ஜ் செய்கிறார்கள். இதற்கிடையே ஜியோ நிறுவனம் புதிதாக 12 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் உடன் அட்டகாசமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் நீங்கள் அன்லிமிடட் கால்களுடன் இந்த 12 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷனையும் பெறலாம்.
148 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்தால் ஜீ5, டிஸ்கவரி+ ஜியோ சினிமா ப்ரீமயம், சன் நெக்ஸ்ட், உள்ளிட்ட 12 ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்கள் சேவை நமக்கு இலவசமாகக் கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டி இருக்கும் இந்த ரீச்சார்ஜ் பேக்கில் 10 ஜிபி 5 ஜி இணையச் சேவையும் கிடைக்கும். அதேபோல அன்லிமிடட் வாய்ஸ் கால் சேவையும் நமக்குக் கிடைக்கும்.
சாட்டிலைட் இணையம்: இது தவிர ஜியோ நிறுவனம் அடுத்து சாட்டிலைட் அடிப்படையில் அதிவேக ஃபைபர் இணையச் சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதற்கான ஒப்புதல் மிக விரைவில் கிடைக்கும் என தெரிகிறது. பொதுவாக அதிவேக இணையம் என்பது ஃபைபர் பதித்து அதன் மூலமாகவே வழங்கப்படும். கிராமங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் ஃபைபர் பதித்து இணையச் சேவை வழங்குவதில் லாபம் கிடைக்காது. இதனால் கிராமங்களில் அதிவேக இணையச் சேவை கிடைப்பது சிரமமாகவே இருந்தது.

அந்த பிரச்சினைக்குத் தான் இந்த ஸ்பேஸ் ஃபைபர் தீர்வை தரும். சாட்டிலைட் மூலம் இணையச் சேவை வழங்கப்படும் என்பதால் ஃபைபர் கேபிள் பதிக்க வேண்டியது இல்லை. ஏற்கனவே சோதனை முறையில் சில கிராமங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது. இதைத்தான் இப்போது நாடு முழுக்க விரிவாக்கம் செய்யவுள்ளனர். எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இப்படிதான் இணையச் சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது..
அதேநேரம் இதற்காக ஜியோ நிறுவனம் பூமி சுற்றுப்பாதையில் தனியாக சாட்டிலைட்களை அனுப்ப வேண்டும். சாட்டிலைட் அனுப்ப லக்சம்பேர்க்கை தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம் போட்டுள்ள போதிலும், எப்போது இந்த சாட்டிலைட்கள் அனுப்பப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications