முடங்கியது ஜியோ.. பல பகுதிகளில் "நோ சர்வீஸ்" மெசேஜ்.. கால், நெட் கூட பயன்படுத்த முடியவில்லையாம்!
மும்பை: நமது நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஜியோவின் சேவை பல இடங்களில் முடங்கியுள்ளது. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் கால் பேசுவது, நெட் பயன்படுத்துவது போன்ற அடிப்படை சேவைகளைக் கூடச் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டின் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று ஜியோ. இந்நிறுவனம் நமது நாட்டின் டெலிகாம் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஜியோ ஏற்படுத்தியுள்ளது. ஜியோ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சீராக அதிகரித்தே வருகிறது.

இதற்கிடையே இன்று நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜியோ டெலிகாம் தளம் முடங்கியுள்ளது. குறிப்பாக மும்பை பகுதியில் ஜியோ சேவை பெரியளவில் முடங்கியுள்ளது.
இது தவிர வேறு பல பிராந்தியங்களிலும் ஜியோ சேவை முடங்கியுள்ளன. இதனால் அங்குப் பலருக்கும் மொபைல் சர்வீஸ் கிடைக்கவில்லை. சாதாரணமாக நெட் சேவையை யூஸ் செய்வது, கால் பேசுவது உள்ளிட்ட சேவைகளைக் கூட பயன்படுத்த முடியவில்லையாம்.
இந்த விவகாரம் குறித்து ஜியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேநேரம் நெட்டிசன்கள் பலரும் தங்களால் எந்தவொரு சேவையையும் பயன்படுத்த முடியவில்லை என்று புலம்பித் தள்ளி வருகிறார்கள்.
இது குறித்து டவுன் டிடெக்டரின் என்ற டெக் நிறுவனம் கூறுகையில், "மும்பை மற்றும் பிற பிராந்தியங்களில் ஜியோ செயலிழப்பு காணப்படுகிறது. ஜியோ செயலி கூட வேலை செய்யவில்லை. மும்பை முழுவதும் ஜியோ மொபைல் சேவை முடங்கியுள்ளது... சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய செயலிழப்பாக இது இருக்கிறது" என்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications