கடைசி சான்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க! ஜியோ வழங்கும் சூப்பர் ஆஃபர் விரைவில் முடியப் போகுது!
சென்னை: ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த புத்தாண்டு ஸ்பெஷல் ரீசார்ஜ் ஆஃபர், விரைவில் மூடிவடைய உள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே இந்த ஆஃபர் இருக்கும் என்பதால், அதற்குள் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்து பயன் பெறலாம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே, கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ, இந்த புத்தாண்டில் தள்ளுபடி விலையில் நியூ இயர் வெல்கம் பிளானை அறிமுகம் செய்தது.

2025 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த "நியூ இயர் வெல்கம் பிளான்" ஏராளமான சலுகைகளுடன் கிடைக்கிறது. அதன்படி, ரூ.2025 பிளானில், அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா என 200 நாட்கள் வேலிடிட்டியுடன், மொத்தமாக 500 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் 5G டேட்டாவின் பலனையும் பெறுகிறார்கள்.
ரிலையன்ஸ் ஜியோ 2025 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் பிளான், நீண்ட கால வேலிடிட்டியில், அதிகளவு டேட்டாவை எதிர்பார்க்கும் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூபாய் 2025 க்கு 200 நாட்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கும் சூப்பரான இந்த பிளான் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்த புதிய நியூ இயர் வெல்கம் பிளானை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, கூடுதலாக ரூ. 2,150 மதிப்புள்ள பார்ட்னர் கூப்பன்களும் கிடைக்கும். இந்த கூப்பனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள், ஷாப்பிங் மற்றும் பயணத்திற்கான தள்ளுபடிகளை பெறலாம்.
கூப்பன்களை பொறுத்தவரை ரூ.2999 அல்லது அதற்கு மேல் ஷாப்பிங் செய்யும் போது ஏஜியோ (Ajio) வழங்கும் ரூ.500 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும். கூடவே விமான பயணங்களை முன்பதிவு செய்ய ஈஸ்மைட்ரிப்பில் (EaseMyTrip) இருந்து ரூ.1500 தள்ளுபடி சலுகை கிடைக்கும்.
மேலும் ஸ்விக்கி உணவு டெலிவரி ஆப்பில் (Swiggy) குறைந்தபட்சம் ரூ.499 மற்றும் அதற்கு மேலான மதிப்பு கொண்ட ஆர்டர்களை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.150 தள்ளுபடியும் கிடைக்கும். இதுதவிர்த்து ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ க்ளவுட் (JioCloud) உள்ளிட்ட ஜியோ ஆப்களுக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கும்.
ஜியோ நிறுவனம், ஜனவரி 31 ஆம் தேதிக்கு பின்னர் இந்த திட்டத்தை நிறுத்த உள்ளது. ஜியோவின் இந்த பிளான் ஆபர் முன்பு டிசம்பர் 11 முதல், ஜனவரி 11, 2025 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ஜனவரி 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே இந்த பிளானை ரீசார்ஜ் செய்ய முடியும் என்பதால், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. நாடு முழுவதும் சுமார் 49 கோடி வாடிக்கையளர்கள். ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு அடுத்த இடங்களில் தான் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆகியவை உள்ளன.












Click it and Unblock the Notifications