தனிக்காட்டு ராஜாவாக மாஸ் காட்டும் ஜியோ.. இந்த விலைக்கு 5ஜி டேட்டா யாரும் தரமுடியாது! சூப்பர் பிளான்!
சென்னை: ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 349 பிளான்களுக்கு மேல் தான் 5ஜி அன்லிமிட்டட் டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இந்நிலையில், குறைந்த விலையில் அதாவது 200 ரூபாய்க்குள் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை வழங்கும் பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது ஜியோ. இதன் வேலிடிட்டி குறைவு என்றாலும், 5ஜி டேட்டாவை மலிவு விலையில் தருவதால் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. இதனை தொடர்ந்து பிற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின.

வாடிக்கையாளர்களை குஷியாக்கும் ஜியோ: இதனால் செல்போன் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பலர் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கிற்கு மாறினர். இந்நிலையில், வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த பல புதிய பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது ஜியோ. அந்தவகையில் தற்போது குறைந்த விலையில் 5ஜி இணைய சேவை அளிக்கிறது ஜியோ.
அதாவது அன்லிமிடெட் 5G நன்மையை 239 ரூபாய் அல்லது அதற்கு அதிகமான விலை கொண்ட ரீசார்ஜுக்கு மட்டுமே வழங்கி வந்த ஜியோ, இப்போது 200க்கும் குறைவான திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 5G நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.
ஜியோவின் 198 ரூபாய் பிளான்: ரிலையன்ஸ் ஜியோவின் 198 ரூபாய் திட்டமானது 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 SMS ஆகியவை இலவசமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் தினசரி 2 GB டேட்டா மட்டுமல்லாமல் இதில் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் அனுபவிக்கலாம்.
இலவச 5ஜி: இந்த அன்லிமிடெட் 5G பலன்களை MyJio ஆப் மூலம் பெறலாம். இந்த பிளானின் வேலிடிட்டி 14 நாட்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். நீங்கள் 5G அனுபவத்தை சோதனை செய்ய விரும்பினால் இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும். அதாவது 5G இண்டர்நெட்டை இலவசமாக பெற மற்ற நெட்வொர்க்குகளில் ரூபாய் 350 க்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ள நிலையில், ஜியோவில் குறைந்த விலையில் இதை பெறலாம்.
மேலும் இந்த பிளானுடன் ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (JioTV) ஆப்களை பயன்படுத்த முடியும். ஆனால், பிரீமியம் சலுகைகள் கிடைக்காது. இருப்பினும், லைவ் கிரிக்கெட் போட்டிகளை காணலாம் மற்றும் குறிப்பிட்ட டிவி ஷோக்களை பார்த்து ரசிக்க முடியும்.
ரூ. 349 பிளான்: இதற்கு அடுத்தடியாக ரூ.349 விலையில் மாதம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை வழங்கும் திட்டம் இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும். ரூபாய் 198 பிளானில் இருப்பது போலவே மற்ற அனைத்து சலுகைகளும் உள்ளன. இந்த திட்டத்தில் வேலிடிட்டி மட்டும் 14 நாட்களுக்கு பதிலாக 28 நாட்களுக்கு கிடைக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications