ஒரே பிளான்.. குடும்பத்தில் 4 பேர் பயன்பெறலாம்.. ஜியோ வழங்கும் சூப்பரான 2 போஸ்ட்பெய்டு திட்டங்கள்!
சென்னை: ஒரே பிளானில் குடும்பத்தில் உள்ள 4 நபர்கள் பயன்பெறும் வகையிலான அசத்தலான பிளான்களை கொண்டுள்ளது ஜியோ. இந்த போஸ்ட்பெய்டு பிளான்களில் ஒரு குடும்பமே அன்லிமிட்டெட் கால்ஸ், அதிக அளவிலான டேட்டா மற்றும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வசதிகளை பெறலாம். ஜியோவின் சூப்பரான 2 ஃபேமிலி போஸ்ட்பெய்டு பிளான்களை பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. நாடு முழுவதும் சுமார் 49 கோடி பேர் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு அடுத்த இடங்களில் தான் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆகியவை உள்ளன.

ஜியோ
ஜியோ அதன் பயனர்களின் வெவ்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு வகையான பிளான்களை வழங்கி வருகிறது. அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா, ஒடிடி பலன்கள் என பல்வேறு வகையான வெவ்வேறு பலன்களுடன் வருகின்றன. ஒரே ரீசார்ஜில் குடும்பத்தில் உள்ள 4 பேர் பயன்படுத்தும் பிளானும் உள்ளது. இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில், குடும்பத்தில் உள்ள 4 பேரும் ஒரே ரீசார்ஜ் திட்டத்தின் முலம் பயனை அடையலாம். இந்த பிளானில் கூடுதலாக 3 சிம் கார்டுகள் கிடைக்கும்.
கூடுதல் சிம் கார்டுகளை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் பயன்படுத்தலாம். ஜியோவின் இரண்டு ஃபேமிலி மொபைல் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை ரூ.449 மற்றும் ரூ.749. இந்த பிளான்கள் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும். இந்த பிளான்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
ரூபாய் 449 ஃபேமிலி பிளான்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமானது அதிகபட்சம் 3 கூடுதல் ஃபேமிலி சிம்களுடன் வருகிறது. கூடுதல் ஃபேமிலி சிம் ஒவ்வொன்றும் செயல்படுத்தப்படும் போது மாதத்திற்கு ரூ.150 கூடுதலாக வரும். முதன்மை சிம் யூசர் மொத்தமாக 75 ஜிபி மாதாந்திர டேட்டாவைப் பெறுவார். முதன்மை சிம் யூசர் உட்பட 4 பேரும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் பெறுவார்கள்.
அதோடு, கூடுதல் சிம்களுக்கு மாதம் 5 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். இந்த டேட்டா லிமிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் ஒரு கி.பி டேட்டாவுக்கு ரூபாய் 10 கூடுதலாக பில் வரும். இதில், அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவும் இலவசமாக கிடைக்கும். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சப்ஸ்கிரிப்ஷன்களும் இலவசம்.
அதாவது இந்த பிளானில் உங்கள் குடும்பத்தில் 4 பேர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மொத்தமாக ரூபாய் 899 கட்டணம் வரும். 4 பேருமே அன்லிமிட்டெட் கால்ஸ், தினசரி 100 எஸ்.எம்.எஸ், ஜியோ சினிமா உள்ளிட்ட சேவைகளோடு, மொத்தமாக 90 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 5ஜி டேட்டா அன்லிமிட்டட் இலவசம்.
ரூபாய் 749 ஃபேமிலி பிளான்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமானது அதிகபட்சம் 3 கூடுதல் ஃபேமிலி சிம்களுடன் வருகிறது. கூடுதல் ஃபேமிலி சிம் ஒவ்வொன்றும் செயல்படுத்தப்படும் போது மாதத்திற்கு ரூ.150 கூடுதலாக வரும். முதன்மை சிம் யூசர் உட்பட 4 பேரும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தமாக 100 ஜிபி மாதாந்திர டேட்டாவைப் பெறுவார்கள்.
அதோடு, கூடுதல் சிம்களுக்கு மாதம் 5 ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். இந்த டேட்டா லிமிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் ஒரு கி.பி டேட்டாவுக்கு ரூபாய் 10 கூடுதலாக பில் வரும். இதில், அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவும் இலவசமாக கிடைக்கும். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சப்ஸ்கிரிப்ஷன்களும் இலவசம்.
இவற்றோடு கூடுதலாக , நெட்ஃப்ளிக்ஸ் (பேசிக்) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும், அமேசான் ப்ரைம் லைட் சப்ஸ்கிரிப்ஷன் இலவசம். அமேசான் ப்ரைம் லைட் சப்ஸ்கிரிப்ஷன் 2 வருடங்களுக்கு இலவசமாக கிடைக்கும். இந்த பிளானின் கட்டணம் ரூபாய் 749. கூடுதலாக ஒவ்வொரு சிம்முக்கும் ரூ. 150.
அதாவது இந்த பிளானில் உங்கள் குடும்பத்தில் 4 பேர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மொத்தமாக ரூபாய் 1199 கட்டணம் வரும். 4 பேருமே அன்லிமிட்டெட் கால்ஸ், தினசரி 100 எஸ்.எம்.எஸ், ஜியோ சினிமா உள்ளிட்ட சேவைகளோடு, மொத்தமாக 115 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதோடு, 5ஜி டேட்டா அன்லிமிட்டட் இலவசம். நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் சந்தா கூடுதல் போனஸ்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications