ஏர்டெல், வோடஃபோன்லாம் ஓடுங்க.. ஜியோவின் மாஸான 365 நாள் ரீசார்ஜ் பிளான்! 2.5 GB டேட்டா+ ஓடிடி இலவசம்!
சென்னை: ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்களை கதி கலங்கச் செய்யும் வகையில் சூப்பரான ஒரு ஆனுவல் ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ. அதிக டேட்டாவோடு, இலவச ஓடிடி சந்தாவும் வழங்குவதுதான் இதன் ஸ்பெஷல்.
இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மற்ற டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா போன்றவற்றை கதிகலங்கச் செய்யும் வகையில், அவ்வப்போது புதிதாக பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலையில், அதிக டேட்டாவுடன் ஒரு சூப்பரான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது ஜியோ.

3,662 ரீசார்ஜ் பிளான் விவரம்: அதாவது, ஒரு வருட அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 2.5 ஜி.பி டேட்டாவுடன் ஆண்டு முழுமைக்குமான ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது ஜியோ. இதன் விலை ரூ.3,662. ஆண்டு முழுவதும் மாதா மாதம் ரீசார்ஜ் செய்வதில் உள்ள தொந்தரவைத் தவிர்த்து, அதிக டேட்டாவைப் பயன்படுத்த விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு மிகச்சிறந்த சாய்சாக இருக்கும்.
ஜியோவின் 3,662 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு வருடம் ஆகும். இந்த திட்டத்தில், யூசர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள். இந்த பிளானில் தினசரி 2.5 ஜி.பி டேட்டா என ஒட்டுமொத்தமாக 365 நாட்களுக்கு 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் யூசர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெறுவார்கள்.
வரப்பிரசாதம்: இவற்றோடு இந்த பிளானில் ஒரு வருடத்திற்கு SonyLIV மற்றும் ZEE5 ஓடிடி தளங்களின் சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், JioCinema, JioCloud மற்றும் JioTV போன்ற பிற OTT பலன்களும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அடங்கும். ஒரு ஆண்டுக்கு ரூ.3,662 என்பது அதிக விலையாக தோன்றினாலும், தினசரி அதிக டேட்டா பயன்படுத்தும் யூசர்களுக்கு இந்த பிளான் நிச்சயம் ஒரு வரப்பிரசாதம் தான்.
மாதா மாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாதாந்திர பிளான்களின் விலை அவ்வப்போது உயர்வது பற்றிய கவலையே தேவையில்லை. ஒரு ஆண்டு முழுவதும் நிம்மதியாக டேட்டாவை யூஸ் செய்யலாம். அதோடு கூடுதலாக இரண்டு முன்னணி ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைப்பதால், பலரும் இந்த ரீசார்ஜ் திட்டத்தைத் தேர்வு செய்து வருகின்றனர்.
மேலும் 2 பிளான்கள்: இந்த பிளான் போக, ஆண்டு முழுமைக்குமான மேலும் 2 திட்டங்களையும் வைத்திருக்கிறது ஜியோ. அதன்படி, 2,545 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் தினசரி 1.5 ஜிபி இலவச டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் + தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றைப் பெறலாம். JioCinema, JioCloud மற்றும் JioTV போன்ற பிற OTT பலன்களும் கிடைக்கும்.
அதேபோல, ரூ.2999க்கு இன்னொரு பிளான் உள்ளது. இதில் தினசரி 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆண்டு முழுவதும் நாள்தோறும் 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால் + தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றையும் பெறலாம். வழக்கம்போல JioCinema, JioCloud மற்றும் JioTV போன்ற பிற OTT அக்சஸும் இலவசமாக கிடைக்கும்.












Click it and Unblock the Notifications