கேபிள்களுக்கு செக் வைத்த ஜியோ.. இண்டர்நெட்+ ஓடிடி + 1000 சேனல்கள்.. டிஜிட்டலில் புதிய புரட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்புப் பிரிவான ஜியோ, மாதம் ரூ. 400 முதல் தொடங்கும் புதிய 3-இன்-1 ஜியோஹோம் பேக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் டிவி மட்டும், வைஃபை மட்டும், மற்றும் வைஃபை, டிவி, ஓடிடி ஆகிய மூன்றையும் சேர்த்து என மூன்று ஆப்ஷன்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய பேக்குகள் ஜியோ பயனாளிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைக்கு பலரும் ஸ்மார்ட் டிவி தான் வாங்குகிறார்கள். அப்படி வாங்குவதால், இண்டர்நெட், ஓடிடி, சேனல்கள் என மூன்றையுமே மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதில் தற்போது படிப்படியாக இண்டர்நெட், ஓடிடி மட்டும் போதும் என்கிற மனநிலைக்கு மாறி வருகிறார்கள். இவர்களை டார்க்கெட் செய்து, ஜியோ டிவி, ஓடிடி மற்றும் வைஃபைக்கான மூன்று புதிய ஜியோ ஹோம் பேக்குகளைத் தொடங்கி உள்ளது. இந்த திடடம் பயனாளர்களின் தேவைக்கேற்ப எந்த பேக் வேண்டும் என்று அவர்களே தீர்மானித்து சந்தாவை தேர்வு செய்ய முடியும்.

Jio recharge plans with 100 Mbps speed 1000 channels 3-in-1 Jio Home Packs

ஜியோ நிறுவனம் ஸ்மார்ட் டிவி விஷயத்தில் மூன்று வகையான பிளான்களை கொண்டு வந்துள்ளது

அதிக அளவிலான சேனல்கள் தேர்வுகளுடன் டிவியை மட்டும் விரும்புபவர்கள்.

டிவி சேனல்கள் மற்றும் இணையம் இரண்டையும் சேர்த்துப் பார்க்க விரும்புபவர்கள்.

ஒரே பேக்கில் டிவி சேனல்கள், வைஃபை மற்றும் ஓடிடி என அனைத்தையும் பார்க்க விரும்புபவர்கள். இந்த மூன்று பேக்கும் மூன்று விதமான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களில் ஜியோ ஃபைபர் மூலம் வழங்கப்படும் அதிவேக வைஃபை இணைப்பு, 1000க்கும் மேற்பட்ட நேரடிச் சேனல்கள் மற்றும் சன் நெக்ஸ்ட் , ஜீ5 , சோனி லிவ், ஜியோஹோட்ஸ்டார் போன்ற 12க்கும் மேற்பட்ட முக்கிய ஓடிடி தளங்கள் வழங்கப்டுகிறது. புதிய ஜியோ வைபை வாடிக்கையாளர்களுக்கு பராமரிப்பு மற்றும் புதிய இணைப்புகளுக்கு வீட்டிற்கே வந்து இலவச சேவைகளு வழங்கப்படுகிறது.

ஜியோ ஹோம் - டிவி-மட்டும் பேக் - பேஸ் பேக்

மாதக் கட்டணம்: ரூ. 400 (அல்லது 2 மாதங்களுக்கு ரூ. 1,000, 5 மாதங்களுக்கு ரூ. 2,000 எனச் செலுத்தும் தேர்வுகளும் உண்டு).

திட்டத்தின் வகை: ஜியோ ஹோம் டிவி

வரவேற்புச் சலுகை: 12 பொழுதுபோக்கு ஓடிடி செயலிகளை ஜியோ இலவசமாக வழங்கப்படுகிறது

ஜியோ ஹோம் டிவி-மட்டும் பேக்குகள் என்பது இண்டர்நெட் அல்லது வைஃபை இல்லாத அடிப்படை டிவி பேக்கேஜ்கள் ஆகும். இது 1000+ நேரலைச் சேனல்கள், 12+ இணைக்கப்பட்ட ஓடிடி ஆஃப்கள், லைவ் டிவியை இடைநிறுத்தும்/இயக்கும் வசதிகள் மற்றும் டிவியில் யூடியூப் பார்க்கும் வசதியை வழங்குகிறது.

ஜியோ ஹோம் வைஃபை-மட்டும் பேக் (இரண்டு இணைய வேக தேர்வுகள்)

இணைய வேகம்: 30 Mbps.

மாதாந்திரக் கட்டணம்: ரூ. 450 (5 மாதங்களுக்கு ரூ.(5 மாதங்களுக்கு ரூ. 2200 கட்டணம்)

மாதத்திற்கு ரூ. 450 செலவில், வீட்டில் 30 Mbps ஃபைபர் இணையத்தைப் பெறலாம். இது ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தவும், வீடியோக்களைப் பார்க்கவும் போதுமானது.

100 Mbps வேகம் (அதிக வேகம் தேவைப்படுபவர்களுக்கு):

மாதக் கட்டணம்: ரூ. 600. (மற்ற விருப்பங்கள்: 2 மாதங்களுக்கு ரூ. 1,500 அல்லது 5 மாதங்களுக்கு ரூ. 3,000).

இதில் வேகமான மற்றும் நம்பகமான 100 Mbps இணைய வேகம் கிடைக்கிறது. இது ஒரே நேரத்தில் பல சாதனங்களை இணைக்கவும், கேமர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜியோ ஹோம் வைஃபை + டிவி + ஓடிடி டாப்-டயர் பேக்

வைஃபை பேக் போலவே, இதிலும் 30 Mbps மற்றும் 100 Mbps என இரண்டு வேகத் தேர்வுகள் உள்ளன:

30 Mbps வேகம் + வைஃபை + டிவி + ஓடிடி:

மாதக் கட்டணம்: ரூ. 555. (மற்ற விருப்பம்: 3 மாதங்களுக்கு ரூ. 2,222 செலுத்தினால் + 1 மாதம் இலவசம்)

ஓடிடி ஆப்கள்: 12 ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.

இதில் வரம்பற்ற வைஃபை, 1000+ நேரலை சேனல்கள் மற்றும் 12 ஓடிடி ஆப்கள் கிடைக்கும்.

100 Mbps வேகம் + வைஃபை + டிவி + ஓடிடி :

மாதக் கட்டணம்: ரூ. 707. ( 2 மாதங்களுக்கு ரூ. 2,122 செலுத்தினால் + 1 மாதம் இலவசம்).

ஓடிடி செயலிகள்: 12 ஓடிடி கிடைக்கும்

இதில் அதிவேக 100 Mbps இண்டர்நெட் வேகம் கிடைக்கும். இதன் மூலம் ஒரே நேரத்தில் பல திரைகளில் பஃபரிங் பிரச்சனை இல்லாமல் ஓடிடி திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். மேலும் 1000+ நேரலை சேனல்கள் மற்றும் 12 ஓடிடி ஆப்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+