விலை ரூ.200 விட கம்மிதான்! ஆனா கால், டேட்டா, ஓடிடி என எல்லாமே இருக்கு! ஜியோவின் கலக்கல் பிளான்
மும்பை: இந்தியாவில் மிக முக்கிய டெலிகாம் நிறுவனமாக உள்ள ஜியோ நிறுவனம் மக்களிடையே மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும் ஒரு பேக்கை அறிமுகம் செய்துள்ளது. ரூ.200க்கு குறைவாக உள்ள இந்த பேக்கில் கால், டேட்டா, ஜியோ டிவி என ஏகப்பட்ட வசதிகள் நமக்குக் கிடைக்கும். இது என்ன புதிய ரீசார்ஜ் திட்டம் இதில் எப்படி ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் டெலிகாம் துறையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜியோ தான். அதற்கு முன்பு வரை மாதம் ஒரு ஜிபி, இரண்டு ஜிபி டேட்டாவுக்கே நாம் பெரிய தொகை கொடுக்க வேண்டி இருந்தது.

ஆனால், ஜியோவின் வருகைக்குப் பிறகு நிலைமை மாறியது. தினசரி ஒன்று அல்லது இரண்டு ஜிபி டேட்டா கூட குறைந்த கட்டணத்திற்குக் கிடைக்கிறது. இதுவே ஜியோவின் வெற்றிக்குப் பிரதான காரணமாக இருக்கிறது.
ஜியோ:
அதேநேரம் மார்கெட் கண்டிஷன்களை பொறுத்து ஜியோ நிறுவனம் அவ்வப்போது தனது திட்டங்களை மாற்றி அமைத்து வருகிறது. அப்படி மாற்றி அமைக்கும் போது தான் முன்பு மக்களிடையே பிரபலமாக இருந்த ஒரு பேக் நீக்கப்பட்டது. அந்த திட்டத்தைத் தான் ஜியோ நிறுவனம் மீண்டும் கொண்டு வந்துள்ளது. இது ஜியோ வழங்கும் மிகக் குறைந்த திட்டங்களில் ஒன்றாகும்.
சலுகைகள் என்ன:
இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.189க்கு ரீசார்ஜ் செய்தால் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால்கள், 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இது தவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சந்தாவும் இலவசமாகக் கிடைக்கும். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தை மை ஜியோ செயலியில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.
ஜியோவில் ஏற்கனவே இந்தத் திட்டம் அமலில் இருந்தது. பட்ஜெட் விலையில் ரீசார்ஜ் செய்வோருக்கு ஏற்ற திட்டமாக இது இருந்தது. ஆனால், டிராய் உத்தரவின் பெயரில் கால் ஒன்லி திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்திய போது, இந்த ரூ.189 பேக் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஜியோ நிறுவனம் மீண்டும் அந்த பேக்கை கொண்டு வந்துள்ளது.
இந்த பிளானில் ரீசார்ஜ் செய்வது எப்படி:
முன்பே குறிப்பிட்டது போல இதை மை ஜியோ செயலியில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். வேறு எந்த தளத்திலும் இந்த பேக்கில் ரீசார்ஜ் செய்ய முடியாது. ஜியோ செயலியில் Affordable Packs என்ற பிரிவின் கீழ் இந்த பேக் இருக்கிறது. டேட்டாவுடன் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்கு இந்த பிளான் உதவும். ஜியோவில் ரூ.448, ரூ.1,748 என மற்ற பேக்குகளில் ரீசார்ஜ் திட்டம் இருந்தாலும் டேட்டா பலன்கள் எதுவும் கிடைக்காது. ஆனால், இந்த ரூ.198 பேக்கில் கால் உடன் டேட்டாவும் கிடைப்பதே இதன் சிறப்பாகும்.
முக்கிய வசதி:
இந்த பேக்கில் மற்றொரு முக்கிய வசதியும் இருக்கிறது. அதாவது இதில் வரும் 2ஜிபி டேட்டாவை நீங்கள் காலி செய்துவிட்டால்.. ஆட்-ஆன் மூலம் கூடுதலாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். நடப்பு ரீசார்ஜ் சைகிள் முடியும் வரை இதுவே உங்களுக்கு போதுமானதாக இருக்கும். ஜியோவை நீங்கள் இரண்டாவது சிம்மாக யூஸ் செய்கிறார்கள் என்றால் உங்களுக்கு இந்த பேக் சரியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications